
தங்கம் என்பது ஒரு உலோகம் ஆகும். நம் அனைவரின் வாழ்விலும் தங்கம் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். தங்கம் ஏன் மிகவும் விலை அதிகமாக உள்ளது என்றால் தங்கம் நம் பூமியில் உள்ள அதிக விலைமதிப்பு உடைய பொருள்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இது இப்படி கருத காரணம் என்ன இதுபோன்ற தங்கம் பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
தங்கம்-gold

நம் பூமியில் 2.44 லட்ச மெட்ரிக் டன்ஸ் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இரும்பு மற்றும் மற்ற உலோகங்கள் தங்கத்தினை விட அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. அதாவது தங்கம் குறைந்த அளவு வெட்டிஎடுக்கப்படுவதனாலே இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது.மேலும் இதனுடைய மஞ்சள் நிறம் கூட இதனின் முக்கிய அம்சமாகும். இதுமட்டுமின்றி இதனை அணிவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
தங்கத்தின் தன்மை

தங்கத்தை ஆபரணங்கள் செய்யவும் பல தங்க காசுகளாகவும் செய்து பயன்படுத்து கின்றனர். பழங் காலத்தில் இதனை காசுகளாகவும் சிலை செய்தும் தங்கத்தினை பயன்படுத்தினர் .தங்கம் ஒரு சிறந்த வெப்ப கடத்தியாக உள்ளது.இது வெப்பத்தினையும் மின்சாரத்தையும் நன்கு கடத்த வல்லது.இதனை காற்றில் வைத்தால் இதன் நிறம் மங்காது அதிமட்டுமில்லாமல் இது இரும்பை போல திருப்பிடிக்காது. இது எப்பொழுதுமே பளபளப்புடன் இருக்கும்.தங்கம் விண்வெளி உடையிலும், வெப்ப தடுப்புகளிலும் ,சூரிய கண்ணாடிகளிலும் பயன்படுகிறது.
தங்கத்தின் மதிப்பு

தங்கம் உலோகமாக கருதப்படுவதால் இதனை அளக்க கேரட் என்ற அலகால் அளக்கப்படுகிறது. இதில் 24 கேரட் என்பது சுத்த தங்கமாகும். இதில் நச்சு தன்மை கிடையாது. 24 கேரட் தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியாது. 22 கேரட் முதல் 9 வரை மட்டுமே ஆபரணம் செய்ய முடியும் . 22 கேரட் என்பது 91.6 தங்கமும் 8.4 % செம்பு ,வெள்ளி போன்ற மற்ற உலோகம் சேர்ந்ததாகும்.சேர்க்கப்படும் உலோகங்களுக்கு ஏற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கும்.தூய தங்கம் ஓவ்வாமையை ஏற்படுத்தும் ஆனால் இதனை மற்ற உலோகங்களுடன் கலந்து இருப்பதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.தூய்மையான தங்கத்தில் ஆபரணம் செய்தால் உறுதியாக இருக்காது . இதனுடன் மற்ற உலோகம் சேர்த்தால் மட்டுமே உறுதியாக இருக்கும்.
தங்கம் சிறப்புடையது

தங்கம் எல்லா உலோகங்களை விட அதிக மதிப்புடையது.இது நாம் 3000 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் தங்கத்தில் எழுதி வைத்திருந்தது இப்போதும் நமக்கு அழியாமல் கிடைக்கிறது .நாம் தங்கத்தில் எதாவது எழுதி வைத்தால் பல ஆண்டுகளுக்கு அழியாமல் அப்படியே இருக்கும். இதன் காரணமாக கூட தங்கம் அதிக மதிப்புதக்கதாக உள்ளது. இதனுடைய மதிப்பு காரணமாக ஏலியன் அதாவது வேற்றுகிரக வாசிகள் கூட தங்கத்தினை எடுக்க நம் பூமிக்கு வந்திருப்பதாக அறிவியலாளர் கூறுகிறார்கள் .ஏனென்றால் இந்த தங்கத்தினை அதிக அளவு விண்வெளியிலே பயன்படுத்துகின்றனர். அதாவது விண்வெளி மையத்திலும் ,விண்வெளி உடையிலும் அதிக அளவு தங்கம் தான் பயன்படுத்தப்படுகிறது.
தங்கம் வேற்றுகிரக விண்கல்

தங்கமானது பூமியில் உருவானது அல்ல. அதாவது தங்கம் பூமியில் உருவானதில்லை. பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு தங்க கிரகம் வெடித்து சிதறியது .அந்த கிரகம் வெடிப்பிலிருந்து வந்த ஒரு வெடிப்பு பூமி மீது விழுந்தது . அந்த வெடிப்பிலிருந்து வந்த தங்கமே நமது பூமி முழுவதும் பரவி உள்ளது .எனவே ஒரு வெடிப்பின் மூலம் வந்ததே தங்கம் ஆகும் .
தங்கத்தின் சிறப்பு

Realted : நீங்கள் அறியாத உளவியல் உண்மைகள் unknown psycholgy facts in tamil
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?