மர்மங்கள் நிறைந்த கோவில்கள் 10 mysterious temples in india in tamil

mysterious temples
source;infinegun

ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் கடந்தகால வரலாற்றையும் இன்னைக்கும் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான இடத்தில் இருப்பது இந்தக் கோவில்கள் தான் ,மனிதனுடைய அசாதாரணமான கலைத் திறமையை வெளிப்படுத்துவதில் என்றைக்கும் நம்மை பிரமிக்க வைப்பது இந்த கோவிலில் உள்ள கட்டுமானங்கள் தான், ஆனால் அதையும் தாண்டி பல கட்டுகதைகள் இந்த கோவில்களை சுற்றி சொல்லபட்டுகொண்டேதான் இருக்கு. அப்படிப்பட்ட உலகின் மர்மமான 10 (mysterious temples) கோவில்களை பத்திதான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

காமக்கியா கோவில்

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் குவாகாத்தியில் இருக்கும் இந்த கோவில் மற்ற கோவில்களை விட முற்றிலும் வித்தியாசமாக பெண்களின் யோனியை கடவுகளாக பூஜிக்கும் முறையை கொண்டுள்ளது . இந்த கோவில் பெண்மையை போற்றும் வகையில் உருவாக்கபட்ட இந்த கோவில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.

அங்கோர்வாட்

அங்கோர்வாட் இந்திய கோவில்களையும் தாண்டி வேறு சில நாடுகளிலும் நம்மை ஆழ்த்தும் அளவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டுமானங்கள் கொண்டிருக்கக்கூடிய கோவில்கள் உண்டு.

அப்படிபட்ட பிரம்மாண்ட கோவில்களில் ஒன்றுதான் இந்த அங்கோர்வாட் கம்போடியாவில் இருக்கும் இந்த பிரம்மாண்ட கோவில்தான் இந்த உலகத்திலே விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில்.

சூரியவர்மனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கும் எகிப்திய பிரமீடுகளுக்கும் இடையே இருக்கூடிய முக்கியமான தொடர்பு கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட மர்மமான நீர் அகழி எனலாம். இதுபோன்று இந்த கோவிலை சுற்றி பல கதைகள் கூறப்படுகின்றன.

வீரபத்ரா கோவில்

அறிவியலுக்கு சவால் கொடுக்கக்கூடிய மர்மமான இந்திய கோவில்கள் லேபாக்‌ஷியில் இருக்ககூடிய இந்த வீரபத்ரா சிவன் கோவில் பிரமாண்டமான அதேசமயம் நுட்பமான கலை வடிவமைப்பை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியைய 70 தூண்கள் தாங்கும் அளவிற்கு கட்டமைக்கப்பட்டிருக்கும்.

அதில் ஒரு தூண் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்குவது தான் இங்குள்ள மர்மத்திற்கு காரணம் இன்றுவரை இந்த தூண் எப்படி தரையில் படமால் அந்தரத்தில் தொங்குகிறது என்பது ஆய்வளர்களுக்கே ஒரு புதிராகவே உள்ளது. ஏனெனில் இந்த தூணின் எடைமட்டும் கிட்டதட்ட 2-ஆயிரம் கிலோவுக்கு மேல் இருக்கும்.

கைலாசநாதர் கோவில்

இந்தியாவில் இருக்கூட்டிய முக பிரம்மீண்டமீன கோவில்களில் இந்த கைலாசநாதர் கோவிலும் ஒன்று என கூறலாம். மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரவில் அமைந்துள்ள இந்த கைலாசநாதர் கோவில் முழுவதும் ஒரு மலையை குடைந்து உருவாக்கபட்டுள்ளது அதாவது ஒரு பாறையை கோவிலாக முழுவதுமாக செதுக்கியுள்ளனர். 148 அடி நீளம் 62 அடி அகலம் 100 அடி உயரம் கொண்ட இந்த கோவில் முழுவதுமாக ஒரு பாறையை முழுவதுமாக உட்புறமாக குடைந்து உருவாக்கபட்டுள்ளது. எப்படி ஒரு மலையை குடைந்து இந்த கோவிலை உருவாக்கமுடியும் என அனைவரும் ஆராய்ந்த நிலையில் ஒரு சிலரோ இந்த கோவிலை கட்டியது ஏலியன்கள் என கூறுகொண்டிருக்கின்றனர்.

