சனிகோள் பற்றிய வியப்பான உண்மைகள் 10 interesting facts about saturn

                   FACTS ABOUT SATURN

இன்றைய பதிவில் நம் சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கிரகமான சனிக்கோளை பற்றி இதுவரை நீங்க் கேட்டிராத வியப்பான உண்மைகளை பற்றி காண்போம்.

வெறும் கண்ணால் பார்ககூடிய கிரகம்

facts about saturn in tamil
சனி கிரகத்தை நம்மால்  வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய மிக பெரிய கிரகம். இது சூரிய மண்டலத்தில் ஐந்தாவது பிரகாசமானகோளாகும்  மேலும்  இந்த சனிக்கோளானது  தொலைநோக்கி அல்லது சிறிய தொலைநோக்கி மூலமாகவும் எளிதாக ஆய்வு செய்யப்படுகிறது.

பெயர்காரணம்

வழக்கம்போல் சனிகிரகத்திற்கும் ரோமானிய கடவுளின் பெயரே சூட்டப்பட்டுள்ளது, கிரேக்கத்தில் உள்ள கிரேக்க கடவுளான கரோனஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சனிகிரகத்தின் ஒருநாள்

சனி தட்டையான கிரகம். எனலாம் ஏனெனில் அதன் துருவ பகுதி 90% ஆகும்,  அதன் குறைந்த அடர்த்தி மற்றும் வேகமான சுழற்சி காரணமாக. சனி கிரகமானது  10 மணிநேரம் மற்றும் 34 நிமிடங்களில் ஒரு நாளை நிறைவு செய்கிறது, இதுதான் சூரிய மண்டலத்தின்  இரண்டாவது குறுகிய நாளாக உள்ளது.

சனிகிரகத்தில் ஒருவருடம்

சனிகிரகம்

சனி கிரகம் தன்னைதானே வேகமாக சுற்றினாலும் சூரியனை முகவும் மெதுவாக சுற்றி வருகிறது சனி கிரகத்தில் ஒரு வருடம் என்பது நம் பூமியில் 29.4 வருடங்கள் ஆகும்.

சனிகிரகத்தின் புயல்

சனி கிரகம் பற்றிய உண்மைகள்
சனிகிரகம்  வியாழனைப் போன்ற ஓவல் வடிவ புயல்களைக் கொண்டுள்ளது.
அதன் வட துருவத்தைச் சுற்றியுள்ள பகுதி அறுகோண வடிவிலான மேகங்களைக் கொண்டுள்ளது. இது மேகங்களின் ஒரு வித்தியாசமான  வடிவமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கிரகம் அதன் தென் துருவத்தில் ஒரு மிகப்பெரிய  சூறாவளியைக் கொண்டுள்ளது.

சனிகிரகத்தின் வளையம்

சூரிய மண்டலத்தில் சனியானது மிக பெரிய வளையங்களைக் கொண்டுள்ளது. சாட்டர்னியன் வளையங்கள் என்று அழைக்கப்படும் இவை  பெரும்பாலும் பனிக்கட்டி மற்றும் சிறிய அளவு கார்பனேசிய தூசியால் ஆனவை. இந்த வளையங்கள் சனி கிரகத்திலிருந்து 120,700 கிமீ தூரத்திற்கு நீண்டுள்ளன, ஆனால் அதிசயமாக மிகவும் மெலிசானவை இவற்றின் தடிமன் 20 மீட்டர் மட்டுமே.

சனியின் நிலவுகள்

saturn
சனியானது தன்னிடத்தில்  150 நிலவுகளை கொண்டுள்ளது இதுதான் சூரியகுடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகம் . இவை அனைத்தும்
 உறைந்த நிலவுகள் எனலாம் ஆம் அவை ஒரு மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டி. சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவுகள் டைட்டன் மற்றும் ரியா. என்கிலிதியஸ்  அதன் உறைந்த மேற்பரப்புக்குக் கீழே ஒரு கடல் இருப்பதாக ஆய்வாளர்கள் சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

சனிகிரகத்திற்கு சென்ற முதல் விண்கலம்

இதுவரை சனி கிரகத்தை நான்கு விண்கலங்கள்சென்று ஆய்வு செய்துள்ளன.
பியோனர் 11, வாயேஜர் 1 மற்றும் 2, மற்றும் காசினி-ஹியூஜென்ஸ் பணி அனைத்தும் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டன. காசினி ஜூலை 2004 முதல் செப்டம்பர் 2017 வரை சனியைச் சுற்றி வந்தது, இந்த செயற்கைகோள் ஆனது  சனிகிரகத்தின்  நிலவுகள் மற்றும் வளையங்கள் பற்றிய ஏராளமான தகவல்களை அனுப்பியது.

சனியின் உட்பகுதி

saturn

சனி கிரகத்தில் உங்களால் நிற்க முடியாது ஏனெனில் சனிகிரகம் முழுவதும் வாயுக்களால் ஆனது அங்கு அதிகப்படியான ஹீலியம் வாயுக்கள் நிரப்பப்படுகின்றன. 

சனிகிரகத்தின் மழை

சனிகோள் பற்றிய உண்மைகள்

சனிகிரகத்தில் அதிகப்படியான மின்னல் காரணமாக அங்குள்ள மீத்தேன் ஆனது கார்பனாக மாற்றப்பட்டு பின்னர்  வைரமாக மாறுகிறது இதன் காரணமாக அங்கு மழையானது வைரமாக பொழிகிறது.

                                                                            நன்றி!