பெர்முடா முக்கோணம் (bermuda triangle)
நம் பூமியில் பல சிக்கலான முடிச்சுகள் இன்றளவும்ளவுமளவுளவளஅவிழ்க்படாமல் உள்ளது . நம் கற்பனைக்கு எட்ட முடியாத அளவிற்கு பல ஆச்சர்யமான மற்றும் பல மர்மமான இடங்கள் இந்த உலகில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி அந்த மர்மமான மற்றும் ஆச்சரியமான இடத்தில் முதல் இடத்தை பிடிப்பது இந்த பெர்முடா முக்கோணமே(BERMUDA TRIANGLE) என்று கூறினால் மிகையாகாது .உலகில் பல மர்மமான இடங்கள் இருப்பினும் பெர்முடா முக்கோணம் மட்டும் அனைவராலும் இன்று வரை பேசப்படும் விடை தெரியாத மர்ம்மாகவே இருக்கிறது. தெற்கு புளோரிடாவின் மியாமி, போர்டரிகா, மற்றும் பெர்முடா ஆகியவற்றிற்கு இடைபட்ட கடல் பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கோணம் போன்ற அமைப்பு தான் இந்த பெர்முடா முக்கோணம் ஆகும்.இந்த கடல்பகுதியில் மட்டும் பல கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் அதாவது 70 க்கும் மேற்பட்ட கப்பல் ,விமானங்கள் மறைந்து போனதாக சொல்கின்றார் . இதன் காரணமாகவே இந்த பெர்முடா முக்கோணம் இன்றளவும் மிகவும் மர்மமாக உள்ளது. இப்படி மர்மமான முறையில் விமானங்களும் ,கப்பல்களும் மறைவது அமானுஸ்யமானதாக இருந்தாலும் இவை பல நூறு ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது உண்மையில் இது மர்மமா இதற்கு பின்னால் இருக்கூடிய உண்மை என்ன வரலாறுகளில் நடந்த சம்பவல்கள் என்னென்ன என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
கொலம்பஸ் நிகழ்வு
இந்த பெர்முடா முக்கோணம் 1 லட்சத்து நாற்பாதியிரம் கிலோ மீட்டர் அளவிலான இடத்தை கொண்டுள்ளது எனலாம். அப்படி ஒருமுறை கொலம்பலஸ் முதன் முதலில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து செல்லும் போது திடிரென வானத்தில் இருந்து நெருப்பு பந்து போன்ற ஒன்று கடல் பகுதியல் விழுந்ததாகவும். அது வானத்தில் இருந்து தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் உடனே அவர் வைத்திருந்த காம்பஸ்(திசைகாட்டி) செயலிழந்ததாகும் கூறுகிறார். அதனால் திசை மாறியதாகவும் கூறிகிறார்.இந்த நிகழ்வு நடந்த இடம் பெர்முடா என்றே கூறுகின்றனர் அதாவது இந்த நிகழ்வு 600 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வாகும்.இந்த நிகழ்விற்கு பிறகுதான் பெர்முடாவின் மர்மம்(bermuda) உலகிற்கு வெளிவந்தது.கொலம்பஸ் கடல் பயணத்தில் ஏற்பட்ட ஒரு மர்மமான நிகழ்வின் காரணமாகதான் அனைவரும் அந்த இடத்தை கண்டு அஞ்சினர் என்றே கூறலாம்,
USS CYCLOPS மறைந்த நிகழ்வு
யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ் என்ற அமெரிக்க கப்பல் ரியோ டி ஜெனிரோ என்ற இடத்திலிருந்து பால்டிமர் என்ற இடத்திற்கு மெக்னிசியம் ஏற்றிக்கொண்டு 300 க்கும் மேற்பட்ட நபர்களுடன் அந்த கப்பல் சென்றது . 20 நாட்களுக்கு பிறகு அந்த கப்பல் எங்கு சென்றது அதிலுருந்த பயணிகள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாமல் போனது . அந்த கப்பலிலிருந்து எந்த ஒரு சிறிய அடையாளம் கிடைக்காமல் முற்றிலும் மர்மமான முறையில் மறைந்து போனது. இந்த நிகழ்வு இன்று வரை விடைதெரியா மர்மமாக இருக்கிறது.இந்த சைக்ளோப்ஸ் கப்பல் அமெரிக்க கப்பல் படையின் முதல் கப்பலாகும் . இந்த நிகழ்வுதான் பெர்முடவில் நிகழ்ந்த முதல் மர்மமான நிகழ்வாகும் .