பத்பநாப சுவாமி கோவில்

இந்தியாவில் கேரளாவில் இருக்கூடிய பத்பநாபசுவாமி கோவில்தான் உலகின் பணக்கார கோயில் எனலாம் . பத்நாப சுவாமி கோவில் 6-அறைகளில் 5 அறைகள் திறக்கபட்ட நிலையில் ஆறாவது அறை இன்றும் திறக்கபடாமல் உள்ளது இது ஏன் திறக்கபடவில்லை அதை திறந்தால் என்னவாகும் என்று இன்றுவரை குழப்பமாகவே உள்ளது. அந்த ஆறாவது அறைக்கு சாவியே இல்லை என்றும் அதனை திறக்க மந்த்திரம் கூற வேண்டும் எனவும் கூறப்படுகிறது இன்றுவரை இந்த கதவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது.

கர்னி மாதா கோவில்

இந்த உலகில் எலிகளை கடவுளாக வணங்கி அதற்கான கோவில் இருப்பதும் நம் நாடுதான் . நம் நாட்டில் ராஜாஸ்தானில் தோஷ்னோக் பகுதியில் எலுகளுக்கான கோவில் உள்ளது இங்கு எலிகளுக்கு வைக்கூடிய பலைதான் எலிகள் சாப்பிட்ட பிறகு அதைதான் பிரசாதமாக எடுத்துசெல்கின்றனர். இதில் குறிப்பிடதகுந்த விசயம் என்னவென்றால் ஆயிரகணக்கில் எலிகள் அங்கு வசித்தாலும் அதனால் மக்களுக்கு எந்த வித தொற்றுநோயும் ஏற்படவில்லை என்பது நம்மை வியப்பில் ஆழ்த்தகூடியதாகதான் உள்ளது.

ஹெபாஸ்டஸ் கோவில்

கிரீஸ் நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதுதான் இந்த கோவில் உலகின் பழமையான கோவில்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இது பண்டைய ஏதென்ஸ் நகரின் புகழ்பெற்ற வழிபாட்டு தளமாகவும் இரிந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பிரகதீஸ்வரர் கோவில்

இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்ககூடிய தஞ்சை பெரிய கோவில் என அழைக்கபடும் பிரகதீஸ்வரர் கோவிலும் உலகில் இருக்கூடிய மர்மமான மற்றும் பிரம்மாண்டமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலின் கருவறைகோவிலில் மேல் பகுதியில் இருக்கும் 80-டன் ஒற்றைகல் என காண்போரை வியப்பில் ஆழ்த்தியதுதான் இந்த கோவில். இந்த கோவில் கட்டபட்டுகொண்டிருக்கும்பொழுதே அருண்மொழிவர்மன் இறந்ததால் இந்த கோவில் சபிக்கபட்ட கோவில் எனவும் மர்மங்கள் நிறைந்த கோவிலாகவும் மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

கோனார்க் சூரிய கோவில்

கி.பி 13-ஆம் நூற்றாண்டில் கட்டபட்ட இந்த கோவிலானது இந்தியாவின் முக்கியமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது சிகப்பு மண் பாறைகளாலும் கருப்பு நிற கிரானைட் கற்களாலும் 24 குதிரைகள் ஒரு தேரை இழுக்கும்படி கட்டபட்ட ஒரு வித்தியாசமான வடிவம் கொண்ட ஒரு கோவில்தான் ஒடிசாவில் இருக்கும் இந்த சூரிய கோவில்.