HOW TO SPEAK ENGLISH
source:pixabay |
தற்போதைய நாளில் இவ்வுலகில் உள்ள அனைவரும் தனது தாய்மொழி தவிர வேற்று மொழி பயில்வது அவசியமாக உள்ளது ஏனென்றால் உலகமயமாதல் காரணமாகவும் பல்வேறு நிறுவனங்கள் உலகமெங்கும் தன்னுடைய கிளைகளை தொடங்குவதாலும் அங்குள்ள மொழிகள் அறிவது அவசியம், அப்படி உலகமெங்கும் பேசப்படும் ஆங்கில மொழி பேச கற்பதன் மூலம் உலகின் எந்த ஒரு மூலைக்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம். அப்படிபட்ட ஆங்கில மொழி எப்படி பேசவேண்டுமென்ற ஒரு சில வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம்.
தவறுகளை கண்டு அஞ்சாதீர்
ஆங்கிலம் பேசும் பொழுது தவறாக பேசிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சாதீர்,சரியான இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்துடன் சரியான ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்யாமல் ஒரு செய்தியை சொல்லும்போது கேட்பவர் புரிந்துகொள்ளும் வன்னம் வழங்குவதே உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் . ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கூட தவறு செய்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
பயிற்சி முக்கியம்
ஆங்கிலம் கேளுங்கள்
நீங்கள் எவ்வளவு அதிகமாக ஆங்கிலம் கேட்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவீர்கள். உரையாடல்களில் நீங்கள் சரளமாகவும் நம்பிக்கையுடனும் பேசத் தொடங்குவீர்கள், புதிய வெளிப்பாடுகள் மற்றும் சொற்களஞ்சியங்களுடன் உங்கள் கருத்துக்களை ஆங்கிலத்தில் எப்படி வழங்குவது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.
அதிகமாக ஆங்கில திரைபடங்கள் உரையாடல்கள் கேட்பதை தினசரி பழக்கமாக மாற்றிகொள்ளுங்கள். முடிந்தவரை அனைத்தையும் நீங்கள் ஆங்கிலத்தில் செய்ய முயற்சிசெய்தால் மிக குறைந்த காலத்திலேயே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வீர்கள்.
ஆங்கிலத்தில் சிந்தியுங்கள்
பெரும்பாலானோர் ஆங்கிலம் பேசும்பொழுது தாய் மொழியில் சிந்தித்து அதன்பிறகு அதனை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்பார்கள் இப்படி செய்வது சரியான முறையல்ல இப்படி பேசும்பொழுது நீங்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வீர்கள், இதற்கு பதிலாக நீங்கள் ஆஙுகிலத்திலேயே யோசிக்க வேண்டும் இதனால் தடுமாற்றமின்றி உங்களால் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும்.
நாக்கிற்கான பயிற்சி
ஆங்கிலத்தில் ஒரு சில எழுத்துகளை நம்மால் சரளமாக பேசமுடியாது அந்த மாதிரியான வார்த்தைகளை நாம் அடிக்கடி பேசி பார்க்க வேண்டும். எடுத்துகாட்டாக மேலே படத்தில் காட்டபட்டுள்ள வார்தைதகளைபோல் உள்ள வார்த்தைகளை பேசி பார்க்க வேண்டும்.
தவறுகளை கண்டறியவும்