FACTS ABOUT DOGS
இந்த உலகில் மனிதர்களின் நண்பன் என்று அழைக்கப்படுபவை நாய்கள் என்றே கூறலாம் . தற்போதய காலகட்டத்தில் மனிதர்களிக்கு சிறந்த செல்லப் பிராணியாகவும் நாய்கள் இருந்து வருகின்றன. நாய்கள் நமக்கு பல வகைகளில் உதவிகரமாக இருந்துவருகின்றன எடுத்துகாட்டாக நம் வீடுகளை காவல் காப்பதற்கு மட்டுமின்றி தற்போது மனிதனுக்கு சிறந்த நண்பனாகவும் இருந்துவருகிறது.இப்படிபட்ட நாய்கள் பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான விசயங்கள் தற்போது காண்போம்
நாய்கள் முதன் முதலில் 32000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.இந்த நாய்கள் நரிகள் இனத்தை சார்ந்தவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நாய்களுக்கு 5 அறிவு இருந்தாலும்கூட அவற்றின் ஞாபக திறனானது 250 வார்த்தைகளை கூட ஞாபகம் வைத்துக்கொண்டு அதனை புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் அளவிற்கு திறன் பெற்றது.
மனிதர்களுக்கு தனிமை என்பது நிறைய வேதனையை தரும் அதுபோலவே நாய்களும் தனிமையில் இருந்தால் கவலைக்கு உள்ளாகும். இதனாகாரணமாக நாய்கள் மனிதர்கள் இல்லையென்றால் அதனால் தனிமையில் வாழ்வது கடினம்.
நாய்கள் மனிதைப்போல் அன்பு காட்டும் திறன் உண்டு. தனக்கு ஒருமுறை சாப்பாடு போட்டாலும் தனது வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறனை பெற்றிருக்கும்.
நாய்கள் சில நேரம் புற்களை சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவ்வாறு நாய்கள் புற்களை சாப்பிட காரணம் தங்களின் உடல்நிலையை தானே அறிந்துகொண்டு செரிமான மண்டலத்தில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து அதற்கு மருந்தாக புற்களை சாப்பிடும். நாய்களுக்கு எந்த ஒரு மருந்தகமும் தேவையில்லை தன்னை தானே தகவமைக்கும் திறன் கொண்டிருக்கும்.
நாய்களுக்கு நன்கு கேட்கும் திறனும் நுகரும் திறனையும் பெற்றவை இதன் காரணமாக நாய்களுக்கு பூமியில் ஏற்படும் இயற்கை சீற்றத்தை கூட எளிதாக க்டறறிய முடியும். அதேபோல் கேன்சர் உள்ளவர்களை கண்டறியும் திறனும் பெற்றிருக்கும். இதன் நுகரும் திறன் மனிதனைவிட 10000 மிதல் 100000 வரை அதிகம்.
நாய்களுக்கு வேர்க்கும் இடம் அதன் கால்கள் மட்டுமே உங்களுக்கு தெரியுமா ஆம் அவற்றின் உடலில் அவற்றின் கால்கள் மட்டும்தான் வேர்க்கும் பண்பை பெற்றது.இவைகள் சந்தோசமாக இருக்கும் போது வாலை இடது புறமாகவும் கவலையில் இருக்கும்போது வலது பக்கமும் வாலை ஆட்டும். நாய்க்கு அதிக மோப்பசக்தி காரணமாஎத்தான் அதன் மூக்கில் தண்ணீர் சுரக்கிறது.
நாய்கள் தன்னுடைய தலையை திருப்பாமல் காதுகளை மட்டும் அசைக்கும் திறன் கொண்டவை இதனால் காதுகளை அசைக்க மட்டும் அவற்றின் உடலில் 18 தசைகளை பயன்படுத்தும் .
நாய்களுக்கும் மனிதர்களைப்போல பொறாமை குணம் உண்டு. எந்த அளவுக்கு என்றால் ஒரு நாய் தனது உரிமையாளர் தன்னை கொஞ்சாமல் அவருடைய குழந்தையை கொஞ்சியுள்ளார் இதனால் அந்த நாய் இதனால் அந்த அறிவு நிறைந்த நாஆய் குழந்தையை தூக்கி கொண்டுபோய் குப்பைதோட்டியில் போட்ட வீடியோ இண்டர்நெட்டில் வைரலானது.
மனிதர்கள் எப்படி கைரேகை என்பது ஒவ்வொருவருக்கும் தனிதன்மையாக உள்ளதோ அதுபோல்தான் நாய்களின் மூக்கில் காணப்படும் ரேகைகளும் இது ஒவ்வொரு நாய்க்க்கும் மாறுபடும்.
நாய்கள் ஏன் சிறுநீரை கம்பங்களிலும் கார் டயர்களிலும் கழிக்கிறது
நாய்கள் இவ்வாறு சிறுநீர் கழிக்க தங்களின் எல்லைகளை வலுப்படுத்தவும் ஹார்மோன்களை சிறுநீர் வழியாக அனுப்பி இனப்பெருக்கம் செய்ய தங்களை தயார்படுததிக்கொள்ள இவ்வாறு கார்களிலும் கம்பங்களிலும் சிறுநீர் கழிக்கும்.
தொடர்புடையவை:உலகின் அபாயகரமான 10 நாய் இனங்கள்