நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் mysteries of nazca lines in tamil

நாஸ்கா கோடுகளின் மர்மம்(Mysteries of nazca lines)

nazca lines mystery
            நாம் பல வரைபடங்கள்  பார்த்திருக்கிறோம். ஆனால் நம் பூமியில் உள்ள மிகவும் மர்மமான வியப்பூட்டக்கூடிய   பெரிய வரைபடங்கள்   காணப்படுகின்றன. இவ்வாறு உள்ள வரைபடங்களை தான்  நாஸ்கா கோடுகள் என்கிறோம் இந்த கோடுகளை பற்றிய ஆச்சரீயமூட்டும் தகவல்களை பற்றி   இந்த பதிவில் காண்போம்.

இடம்:

இந்த நாஸ்கா  கோடுகள் தென் அமெரிக்க கண்டத்தில் பெறு நாட்டில்  லிமா என்ற ஊரிலிருந்து  500கி.மீ தொலைவில் உள்ள ஒரு வறண்ட பகுதியில் காணப்படுகிறது
          இந்த நாஸ்கா  கோடுகள் தென் அமெரிக்க கண்டத்தில் பெறு நாட்டில்  லிமா என்ற ஊரிலிருந்து  500கி.மீ தொலைவில் உள்ள ஒரு வறண்ட பகுதியில் காணப்படுகிறது.   இந்த பழமையான மர்மம் வாய்ந்த  பகுதியாகவும் கூறப்படுகிறது. இந்த தட்டையான நிலப்பகுதியில் 170 சதுர கிலேமீட்டர் கொண்ட ஒரு மிகப்பெரிய வரைபடமாக உள்ளது. இவை அனைத்தும் தூரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிகிறது.  அமெரிக்காவில்  வாழ்ந்த நாஸ்கா என்ற பழங்குடியினரால்  வரையபட்டிக்கும் என்பதால் இதனை நாஸ்கா கோடுகள் என்று அழைக்கப்படுகிறது.இது 2000 ஆண்டுகளுக்கு பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

கண்டுபிடிப்பு:

இந்த நாஸ்கா கோடுகளை 1927 ல் டொரியே மெஜியோ ஜெஸ்பே என்ற பெறு நாட்டு  தொல்பொருள் ஆய்வாளர் மலை ஏறுகிறார் அப்போது மலைகளின் உச்சியிலிருந்து வறண்ட நிலைபகுதிகளை பார்க்கும் போது அப்போது சில உருவங்களை கா
        இந்த நாஸ்கா கோடுகளை 1927 ல் டொரியே மெஜியோ ஜெஸ்பே என்ற பெறு நாட்டு  தொல்பொருள் ஆய்வாளர் மலை ஏறுகிறார் அப்போது மலைகளின் உச்சியிலிருந்து வறண்ட நிலைபகுதிகளை பார்க்கும் போது அப்போது சில உருவங்களை காண்கிறார். இந்த ஒவ்வொரு உருவமும் 30 மையில் தூரத்தில்  வரையபட்டிருக்கும். இதுமாதிரி பல உருவங்கள்  அங்கு வரையப்பட்டுள்ளன.  இந்த  ஆய்வாளர் இதனை கண்டறிந்த பிறகு  உலகிற்கு நாஸ்கா கோடுகள் பற்றி தெரியவருகிறது.   இந்த அனத்து உருவங்களும்  கிறுக்கவதுபோல்   இருந்தாலும் 30 மையில் தூரத்திலிருந்து  பார்த்தால் மட்டுமே  தெரியும்
 
                இந்த கோடுகளை ஹெலிப்காப்டர் மூலம் பறந்து இதுபோன்று 300 கோடுகளை கண்டறிகின்றனர். இந்த கோடுகளை ரியோ கிராண்டின் நாஸ்கா என்ற பழங்குடியினரால் வரையப்பட்டது. இந்த பழங்குடியினர்கள்  விசித்திரமான  கைவினைபொருள்கள் மற்றும் வித்தியாசமான மண்ணில் வரையும் பெரிய வரைபடங்களையும் வரைந்துள்ளனர்.
 
                        இந்த கோடுகள்  மூன்று வகையாக உள்ளது. அவை நேர்காடுகள், கேத்திர கணித வடிவிலான வடிவங்கள்,  விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள். போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்கள் அனைத்தும் வானிலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். இந்த வரைபடங்களின் நோக்கம் வானிலிருந்து பார்த்தால் மட்டும் தெரியக்கூடியவை. 2000 ஆண்டுகளுக்கு முன்  பறக்கும் தொழில்நுட்பம் இல்லாமல்  இதனை எப்படி வரைந்திருக்க முடியும் என்பது  இன்றுவரை புரியாத புரதிராகவே  உள்ளது .இந்த படங்கள் வானிலிருந்து பார்த்தால் மட்டுமே துல்லியமாக தெரியும்.
 

ஏலியன்கள்:

                        இந்த கோடுகளை வரைய நாஸ்கா மக்களுக்கு ஏலியன்கள் உதவிருக்கலாம் என  கூறுகின்றனர். இப்போது ஆராய்ந்த ஆய்வாளர்கள்  சூரியன் நட்சத்திரங்களின் பாதையை  கணிக்க வரைந்திருக்கலாம் ஆனால் ஒரு ஆய்வாளர் இதனை வானியல் பற்றி இந்த கோடுகள் கூறவில்லை இவை தண்ணீர் மற்றும்  வேளாண்மை பற்றி கூறுகிறது என்று ஆய்வாளர் கூறுகிறார். இந்த   கோடுகள் அதன் அருகில் உள்ள  கிராமத்தை குறிப்பதாக கூறுகின்றனர் என நம்பபடுகிறது. இதற்கான ஒரு தெளிவான  கூற்று எதுவும் இல்லை. அதனால் இன்று வரை மர்மமாக உள்ளது.
 

உருவங்கள்:

nazca lines
                இந்த நாஸ்கோ  கோடுகளை அறிவியலாளர்  கூட விளக்க முடியவில்லை என கூறலாம். இந்த கோடுகள் நிறைய பூச்சிகள் ,பறவைகள் , விலங்குகள் என பல உருவங்களை கொண்டுள்ளது. இந்த கோடுகளை அந்த பழங்குடியினர் நேரத்தை கணக்கிட வரைந்தனர் என்கின்றனர். இரும்பு தாது நிறைந்த இந்த நாஸ்கா  கோடுகள் அதிக கூழாங்கற்கள் நிறைந்தது. இந்த கற்கள் உள்ள இடங்களை மட்டும் நீக்கி கோடுகளை வரைந்தனர்.
 
              இந்த கோடுகள் பல கோடுகளாக இருப்பினும் இவை அனைத்தும் ஒரே புள்ளியில் சந்திகின்றன. மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முமுவதும்  நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்பணித்துள்ளார்.
 
                ஏலியன்கள்  வருவதற்காக இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றனர். இறைவனை வழிபடுவதற்காக இந்த கோடுகள் வரையபட்டிருக்கலாம்  என்றும் மக்களால் கூறப்படடுகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தாலும் இந்த கோடுகளை எவ்வாறு வரைந்தார்கள் இன்று வரை விடை கிடைக்கவில்லை.  இது மிகப்பெரிய தற்போது சுற்றுலா தளமாக உள்ளது.
 
                                                              நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *