9-வது புரோ கபடி லீக் போட்டிகள் விரைவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில், மொத்தம் 12 அணிகள் களமாட இருக்கின்ற நிலையில், அதற்கான வீரர்களின் 2 நாள் ஏலம் (ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில்) மும்பையில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். நான்கு பிரிவுகளில் ஏலம் நடைபெறும் நிலையில், ஒவ்வொன்றின் அடிப்படை விலையை பின்வருமாறு பார்க்கலாம்.
12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களின் 2 நாள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் 500 வீரர்கள் உள்ளனர். முதல் நாளில் வியப்பூட்டும் அளவுக்கு அதிகபட்சமாக பவான் செராவத் ஏலம் போனார். அவரை ரூ.2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது. விகாஸ் கன்டோலாவை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு புல்சும், பாஸல் அட்ராசலியை ரூ.1.38 கோடிக்கு புனேரி பால்டனும் எடுத்தது.
பிரிவு அ: ரூ. 30 லட்சம்
பிரிவு ஆ: ரூ. 20 லட்சம்
பிரிவு இ: ரூ.10 லட்சம்
பிரிவு ஈ: ரூ. 6 லட்சம்
அணியில் வீரர்களை தேர்வு செய்வதைப் பொறுத்தவரை, அனைத்து புரோ கபடி லீக் அணிகளும் தங்கள் அணியில் குறைந்தபட்சம் 18 வீரர்களையும் அதிகபட்சமாக 25 வீரர்களையும் கொண்டிருக்கலாம். முன்னதாக, மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 111 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இவர்களில் எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் (ERP) பிரிவில் இருந்து 19 பேர், தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்கள் (RYP) பிரிவில் 13 பேர் மற்றும் புதிய இளம் வீரர்கள் (NYP) பிரிவில் 38 பேர் அடங்குவர்.
இது தவிர, நடப்பு சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் 2021 இன் முதல் இரண்டு அணிகளில் இருந்து 24 வீரர்கள் இடம் பெறுகிறார்கள்.
புரோ கபடி லீக் போட்டியின் முதல் நாள் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏல அமைப்பாளராக மூத்த விளையாட்டு தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் சாரு ஷர்மா இருந்தார்.
நேற்றைய முதல் நாள் ஏலம் தொடக்கம் முதலே விறுவிறுப்புடன் காணப்பட்டது. 12 அணிகளும் தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். இதில் வியப்பூட்டும் அளவுக்கு அதிகபட்சமாக பவான் செராவத் ஏலம் போனார். அவரை ரூ.2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி வசப்படுத்தியது.
விகாஸ் கன்டோலாவை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு புல்சும், பாஸல் அட்ராசலியை ரூ.1.38 கோடிக்கு புனேரி பால்டனும் வாங்கினர். ஆல்ரவுண்டர் வீரரான சந்தீப் நர்வால், ஏலத்தின் முதல் நாளில் விற்கப்படாமல் போய்விட்டார்.