வணக்கம் இன்றையபதிவில் நமது முகம் எவ்வளவு கருமையான சருமம் இருந்தாலும் சரி ஒரு சில இயற்கை வழிகள் மூலம் வெள்ளையாக மாற்றலாம் அது பற்றி இந்த பதிவில் காண்போம்.
கற்றாழை பயன்படுத்தி முகத்தில் படிந்துள்ள கருமைகள்,கண்ணை சுற்றி உள்ள கருவளையங்கள்,முகப்பருக்கள்,முகப்பருக்களால் வந்த கரும்புள்ளிகள் தலும்புகள், கழுத்தை சுற்றியுள்ள கருமைகள், தோல்சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கக்கூடிய அருமையான இயற்கையான டிப்ஸ் தான் பார்க்கப்போறோம்.
ஆனால் சில பேருக்கு கற்றாழையை பயன்படுத்தினால் எங்களுக்கு ஒதுக்கமாட்டேங்கிறது முகத்துல வந்து சின்ன சின்னதா பொறி பொறியா அலர்ஜி மாறி வருகிறது இல்லைனால் எதாவது பிரச்சனை வருகிறது அதனால பயன்படுத்த முடியவில்லை என்று சொல்றவங்களுக்கு இருக்கிறிங்க.ஆனால் நாங்க சொல்ற முறையில சொல்ற மாதிரி பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமா எதுக்காக நீங்க முயற்சி பன்றிகளோ அது சம்மந்தமான அனைத்து பிரச்சனையுமே அவ்ளோ அழகாக சரியாகிடும்.இது இப்ப எப்படி செய்யறதுனு பார்க்க ஆரம்பிக்கலாம்.
இந்த செயல் செய்ய இரண்டு முறை உள்ளது.
1)எப்படி செய்ய கூடாது
2)எப்படி செய்ய வேண்டும்
1)எப்படி செய்ய கூடாது
முதலில் நாம் எப்படி செய்ய கூடாது என்று பார்க்கலாம் பொதுவாகவே கற்றாழை பயன்படுத்துறவங்க என்ன பண்ணுவாங்கனா ஒரு பீஸ் கற்றாழை எடுத்துக்குட்டு கழுவிட்டு ஓரத்தில் உள்ள முள்களையும் நீக்கிடுவாங்க மேல வந்து ஒரு சின்ன தோலை மட்டும் நீக்கிட்டு அது மேல கொஞ்சம் சர்க்கரை மட்டும் தூவிட்டு நேரடியா சருமத்துல பயன்படுத்துவாங்க அந்த மாறி பண்ணும் போது என்ன ஆகும்னா,பொதுவாவே அந்த கற்றாழையின் தோல் மேல் பச்சை தோல் இருக்குஇல்லையா அந்த தோல்ல நம்ம சருமத்துக்கு அலர்ஜியை குடுக்கக்கூடிய ஒரு சின்ன அரிப்பு தன்மை தரக்கூடிய வேதிப்பொருள் இருக்கு அதனால எப்பவுமே நம்ம கற்றாழையை பயன்படுத்தும் பொது இந்த முறையை பயன்படுத்தக்கூடாது. அதனால தான் சில பேருக்கு இந்த கற்றாழையின் மேல் தோலை மட்டும் நீக்கிட்டு பயன்படுத்தும்போது அதுல இருக்கக்கூடிய அரிப்புத்தன்மையினால உங்க சருமத்துல நீங்க அப்ளை பண்ணும்போதே உங்க சருமம் வந்து அரிக்கிற மாறி இருக்கும். இல்ல இதை face pack மாறி உங்க முகத்துல எதாவது பண்ணிமுடிச்சிட்டு அதற்கு அப்புறம் பார்த்தீங்கனா உங்க முகத்துல வந்து சின்ன சின்ன பொறி மாறி அலர்ஜி வர ஆரமிச்சிடும்.அதனால இந்த முறையை பயன்படுத்த வேண்டாம்.
2)எப்படி செய்ய வேண்டும்
அப்ப எப்படி பயன்படுத்தலாம்னு பாத்திங்கனா ஒரு கற்றாழை துண்டை எடுத்துக்கொண்டு ஓரத்தில் உள்ள முள்களை நீக்கிட்டு பிறகு மேலே உள்ள தோலை நீக்கிடுங்க பிறகு பின்புறம் உள்ள தோலை நீக்கிவிட்டு ஒன்று முதல் மூன்று முறை கழுவவேண்டும். இதனை முடிக்கு பயன்படுத்த விரும்பினால் தோலை நீக்காமல் அப்படியே பயன்படுத்தலாம்.சருமத்தில் பயன்படுத்த வேண்டுமானால் தோலை நீக்கிவிட்டு குறைந்தபட்சம் மூன்று முறை கழுவ வேண்டும்.தோலை நீக்கி கழுவி வைத்த கற்றாழையின் மேல் கத்தியை கொண்டு குத்த வேண்டும். பிறகு அதில் இருந்து ஜெல்(jel) வெளிப்படும். பிறகு அதன் மேல் சிறுது சர்க்கரை தூவி உங்கள் சருமத்தில் தேய்க்கவும். நீங்கள் இதனை முகத்திற்கு பயன்படுத்த விரும்பினால் சர்க்கரைக்கு பதிலாக முல்தானி மெட்டி பயன்படுத்திக்கொள்ளலாம். சர்க்கரையை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள கருமைகள்,கழுத்தை சுற்றி உள்ள கருமைகள்,தோல் சுருக்கங்கள்,இறந்த உயிர் அணுக்கள் ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. இச்செயல் முறையை தினமும் செய்ய வேண்டுமா என்றால் கிடையாது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். குறிப்பாக முகப்பருக்கள் உள்ளவர்கள் சர்க்கரையை பயன்படுத்தாமல் கற்றாழையை மட்டும் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது. கற்றாழையில் இயற்கையாகவே வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி தான் நம் சருமத்தில் உள்ள கருமைகளை மற்றும் மாசுக்களை இயற்கையாகவும் சீக்கிரம் நீக்கவும் பயன்படுகிறது. உங்களுக்கு தேம்பல் இருந்தாலும் இம்முறையை பயன்படுத்தலாம். இந்த கற்றாழையை உங்கள் பாத எரிச்சல்,அக்குள் தூர்நாற்றம் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். இயற்கையாக செடிகளில் உள்ள கற்றாழையை பயன்படுத்தி கூட இம்முறையை பயன்படுத்தலாம்.
தொடர்புடையவை; நரை முடி ஏன் வருகிறது?