top 10 dangerous dog breeds
10. அமெரிக்க புல் டாக்ஸ்
source;pixabay |
அமெரிக்காவின் புல் டாக்குகள் ஆனது பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருப்பதுபோல் தோன்றும் ஆனால் அவைகளுக்கு சரியான பயிற்சி வழங்கபடவில்லை என்றால் மிகவும் மூர்க்கதனமாக மாறிவிடும், இவை ஆரம்ப காலத்தில் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு உதவியாக வேட்டையாடுதல் மற்றும் பாதுகாத்தல் போன்றவைகளுக்கு பயன்பட்டது. ஆனால் இவற்றிடம் சற்று கவனமாக இருப்பது மிக அவசியம் ஏனென்றால் 2015- ஆம் ஆண்டு மட்டும் இவற்றை வளர்த்து வந்த முதலாளிகளையே பதம் பார்த்துள்ளது கிட்டதட்ட 15 பேர் இந்த நாயால் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
9. அலாஸ்கன் மாலமுட்கள்
பார்ப்பதற்கு மிகவும் பவ்வியமாக இருக்கும் இந்த அலாஸ்கன் மாலமுட்கள்தான் உலகின் அபாயகரமான நாய்களில் 9-வது இடத்தை பிடிக்கிறது. இந்த நாய் இனமானது பார்பதற்கு ஓநாய் போன்றே காட்சியளிக்கும் இவற்றின் சக்தியே இவற்றின் வேகம் மற்றும் ஆக்ரோஷமான திறன் எனலாம் இவை எந்த அளவுக்கு சாதுவாக இருக்குறதோ அதைவிட இரண்டு மடங்கு கோபமாக வேட்டையாடும் திறன்பெற்றதாம் இதானல் இந்த நாயை வளர்க்க சில நாடுகள் தடையும் விதித்துள்ளன.
8.கங்கல்
7. ஓநாய் இன நாய்கள்
இவை ஓநாயா இல்லை வெறும் நாயா என பார்ப்பவர்களை குழப்பும் அளவிற்கு ஓநாய் போன்ற ஒத்த வடிவில் இருக்ககூடிய இந்த ஓநாய் நாய்கள்தான் ஆபத்தான நாய்கள் தரவரிசையில் 7-வது இடத்தை பிடிக்கிறது. இந்த வகை நாய்கள் ஒநாய் நாய்களுக்கு இடையே பிறந்த கலப்பு இனமாகும்.
6. சைபீரியன் ஹஸ்கி
இந்த சைபீரியன் ஹஸ்கி நாய் இனங்கள் ஆபத்தான நாய்களாக கருதப்பட்டாலும் இவற்றை பெரும்பாலான மக்கள் வளர்த்து வருகின்றன. இவை பாசமும் கோபமும் இரண்டும் கலந்த கலவையாக இருக்கும் இவற்றிற்கு அதிகமான பயிற்சிகள் வழங்கபட்டால் மட்டுமே ஒரு நல்ல நண்பனாக இருக்கும்.
5. டாபர்மேன்
இந்த டாபர்மேன் வகை நாய்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் உள்நாட்டு நாய்களாகும் இந்த ஆபத்தான நாய்கள் தரவரிசையிலேயே இந்த வகை நாய்கள் மிகவும் புத்தசாலியானவை இவை இடத்திற்கு ஏற்றார்போலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆபத்தை உணர்ந்து அதற்கு மனிதர்களின் கட்டளையில்லாமலே தன்னிசையாக முடிவெடுக்கும் அளவிற்கு புத்திசாலியானவை. இவை வேகமாகவும் விவேகமாகவும் மற்றும் அச்சுறுத்தும் ஒரு உடலமைப்பை கொண்டுள்ளதால் இவற்றிடம் சற்று கவானமாக இருப்பது அவசியம்.
4.ஜெர்மன் ஷெப்பர்டு
இந்த வகை நாய் இனங்களை நீங்கள் நிறைய திரைப்படங்களில் கண்டிருக்கலாம். இந்த வகை நாய்கள் அனைத்து மக்களாலும் விரும்பகூடியதாக உள்ளது ஏனென்றால் இவை மிகவும் அன்பாக இருக்கும் ஒரு சிறந்த காவலாளியும் கூட. இவை பார்பதற்கு சாதுவாக இருந்தாலும் மிகவும் வேகமாக செயல்படக்கூடியது இதற்கு முறையான பயிற்சி மற்றும் அன்பாக வளர்கபட்டால் மட்டுமே உங்களின் குடும்பத்திற்கு உகந்ததாக இருக்கும்.
3. ரோட்வீலர்ஸ்
இந்த ரோட்வீலர் நாய்கள் பார்பதற்கு மிகவும் கடினமான உடலமைப்பை கொண்டிருக்கும் இவை இயற்கையாகவே மிகவும் ஆக்ரோஷமாகாதான் காணப்படும் இந்த வகை இனங்கள் ஒரு குடும்பத்திற்கான வளர்ப்பு நாய் அல்ல இவை பெரும்பாலும் பாதுகாப்பு செயலுக்காகவே பயன்படுத்தபடுகின்றன.
2. பிட் புல்டாக்
ஆபாத்தான நாய்களில் இரண்டாமிடம் பிடிப்பது இந்த பிட்புல் ரக நாய்கள் . இவை பார்ப்பதற்கு எப்படி டெரராக உள்ளதோ அதேபோல் இவற்றின் குணமும். இவை சண்டை செய்வதில் வல்லவர்கள் அதுமட்டுமல்ல இவற்றின் எதிரிகளை வீழ்த்த இவற்றின் ஒரு கடியே போதுமானது, ஏனெனில் இவற்றின் தாடைகள் அவ்வளவு வலிமை மிக்கது. இது வீட்டு நாய் இல்லை சண்டை நாய் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இந்த வகை நாய்களை பெரும்பாலான நாடுகள் தடைசெய்துள்ளன. 2017-ஆம் ஆண்டு மட்டும் 20க்கும் மேற்பட்டவர்களை போட்டுதள்ளியது, கடந்த 10 வருடங்களில் மட்டும் 400 மேற்பட்டவர்களை இவைகள் காவுவாங்கியுள்ளன.
1.தி கிரேட் டேன்
உலகின் ஆபத்தான நாய்களில் முதலிடத்தை பிடிப்பது தி கிரேட்டேன் நாய் இனம் ஆகும். இந்த உலகில் நீண்ட காலம் இருக்கும் நாய் இனங்களில் இதுவும் ஒன்று இவை அளவில் மிகவும் உயரமாக காணப்படும். இந்த வகை இனங்கள் ஆக்ரோஷமாகவும் வேகமாகவும் செயல்படக்கூடியவை. இந்த வகைநாய் இனங்கள் பெரும்பாலும் இராணுவத்தில்தான் பயன்படுகிறது.
தொடர்புடையவை: உலகின் ஆபத்தான 10 வேலைகள்