தூங்க வேண்டும்

எப்படி தூங்க வேண்டும் how to sleep in tamil

வணக்கம்! நம் வாழ்வில் நாம் அனைவருக்கும் முக்கியமான ஒன்று தூக்கம் என்று கூறலாம் இதை நம் வாழ்வில் எவராலும் தவிர்க்க முடியாது ஆனால் ஒரு சிலருக்கோ என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என கூறுவார்கள் ஏனெனில் அவர்கள் அப்படிபட்டவர்கள் ஒரு சில தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது எனவே இன்றைய பதிவல் எப்படி தூங்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

நன்றாக சாப்பிடவும்

எப்படி தூங்க வேண்டும்

எப்போதும் படுக்கைக்கு செல்லும்போது சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது ஏனெனில் உங்கள் வயிற்றில் இருக்கும் அமிலம் எதிர்வினையாற்றக்கூடியது. அதுபோல ஹெவியான உணவுகளையும் தவிர்க்கவும் இவை இரவில் உங்களுக்கு செரிமான கோளாறை ஏற்பகடுத்தும்.தூங்க செல்வதற்கு முன்னால் ஆல்கைஆல் மற்றும் காஃபின் போன்றவை எடுத்துகொள்ளக்கூடாது இது உங்களின் தூக்கத்தை சீர்குலைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி விடும்.

நேரத்தை ஒதுக்க வேண்டும்

எப்படி தூங்க வேண்டும்

பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு அதிகம்நேரம் ஒதுக்கவதே இல்லை இதுவே அவர்களுக்கு மனசோர்வு மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்திவிடும். எனவே அனைவரும் கண்டிப்பாக 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் படுக்கைக்கு சென்று 20 நிமிடங்களுக்கு மேலாக நீங்கள் தூங்கவில்லை என்றால் படுக்கை விட்டு வெளியே சென்று ஏதாவது ஒரு வேலையை செய்யவும் அல்லது உங்களுக்கு பிடித்த பாடலை கேட்கவும் இப்படி செய்யும்போது உங்களுக்கு ஒரு வித கலைப்பை ஏற்படுத்தி ந்ம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

பகலில் தூங்க கூடாது

sleep

பெரும்பாலானவர்கள் பகல் வேலையிலே நீஈண்ட நேரம் தூங்கிவிடுகிறார்கள் இதன் காரணமாக அவர்களுக்கு இரவில் தூக்கம் வர தாமதமாகிறது எனவே பகலில் அதிகபட்சம் 30 நிமிங்களுக்க மேல் தீங்க வேண்டாம் அப்படி தூங்கும்போது உங்கள் உடல் அனைறைய நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும். எனவே பகல் வேளையில் தூங்குவதை நிறுத்திகொள்ளவும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

excercise sleep

தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் மனதிற்கும் உடலிற்கும் வலிமை சேர்க்கும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

கவலையுடன் செல்லாதீர்கள்

mental depression மன அழுத்தம்

படுக்கைக்கு செல்லும்போது ஒருபோதும் கவலையுடன் செல்லகூடாது இது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்காது எனவே உங்களுக்கு ஏதேனும் கவலைகள் மன உளைச்சல் பிரச்சனைகள் இருந்தால் அதனை ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு இதனை நாளை பார்த்துகொள்ளலாம் என எழுதி தூங்க . இல்லையெனில் தூங்குவதற்கு முன் தியானம் செய்யுங்கள்.

பாட்டு கேளுங்கள்

இசை கேட்டால் தூக்கம் வரும்

எப்போதும் இசை என்பது உங்களின் தூக்கத்தை மேம்படுத்தும் எனலாம் சமீபத்திய ஆய்வுகளின்படி பாடல் கேட்டு தூங்கும் நபர்கள் மற்றவர்களைவிட நிம்மதியான தூக்கத்தை பெறுகிறார்கள். அப்படி இல்லையென்றால் மிகவும் அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு படுக்கவும்.

உணவுமுறை முக்கியம்

bellyfat

உறங்கும் முன் உண்ணும் உணவுகள் உங்களின் உறக்கத்தைப் பாதிக்கும். உதாரணமாக, அதிக கார்ப் உணவுகள் தூக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் உங்களை வேகமாக தூங்கச் செய்யும் என்றாலும், அது நிம்மதியான தூக்கமாக இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக, அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கும்

நீங்கள் இன்னும் இரவு உணவிற்கு அதிக கார்போஹைட்ரேட் உணவை உண்ண விரும்பினால், படுக்கைக்கு செல்வதற்கு 4 மணிநேரத்திற்கு முன் அதை சாப்பிட வேண்டும், அப்போதுதான் அதை ஜீரணிக்க உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

தூங்குவதற்கு வசதியான இடம் இருக்கவேண்டும்

தூக்கம்

ஒரு வசதியான மெத்தை மற்றும் படுக்கை தூக்கத்தின் ஆழம் மற்றும் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவே உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் தலையனை மற்றும் மெத்தையை பயன்படுத்துங்கள்.

உறுதியான மெத்தை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் தூக்கக் கலக்கம் மற்றும் தசைக் கோளாறுகளையும் தடுக்கிறது

உங்கள் தலையணையின் தரமும் முக்கியமானது.

கூடுதலாக, எடையுள்ள போர்வையைப் பயன்படுத்துவது உடல் அழுத்தத்தைக் குறைத்து உங்களின் தூக்கத்தை மேம்படுத்த உதவும்

கடைசியாக, நீங்கள் படுக்கைக்கு அணியும் துணிகள் இதுவம் உங்கள் தூக்கத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இரவு முழுவதும் சரியான வெப்பநிலையை வைத்திருக்க உதவும் வசதியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது இதுவும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கும்,

சரியான முறையை பின்பற்றவும்

எப்படி தூங்க வேண்டும்

நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலின் நிலை சீராக இருப்பது அவசியம் எனவே நீங்கள் எப்படி படுக்கிறீர்கள் என்பதும் முக்கியம் ஒருபோதும் பின்புறமாக படுப்பது ஒரு பக்கமாக படுக்காதீர்கள் அது உங்களின் உடல்க்கு அசௌகரியத்தை கொடுக்கும் இரண்டு கால்களையும் நீட்டி நேராக தலைவைத்து படுப்பதுதான் சரியான முறை அப்போதுதான் நூங்கள் நிம்மதியான தூக்கத்தை பெற்வீர்கள்.