intelligent animals in tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் பார்க்கவிருப்பது,விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று அனைவரும் நினைப்போம் ஆனால் விலங்குகளும் அதிக அறிவுதிறன் கொண்டவை . அதிலும் குரங்கு ரகூன் போன்றவை மனிதன் அளவிற்கு யோசிக்கக் கூடியவை. இந்த விலங்குகளில் ஒரு சில புத்திசாலியான விலங்குகள் பற்றி காண்போம்.
குரங்கு ( சிம்பன்சி)
சிம்பன்சி மனித டிஎன்ஏ வில் 96 சதவீதம் ஒத்துபோகிறது . மனிதருக்கும் சிம்பன்சிக்கும் போட்டி வைத்தால் அதில் வெற்றி பெரும் அளவிற்கு திறமைகளை கொண்டது சிம்பன்சி. இது மனிதனை போல தனக்கான இடத்தை தாமே அமைத்துதுக்கொள்ளும் பண்பை கொண்டது. அதுபோல் இதுவே ஆயுதங்களை உருவாக்ககும் தன்மை கொண்டது. உதாரணமாக நாம் ஒரு குச்சிய சிம்பன்சி கிட்ட குடுத்தா அத தூக்கி போடாம அது எப்படி பயன்படுத்தலாம் என்று யோசிக்கும் அந்த குச்சிய செதுக்கி ஈட்டியாக மாற்றி பழம் பறிக்க பயன்படுத்துமாம் . அதுபோல் ஒரு பழத்தை குடுத்தாலும் அதை தூக்கிபோடாமலும் அப்படியே சாப்பிடாமலும் மனிதன் போல் உறித்து உண்ணும் திறமை கொண்டது. இது நட்புக்கு முன்னுதாரனமாக இருக்கும் இதன் மூளை மனித மூளையை போன்றே செயலாற்றும் என்று குறிப்பிடுகிறார்கள்
காகங்கள்
நாம் பார்க்கக்கூடிய காகம் அறிவிலும் சற்று சிறந்தது . காகம் கூட்டமாக வாழக் கூடியவை . காக்கா தானாகா புரிந்து நடக்கும் திறமைக் கொண்டது . காகத்தை பறவை உலகின் ஐன்ஸ்டீன் என்று சொல்லலாம் . அவ்வளவு புத்திசாலியான பறவை காகம் ஆகும். இது மனிதனின் முகத்தை ஒரு முறை பார்த்தாலும் அப்படியே ஞாபகம் வைத்து கொள்ளக் கூடியது. காகம் தான் பறக்கும் போது எந்த பக்கம் சென்றால் பாதுகாப்பு வரும் ஆபத்து வரும் என்று அறிந்து செயல்படும். காகம் ஒரு செயலை எவ்வாறு செயல்படத்த வேண்டும் என்று அறிந்து செயல்படும்.
அணில்

அணில் பார்க்க சிறியதாக இருந்தாலும் அதன் ஞாபக சக்தியானது அதிகம் . அதாவது நீங்கள் நேற்று என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் சற்று யோசித்து சொல்லிவிடுவீர்கள் ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு சாப்பிட்டத்தை சொல்ல முடியுமா? முடியாது. ஆனால் அணிலால் ஒரு மாதத்திற்கு முன்பு சாப்பிட்ட கடலையை எந்த இடத்தில் ஒழித்து வைத்ததோ அதனை சரியாக அதனை அதே இடத்தில் இருந்து எடுக்கும் திறமை கொண்டது. இக்கட்டான சூழ்நிலையில் எப்படி முடிவெடுப்பது என்பதை அறிந்து சரியாக முடிவெடுக்கும் திறன் கொண்டது. மற்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க அந்த விலங்கினை ஏமாற்றி தப்பிக்கக் கூடியவை இந்த அணில்கள் .
ஆப்பிரிக்கா கிரே கிளி
கிளிகள் என்றாலே புத்திசாலி தான் அதிலும் ஆப்பிரிக்கா கிரே கிளிகள் மிகவும் புத்திசாலி. இந்த ஆப்பிரிக்கா கிரே கிளி மனிதன் பேச கூடிய வார்த்தைகளை துல்லியமாக அப்படியே திரும்ப பேசக் கூடியது. இவ்வாறு இந்த கிளிகள் பேசுவது மட்டுமின்றி ஒரு பொருளை ஒழிய வைத்தாலும் அதை கண்டுபிடிக்கும் அளவிற்கு திறமை கொண்டது.
டால்பின்
நீர்வாழ் உயிரினங்களிலே அதிக அறிவு திறன் கொண்டது டால்பின். உலகிலேயே இரண்டாவது அதிக அறிவு திறன் கொண்ட உயிரினமும் இந்த டால்பின்தான் ஏனெனில் இது உணர்ச்சிகளை கொண்டது . இதற்கு மனிதனை மிகவும் பிடிக்கும்நண்பன் போல் பழகும். மனிதர் ஆபத்தில் உள்ள போது காப்பாற்றும் அளவிற்கு திறமை கொண்டது.
நன்றி!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?