மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்திலுள்ள லாவுல் கிராமத்தில் இரண்டு குரங்குகள் கிட்டதட்ட 250-க்கும் மேற்பட்ட நாய்களை கடத்தி கொள்கின்றனர். ஏன் இந்த குரங்குகள் இதனை செய்கின்றன இதற்கான பின்னனி என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
குரங்குகள் நாய்களை கடத்தி சென்று கொல்வதை கண்ட அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.இவை இப்படி செய்ய காரணம் என்ன என்பதை அந்த கிராம மக்கள் கூறுகையில் அந்த இரண்டு குரங்களின் குட்டியை நாய்கள் கொன்றதால் பழி வாங்கும் நோக்கில் குரங்குகள் நாய்களை கடத்தி செல்கின்றனர் என்றனர்.
ஆனால் விலங்கியல் நிபுணர்களோ இதனை முற்றிலுமாக நிராகரித்தனர் குரங்குகள் நாய்களை கடத்த முக்கிய காரணம் நாய்கள் மேல் இருக்கும் பேன்கள் மற்றும் புழுக்களை சாப்பிட என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுபோல் உண்மையில் 250 நாய்கள் கொல்லபட்டதா என்று கேட்டால் அதுவும் கிடையாது உண்மையில் ஒரு 60 முதல் 70 நாய்கள் இறந்திருக்கலாம் என அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் ஊடகங்களோ கணக்கை 100 மற்றும் 250 என உயர்த்தி சென்றுவிட்டனர் .
பொதுவாக குரங்குகள் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் திறன் கொண்டவை அல்ல என்றும் உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.