நீங்க உட்காரும் விதமே உங்க ஆளுமைய சொல்லும்

பொதுவாக உடலில் உள்ள மச்சங்களை வைத்து ஒருவரின் குணம் எப்படி இருக்கும் என்பதை சொல்வது வழக்கம். அது போல் கால் விரல்கள், கை விரல்கள், நெற்றி அமைப்பு உள்ளிட்டவைகளை வைத்தும் ஒருவருடைய குணம் குறித்து கூறப்படும். மேலும் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தை வைத்தும் அந்த நபரின் கல்வி, திருமணம், உத்தியோகம் உள்ளிட்டவை குறித்தும் சொல்லப்படுகின்றன. அது போல் ஒருவர் உட்காரும் ஸ்டைலை வைத்தே ஆளுமை பண்புகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லலாம்.

முழங்கால்கள் முழங்கால்களை நேராக வைத்து அதன் மேல் இரு கைகளை வைத்துக் கொண்டு உட்காருபவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் உங்களையும் உங்கள் திறமைகளையும் நம்புவீர்கள். எப்போதுமே உங்களை பற்றி நேர்மறை கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள். இந்த ஸ்டைலில் உட்காருபவர்கள் பொதுவாக புத்திசாலிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள், டைம் மேனேஜ்மென்டை கடைப்பிடிப்பவர்கள்.

தாமதம் எப்போதும் எந்த தருணத்தில் உங்களால் தாமதம் என்ற பேச்சே இருக்காது. அது போல் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். கடினமான சூழ்நிலைகளில் கூட அமைதியாக இருக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறது. அது போல் நீங்கள் முழங்கால்களை பிரித்து வைத்து கைகளை தொடை மேல் வைத்து அமருவீர்களா?

சுயநலம் மிக்கவர்கள் எப்போதுமே உங்களை உயர்வாகவே கருதுவீர்கள். சுயநலம் மிக்கவர்களான இருப்பீர்கள். எப்போதும் கவலைப்படுவீர்கள். அதே போல எப்போதும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுக்கு பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் இருக்கும். தாங்கள் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கொள்வார்கள்.

பின்விளைவுகள் பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் சட்டென்று எதையாவது பேசிவிடும் தன்மையும் உங்களுக்கு உண்டு. எளிதில் சலித்து கொள்வீர்கள். குழந்தையை போல் உங்களையும் கண்காணிக்க வேண்டும். அது போல் கால்மேல் கால் போட்டு உட்காருபவரா, ஆம் எனில் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை கொண்டவர்களாகவே இருப்பீர்கள்.

கற்பனை திறன் கற்பனை திறனும் அதிகம். மிகவும் கனவு காண்பவர். நிஜ உலகில் இருந்து விலகி அடிக்கடி சிந்தனையில் தொலைந்து போவீர்கள். பெரிய ஆளுமை கொண்டவர். எனினும் கால்களை குறுக்கே போட்டு உட்காருவதால் தற்காப்பு மனப்பான்மையும் வெளிப்படுகிறது. இந்த உட்காரும் பொசிஷனில் உங்கள் பாதம் எதிரே இருக்கும நபரை நோக்கி இருந்தால் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக அர்த்தம்.

கணுக்கால்கள் கணுக்கால்களை குறுக்கே வைத்து உட்காரும் பழக்கமுடையவரா நீங்கள்? இப்படித்தான் பிரிட்டன் அரச குடும்பத்தினர் உட்காருவர். நீங்கள் இப்படி உட்கார்ந்தால் நீங்கள் ராஜபரம்பரையினர் போன்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவீர்கள். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். அது போல் உங்கள் குறித்த ரகசியங்களை யாரிடத்திலும் பகிரவே மாட்டீர்கள்.

நிதானம் கணுக்காலை முழங்காலுக்கு மேல் போட்டு உட்காருபவரா நீங்கள்? அப்படியென்றால் நம்பிக்கை மற்றும் ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பதை பிரதிபலிக்கிறது. நிதானமாக இருப்பீர்கள், உங்கள் விருப்பங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவேகம் அதிகமாக இருக்கும். அழகாக காட்டிக் கொள்ள மெனகெடுவீர்கள். நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்பதை போல் விடாபிடியாக உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்கள். இந்த 5 உட்காரும் ஸ்டைலை நீங்கள் எந்த ரகம் என பார்த்து “ஜோதிடம்” சரியா என பார்த்து சொல்லுங்கள் மக்களே!