ஆய்வார்கள் கூற்றின் படி இந்த நிகழ்வு கப்பலின் கேப்டனுக்கும் துனை கேப்டனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையினால் கப்பலில் இருந்த இரண்டு குழுக்கள் மாற்றி மாற்றி சண்டையிட்டதால் அந்த கப்பல் உடைந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள.அதாவது அவர்களின் கருத்து வேறுபாட்டினால் இந்த கப்பல் முழுமையாக கடலினுள் மூழ்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.அவை உடைந்தாலும் அந்த கப்பலின் ஒரு சில தடயம் மட்டுமே கிடைத்தாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
FLIGHT 19
அமெரிக்க விமான படையினர் புளோரிடாவிலுருந்து பகாமாஸ் என்ற இடத்திற்கு சென்று இறுதியில் ஆரம்ப இடத்திற்கு வரும் பயிற்சியினை விமானபடையினர் மேற்கொண்டனர் . 14 பேர் கொண்ட விமானப்படை குழு பயிற்ச்சியை மேற்கொண்டனர் flight 19 என்ற ஐந்து விமானங்கள் பயிற்ச்சிகாக பெர்முடாவை நோக்கி சென்றது அப்படி சென்ற விமானம் 4 மணி நேரம் கடந்தும் திரும்பி வரவில்லை . அந்த விமானத்திலிருந்த (காம்பஸ்) திசைகாட்டிகளும் செயலிழந்து போனதாக அந்த விமானத்தில் இருந்து கடைசியாக வந்த சிக்னல் என்று கூறினர்.பகாமஸ் இடத்திற்கு வரவேண்டிய விமான படை குறிபிட்ட நேரத்தில் திரும்பி வராததால் விமானபடையினருக்கு எந்த வித தகவலும் கிடைக்காததால் மீண்டும் ஒரு ரெஸ்கியு விமானம் ஒன்றை அனுப்பினர் ஆனால் அதனுடைய தொடர்பும் சிறிது நேரத்திலேயே துண்டிக்கப்ட்டது. இந்த நிகழ்வு வரலாற்றில் அதிக அளவு மக்களால் பேசப்பட்டது என்றே கூறலாம்.
இது எதனால் மறைந்தது என்றால் அந்த விமானபடையின் தலமை அதிகாரி அதிகம் மதுவிற்கு அடிமையானவராவர் என்றும்.அவர் விமான பயிற்சிக்கு முதல்நாள் அதிக மது அருந்தியதாலும் அது அடுத்த நாள் வரை மது மயக்கத்தில் இருந்ததால் அவர்கள் தவறான திசையில் சென்றும் அதனால் எரிபொருள் தீர்ந்ததால் விமானம் ஐந்தும் அழிந்திருக்கலாம் என்று ஆய்வாளர் கூறுகிறார்கள். ஆனால் இந்த 5 விமானத்தை தேடி சென்ற ரெஸ்கியு விமானம் எவ்வாறு மறைந்திருக்கும் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது.இதற்கு சரியான விடையை இன்று வரை எவராலும் கூற முடியவில்லை. இது ஏலியன்கள் செயல்பாடாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்த ரெஸ்கியூ விமானம்தான் பெர்முடாவை மிகவும் அபாயகரமாக காட்டியது என்றே கூறலாம்.
அட்லாண்டிஸ் நகரம்
இந்த பெர்முடாவில் பல ஆயிரகணக்கான மர்மமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அப்படி மர்மமான நிகழ்வுகள் நடக்க காரணம் இந்த கடல் நகரம்தான் என்று அங்கு இருக்கும் தீவுக்கூட்டங்களில் வசிக்கும் மக்களின் கூற்றாக இருந்துள்ளது. அட்லாண்டிஸ் என்ற கடல் நகரம் பெர்முடா கடலின் அடியில் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.இந்த அட்லாண்டிஸ் கடல் பெர்முடாவின் அடியில் இருப்பதாகவும் அதன் காரணமாகதான் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன என்றும் கூறுகின்றனர். இந்த அட்லாண்டிஸில் ஏலியன்கள் இருக்கலாம் இதனால் கூட பெர்முடா முக்கோணம் மர்மமாக உள்ளது என்றும் அந்த மக்கள் அவர்களின் கதையை கூறுகின்றனர்.
தொடர்புடையவை: கடல் நகரம் அட்லாண்டிஸ் இருந்தது உண்மையா
பெர்முடா ரகசியம்(BERMUDA MYSTERY)
இந்த பெர்முடாவிற்கு சென்றால் திசைகாட்டி மாறுவதாகவும் அங்கு கடல்கள் அதிக சீற்றமாக காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இதுமட்டுமின்றி அந்த கடலுக்கு அடியில் அதிக அளவு மீத்தேன் வாயு இருப்பதால் இந்த பெர்முடாவில் அதிக கப்பல் விமானம் மறைவதாக கூறுகின்றனர்.இந்த பெர்முடா முக்கோனத்தில் அதிக அளவு காந்த தன்மை இருப்பதால் கூட வித்தியாசமான காலநிலையை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.இதன் காரணமாகவேதான் அதிக கடல் சீற்றம் , சூறாவளி, போன்றவை ஏற்படுகிறது. அறுங்கோண மேகங்கள் இதன் காரணமாக கூட திசைகாட்டியின் திசை கூட மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இப்படி பல்வேறு அறிவியல் சார்ந்த காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த பெர்முடா முக்கோணம் மக்கள் மனதில் இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறுது,