ஷம்பலா இமயமலைத் தொடர்கள் இருப்பதாக பலராலும் நம்பக்கூடிய ஒரு மாய நகரம் இந்த ஷாம்பலா(SHAMBALA) நகரத்தை ஹிட்லர் உட்பட பலரும் தேடி இருக்காங்க இதைப் பத்தின சுவாரஸ்யமான தகவல்களை தான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.
இந்ந்த ஷாம்பலா என்பதற்கு அமைதியான நகரம் என்று பொருள்.கடந்த நூறு வருடங்களாக இந்த இடத்தைப் பற்றிய செய்திகள் மக்களிடையே உலவி வருகிறது. இந்த மாய நகரம் இருந்ததற்கான தகவல்கள் திபத்தில் புத்தமதத்துக்கு முன்னாடி பின்பற்றப்பட்ட ஷாங் சூ கலாசாரத்தில் ஆரம்பித்து அதற்கு அடுத்ததாக பின்பற்றப்பட்டு வரும் காலச்சக்கர தூண்கள் ஆகட்டும், இந்து இதிகாசத்தில் விஷ்ணு புராணத்தில் கூட பல இடங்களில் இந்த ஷாம்பலா நகரத்தை பற்றிய குறிப்புகளை பார்க்க முடிவதாக சொல்றாங்க மகாபாரதத்தில் கூட இது பற்றிய தகவல்கள் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றும் ஒரு செய்தி உள்ளது.
shambala mystery
இந்த ஷாம்பலா மாயநகரம் பற்றிய கருத்துகள் நமது நாடு மட்டுமின்றி சீனா ரஷ்யா இதுமட்டுமல்லாமல் நமது ஆசிய கண்டமே இந்த ஷாம்பலா இடத்தை பற்றிய கருத்துகளை கூறுகின்றனர்.
விஷ்ணு புராணத்தின் படி விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி இந்த ஷாம்பலா நகரத்தில் பிறப்பார் என்றும் இவர் தான் ஷாம்பலாவின் 25வது அரசு ஆட்சி புரிவார் என்பது மட்டுமில்லாமல் கலியுகம் முடிவடையும் காலத்தில்.
அதாவது த இந்த பூமியில் அதர்மம் அதிகமாகும்போது அந்த சமயத்தில் ஷாம்பலாவில் பிறக்கப்போவதாககூறப்படும் கல்கி அவதாரம் அங்க இருக்க ஒரு லட்சம் வீரர்களுடன் பூமிக்கு வந்து தீயவர்களை அழித்து பூமியில் அமைதியை நிலைநாட்டுவார் என்றும் அப்போது கலியுகம் முடிந்து சத்திய யுகம் ஆரம்பிக்கும் என்றும் புராணக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கல்கி அவதாரம் இந்து மதத்தில் மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கா என்றால் கண்டிப்பா இல்ல, கிறிஸ்து மதத்தில் இயேசுவின் இரண்டாம் வருகை, யூத மதத்தில் குறிப்பிடப்பட்டிருக்க திசியாவின் இரண்டாம் வருகையை இஸ்லாம் மதத்திலும் இதே மாதிரியான ஒரு தகவல் என உலகத்தோட பல முக்கியமான மதங்களிலும் இந்த கல்கி அவதாரம் பற்றி குறிப்பிடபட்டுள்ளது.
ஷாம்பலா என்ற இடம் உண்மையில் இருக்கா அப்படி இருந்தா அது எங்க இருக்கு என்ற கேள்விகளுக்கான பதில்கள் குழப்பம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் இந்த ஷாம்பலா மனிதர்களால் பார்க்க முடியாத 4-வது பரிணாமத்தில் இருப்பதாக கூட ஒரு தகவலை சொல்றாங்க அதைப்பற்றி பின்னாடி பார்க்கலாம் .
இப்போது இந்த மாயநகரம் இருப்பதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம், திபெத்திய புத்த மத தலைவர்கள் ஷாம்பலா நகரம் உண்மையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள், அதுமட்டுமில்லாம அதைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களையும் சொல்றாங்கங்க அத பத்தி அவர்கள் கூறியது அது ஒரு சிறிய கிராமம் நகரம் இல்லை அது ஒரு பெரிய சாம்ராஜ்யமாக பிரம்மாண்டமாக இருக்குமாம்.
அடுத்ததாக அந்த நகரத்தின் அமைப்பை பார்க்கும் போது 8 இதழ்கள் கொண்ட தாமரை மலர் போல இருக்கும் அதை சுற்றி பனிமலைகள் சூழ்ந்திருக்க அதுமட்டுமில்லாம இது 8 பிரிவுகளை கொண்டு அதில் பல பிரவுகளில் மக்கள் வாழ்ந்து வர்ராங்கனும் சொல்றாங்க.
