10 Tips to overcome laziness

எண்ணத்தை மாற்றி அமைத்தல்!

மற்றவர்களை நம்பியே சோம்பெறிகள் வாழ்வார்கள் . இதை முதலில் விட்டுவிடுங்கள் . 

தன்ஆர்வத்தை மேற்கொள்ளுதல்!

தானாகவே செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் குறைவாக இருக்கும் எனவே நீங்களே முன்வந்து சுயமாக உங்கள் வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள் .

திட்டம் தீட்டி செயல்படுதல்

திட்டம் தீட்ட கற்றுக்கொள்ளுங்கள் . மனம் சொல்வதை மட்டும் கேட்காமல் திட்டமிட்டு காரியங்களை செய்ய முயற்சி செய்யுங்கள்.

நமது முயற்சியே நமது வெற்றி

உங்கள் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அதுபோல உங்கள் வெற்றிகளுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நம்புங்கள்.

ஒரு நேரத்தில் ஒரு செயல்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயல்’ என்ற முழு தெளிவுடன் திட்டமிட்டு செயல்படுங்க. சோம்பேறித்தனம் நீங்கி செயல்படுவீங்க.

சுய உந்துதல்

 உறுதி மொழிகளை நீங்க பின்பற்றும் பொழுது உங்களின் உள் ஊக்கம் ஏற்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீங்க

விளைவுகளை நினைத்துப் பார்த்தல்

நீங்க செயலை செய்யாமல் விடுவதால் ஏற்பட போகும் விளைவுகளை மனதில் ஆழ்ந்து நினைத்துப் பாருங்க. ஏற்பட போகும் பாதிப்புகள் செயலை சுறு சுறுப்புடன் அணுகும் திறனைக் கொடுக்கும்.

தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகதீர்கள்..

எல்லா வேலைகளையும் எதாவது ஒரு தொழில்நுட்ப கருவியின் உதவியால் எளிதாக செய்து முடிக்க நினைப்பதை கைவிட வேண்டும் . 

இன்று மட்டுமே நிஜம்..

நாளை என்ற வார்தையை கெட்ட வார்தையாக நினைத்துகொள்ளுங்கள். முற்றிலுமாக இன்று மட்டுமே நிஜம் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள் .

மேலும் சில