கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பது எப்படி – பயனுள்ள டிப்ஸ் இதோ

உங்கள் வெளிப்புற இடத்தை புத்துயிர் பெற எளிய தோட்ட அலங்கார யோசனைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு சுவரை வரைந்தாலும் அல்லது உங்கள் உள் முற்றத்தில் கவர்ச்சிகரமான துண்டுகளைச் சேர்த்தாலும், தோட்ட அலங்காரமானது உங்கள் பகுதிக்கு வண்ணத்தையும் ஆளுமையையும் தருவது உறுதி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மாதாந்திர பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நமக்கு இது கூடுதல் சுமையாக அமையும். என்ன செய்வது வெயில் ஒருபுறம் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கையில் நம்மால் குளு, குளு சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. குறிப்பாக, இருப்பதிலேயே உங்கள் ஏசி தான் மிக அதிகமான மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். அதே சமயம், வெயிலைத் தாக்குப் பிடிக்க முடிந்த அளவு மட்டும் குளுமையை எதிர்பார்த்தீர்கள் என்றால் நிச்சயமாக மின்சாரத்தை சேமிக்க முடியும்.

கோடை காலம் வந்து விட்டாலே வீட்டில் ஃபேன், ஃபிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர் போன்ற குளு, குளு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து விடும். இதன் விளைவாக மின் கட்டணமும் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக வரும். ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மாதாந்திர பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நமக்கு இது கூடுதல் சுமையாக அமையும்.

ஆனால், என்ன செய்வது வெயில் ஒருபுறம் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கையில் நம்மால் குளு, குளு சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. குறிப்பாக, இருப்பதிலேயே உங்கள் ஏசி தான் மிக அதிகமான மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். அதே சமயம், வெயிலைத் தாக்குப் பிடிக்க முடிந்த அளவு மட்டும் குளுமையை எதிர்பார்த்தீர்கள் என்றால் நிச்சயமாக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதாவது, ஏசியை 16 டிகிரியில் வைப்பதற்குப் பதிலாக 24 டிகிரியில் வைத்தீர்கள் என்றால், உங்களுக்கு தேவையான குளுமையும் கிடைக்கும், அதே சமயம், மின்சாரக் கட்டணத்தையும் குறைக்கலாம்.

எல்ஈடி பல்புகள்: வீட்டில் பல விதமான பல்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவற்றையெல்லாம் விட எல்ஈடி பல்புகள் நமக்கு பலன் தரக் கூடியவை. அதாவது, மற்ற பல்புகளைக் காட்டிலும் இதன் மின்சார தேவை 90 சதவீதம் அளவுக்கு குறைவானது. ஆகவே, வீட்டில் எல்ஈடி பல்புகளை பயன்படுத்த முன்னுரிமை கொடுங்கள். அதற்காக வீட்டில் உள்ள அனைத்து பல்புகளையும் ஒரே நாளில் மாற்றிவிட வேண்டும் என்பது கிடையாது. பயன்படுத்தி முடித்த, பழைய பல்புகளை நீங்கள் புதுப்பிக்கும் போது எல்ஈடி பல்புகளுக்கு மாறிக் கொள்ளலாம்.

ஸிவிட்ச் ஆஃப் செய்யுங்கள்: நம்மில் எல்லோரிடமும் இந்தப் பழக்கம் இருக்கும். டிவி பார்த்து முடித்த பிறகு, அதை ரிமோட்டில் ஆஃப் செய்து விட்டு அப்படியே விட்டுவிடுவோம். அதேபோல, ஃபோன்களுக்கு சார்ஜ் செய்த பிறகு சார்ஜருக்கு செல்லும் மின்சாரத்தை நாம் ஆஃப் செய்வதில்லை. எந்தவொரு மின் சாதனமும் ‘ஸ்டாண்ட் பை’ ஆப்சனில் இருக்கும்போது கொஞ்சம் மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கும். அந்த வகையில் உங்கள் மின் கட்டணத்தில் இது 5 சதவீதம் வரை இருக்கலாம்.

உங்கள் ஏசி யூனிட் நிழலில் இருக்க வேண்டும்: வீட்டிற்கு வெளிப்புறத்தில் உள்ள ஏசி அவுட்டோர் யூனிட் நேரடி வெயிலில் இருந்தது என்றால் சற்று மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும். அதுவே, அதனை நீங்கள் நிழலில் இருக்கும்படி அதை சுற்றியிலும் மரம் வளர்த்தீர்கள் என்றால், அது ஓரளவுக்கு பயன் கொடுக்கும்.

அயர்ன் பாக்ஸ்: பெரும்பாலும் ஆட்டோமேட்டிக் ஹீட் கட் ஆஃப் வசதி கொண்ட அயர்ன் பாக்ஸ் வாங்கினீர்கள் என்றால், மின்சார கட்டணத்தை கொஞ்சம் சேமிக்க முடியும். துணி காய்ந்து நல்ல சூடாக இருக்கும் சமயத்தில் அயர்ன் செய்தீர்கள் என்றாலும், உடனடியாக அவை அயர்ன் ஆகி விடும். இதனால், மின்சாரத்தை சேமிக்கலாம்.

காற்றோட்டமான இடத்தில் ஃபிரிட்ஜ்: ஃபிரிட்ஜ் காற்றோட்டம் இல்லாமல் அடைத்து வைத்த பகுதியில் இருந்தால், மிகுந்த சிரமத்துடன் வேலை செய்து கூலிங் கொடுக்கும். ஆகவே மின் கட்டணம் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க அதை காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.