அப்படி வாழ்ந்து வந்த மக்கள் எல்லோருமே எந்த விதமான நோய்க்கும் உட்படாமல் பல நூறு வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தோட வாழக் கூடியவர்களாக இருப்பார்கள் என்றும் இவங்க எல்லாருமே மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய செல்வங்களை செலவழிக்க வேண்டிய தேவைகளை இருக்காதுன்னும் சொல்றாங்க ஆனா இத தேடிப்போன பலரும் காணாமல் போயிருப்பதாகவும் உயிரை கூட விட்டிருக்கலாம் என சில அதிர்ச்சிகரமான தகவல்களையும் நம்மால் கேட்க முடிகிறது.
இப்படிப்பட்ட இடம் எங்க இருக்குனு பார்க்கும்போது முன்னர் சொன்ன மாதிரி இதற்கான விடையில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது என சொல்லலாம் உதாரணமாக இந்த இடமானது பஞ்சாபின் சட்லஜ் பள்ளதாக்கில் இருப்பதாக ஒரு தகவலும் இமாச்சல் பிரதேசத்தில் இருப்பதாக மற்றொரு தகவலும் இந்தியா பேஸ் பண்ணி சொல்றாங்க.
அதே மாதிரியே மங்கோலியாவில் சொல்லப்பட்ட கதைகளின்படி இந்த ஷாம்பலா சைபீரிய பள்ளத்தாக்குகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல தகவல்கள் கூறப்பட்டாலும் திபெத்தை சுற்றி இருக்கூடிய ஏதோ ஒரு பகுதியில் தான் இந்த நகரம் இருக்கலாம் என பலரும் உறுதியாக நம்பலாம் என்று சொல்றாங்க .அதற்கு வலுசேர்க்கும் விதமாக திபெத்தில் ஏதோ ஒரு பகுதியில் ஷாம்பலா செல்வதற்கான பாதை அமைந்திருப்பதாகவும் அதை பாதுகாக்க எட்டி என்ற ஒரு வித்தியாசமான உயிரிணம் ஒன்று அங்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படி ஒரு தகவல்கள் கூறப்பட்ட நிலையில் திபெத்திய புத்த மத கோட்பாட்டின்படி இந்த ஷாம்பலா நகரம் ஒருவரின் கர்ம பலன்களை பொருத்து அந்த நபர் எந்த தீங்குகளை செய்யாத நல்ல மனம் கொண்டவராக இருந்தால் மட்டுமே அந்த மாய நகரம் கண்களுக்கு புலப்படும் என கூறப்படுகிறது.
இந்த ஒரு கூற்று நான் முன்பே கூறியதுபோல் ஏன் ஷாம்பலா நான்காவது பரிணாமத்தில் இருக்கூடாது என ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஏனெனில் இந்த 4-வது பரிணாமம் என்ன என்பதை எவராலும் புரிந்து கொள்ள இயலவில்லை .
ஆனால் இந்த 4-வது பரிணாமத்தில் காலபயணம் என்பது சாத்தியப்படும் எனவும் கூறப்படுகிறது. இப்படி இந்த மாயநகரம் உண்மையில் இருக்கா என்ன என்பதை கண்டறிய ஹிட்லர் ஒரு குழுவையும் மற்றொரு குழு ஒரு தம்பதியினரும் திபெத்திய மலைத்தொடர்களை சுத்தி வந்தனர். இப்படி தம்பதிகளாக சென்ற நிக்கோலஸ் மற்றும் அவரின் மனைவி பல மலைகள் மீது ஏறியும் ஆய்வு மேற்கொண்டும் அவர்களால் ஷாம்பலா நகரத்தை கண்டறிய முடியவில்லை.
இரண்டாவதாக ஹிட்லரின் உத்தரவின்பேரில் சென்ற ஸ்காப்ர் தலைமையில் ஒரு குழு 1938-1939-ஆம் ஆண்டுகளில் மலைதொடர்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர் ஆனால் இவர்களாலும் ஷாம்பலாவை கண்டறிய முடியவில்லை ஆனால் இதற்கு பதிலாக அவர்கள் அதார்தா என்ற மற்றுமொரு பூமிக்குள் இருக்கும் மாய நகரத்தை கண்டுபிடித்தாக கூறப்படுகிறது.
இந்த இரு குழுக்களை தவிர இன்றுவரை பல ஆயிரம் பேர் இந்த ஷாம்பலா நகரத்தை தேடி வருகின்றனர். இப்படி தேடிசென்ற பலர் திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
உண்மையில் இப்படி ஒரு மாய நகரம் இருக்கா அல்லது ஒரு கட்டுக்கதையா என்பது எவருக்கும் தெரியாது ஏனெனில் இந்த நகரத்தை இதுவரை எவரும் பார்த்ததாக கூறியதில்லை அதற்கான ஆதாரங்களும் இல்லை.
ஆனால் இதை பெரும்பாலானோர் நம்ப காரணம் இந்த ஷாம்பலாவில் தான் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி பிறப்பதாக கூறப்பட்டதால் மற்றும் கலியுகம் பற்றிய கணிப்புகளும் உண்மையானதால் இந்த ஷாம்பலாவும் இருக்கலாம் பல பேர் நம்புகின்றனர்.