why ocean water is salty

காலநிலை மாற்றத்தால் பாதிக்கபடும் பத்து நாடுகள் top 10 countries affected by climate change in tamil

 top 10 countries affected by climate change காலநிலை மாற்றத்தால் பாதிக்கபடும் 10 நாடுகள்

வணக்கம் நண்பர்களே!

top 10 countries affected by climate change
source-pixabay

இன்றைய பதிவில் நாம் காலநிலை மாற்றத்தால் அதிகளவு பாதிப்புகளை சந்திக்கும் 10 நாடுகள் பற்றி காண்போம்(TOP 10 COUNTRIES AFFECTED BY CLIMATE CHANGE)

காலநிலை மாற்றம் என்றால் என்ன?(what is climate change?)

பல மில்லியன் ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நடைபெற்ற காலநிலைகளில் ஏற்படும் மாறுதல்களே காலநிலை மாற்றங்கள் என்று கூறப்படுகிறது.இது நடைபெறுவதற்கு காரணம் நாம் தான் அதிகபடியான மாசுக்களை  வெளியேற்றுவதால் பூமியின் வெப்பநிலை உயரும்ஓசோன் பனிபிரதேசம் மற்றும் பருவமழை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்  இதைதான் நாம்  காலநிலை மாற்றம்(climate change) என அழைக்கிறோம்.

இந்த TOP 10-வரிசை காலநிலை மாற்றம் குறியீட்டின் (CLIMATE RISK INDEX)-ன் மூலம் வரையறுக்கப்படுகிறது. இதனை ஜெர்மனியை சேர்ந்த (GERMAN WATCH) -நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

1.JAPAN(ஜப்பான்)-(climate risk index-5.5)

japan climate change
இந்த காலநிலை மாற்றத்தால் அதிகளவு பாதிப்புகள் மற்றும் பேரழிவுகளை சந்திக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்.இங்கு பெரியளவில் பூகம்பம் மற்றும் வெள்ளம், பெரும் சூறாவளி போன்ற நிகழ்வுகளால் ஆண்டுதோரும் பேரழிவுகளை சந்தித்துள்ளது.இதன் காரமாக  அந்த நாட்டின்  மொத்த பொருளாதாரமே பின்தங்கியுள்ளது.இதனால் ஒவ்வொரு வருடமும் அங்கு வாழும் மக்கள் நிறைய சவால்களை சந்திக்க ஆளாகின்றன.

2.பிலிப்பைன்ஸ்(PHILIPINES-RISK INDEX-11.17)

காலநிலை மாற்றத்தால்  பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடாவருடம் அதிகளவு மழைப்பொழிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக பேரழிவுகளை சந்தித்து வருகிறது இது அங்குள்ள மக்களுக்கு ஒரு வித அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவாகும் மிகப்பெரிய புயல்கள் இந்த பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்டுதோறும் தாக்குகின்றன.

3.ஜெர்மனி(GERMANY – RISK INDEX-13.83)

இந்த காலநிலை மாற்றத்தால் ஜெர்மனியில் இதுவரை வரலாறு காணாத வகையில் சூடான  மற்றும் வெப்பமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்குள்ள மக்க் வித்தியாசமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கிறது

4.மடகாஸ்கர்(MADAGASKAR- RISK INDEX -15.83)

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான MADAGASKAR-ல் இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏராளமான வன உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இன்றும் பல உயிர்கள் அழிந்து வருகின்றன. கடுமையான வறட்சி மற்றும் பெருவெள்ளம் காரணமாக உயிரினங்கள் வருடாவருடம் செத்து மடிகின்றனர்.

5.இந்தியா(INDIA-RISK INDEX-18.17)

ஆசியாவின் துணைகண்டமான இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான பஞ்சம் வெள்ளம் மற்றும் பெரும் புயல்கள் ,புளுதி புயல்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெருவெள்ளம் புயல்களால மட்டுமே இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

6.இலங்கை(SRI LANKA-RISK INDEX-19)

காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கையில் வருடத்திற்கு 40 பேர் உயிரழக்கின்றனர் .இது மட்டுமல்லாமல் பெரும் இயற்கை பேரிடர்களும் வெள்ள பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது.

7.கென்யா(KENYA-RISK INDEX-19.67)

கென்யாவில் பருவநிலை மாற்றத்தினால் கடுமையான வறட்சி காரணமாக  உயிரழப்புகள் ஏற்படுகின்றன.இந்த கொடிய வறட்சி காரணமாக 2018-ஆம் ஆண்டு மட்டும் 113 பேர் உயிரழந்துள்ளனர். இந்த இறப்புகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருகிறது என ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

8.ருவாண்டா(RUANDA – RISK INDEX-21.17)

இந்த சிறிய ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவே பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது.இங்கு காட்டுதீயின் காரணமாகவே பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

 9.கனடா (CANADA- RISK INDEX – 21.83)

CANADA-வில் இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக அங்கு காலநிலை வேகமாக  வெப்பமடைகிறது இதனால் பனிப்பாறைகள் உருகி அழிவை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி வரலாறுகாணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது.

10 . பிஜி தீவுகள்(FIJI- RISK INDEX-22.5)

காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த பிஜி தீவுகூட்டங்கள் பயங்கரமான சூறாவளிகளால் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்டில் பல்வேறு மக்கள் தங்கள் உடைமைகளை இழக்கின்றன. நாம் வெளியேற்றும் கார்பன் துகள்கள் காரணமாக பூமியின் வெப்பநிலை உயரும் இதன் காரணமாகவே காலநிலை மாற்றம்(climate change) ஏற்படுகிறது.
                                                          THANK YOU!

                       WATCH ON YOUTUBE