வணக்கம்! இந்த பதிவில் நீங்கள் இதுவரை கேள்விபடாத சில சுவாரஸ்யமான(random facts) தகவலை காண்போம்.
மரங்களின் மதிப்பு

பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின் விகிதம் படி பார்த்தால்,அதாவது இந்த விண்வெளியில் அல்லது பிரபஞ்சத்தில் இருக்கூடிய கிரகங்களில் மரமானது நம் பூமியில் மட்டும்தான் உள்ளது. இதானல் வைரத்தை விட மரத்தின் விலை உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே.
கழிப்பறையில் கழிக்கும் நேரம்

சராசரியாக ஒரு ஆண் வருடத்திற்கு 7 மணிநேரம் அமைதிக்காக குளியலறையில் அல்லது கக்கூஸில் உட்கார்ந்திருப்பார் என்று ஒரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் வலிமையான பொருள்

கிராஃபின்(GRAPHENE) உலகின் வலிமையான பொருள் அதுமட்டுமல்லாமல் எடை குறைந்த மிக மெல்லிய பொருளும் இதுதான். இது இரும்பை விட 200 மடங்கு வலிமையானது. காகிதம் போல் இருக்கும் மெல்லிய தாளை உடைக்க பென்சிலில் ஒரு யானை நிக்க வைத்தால் கூட முடியாது.
மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் உள்ளாடை
2017 ஆம் ஆண்டில், மெக்சிகோவைச் சேர்ந்த 18 வயது மாணவர், ஜூலியன் ரியோஸ் கான்டு என்பவர் , அவரது தாயார் மார்பக புற்றுநோய் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இறந்து போன பிறகு பயோசென்சர்களைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய ப்ராவை உருவாக்கினார்.
T-SHIRT உருவான கதை

டி-ஷர்ட் 1904 இல் கண்டுபிடிக்கப்பட்டது.இது கண்டுபிடிக்க முக்கிய காரணம் சாதரன சட்டைகளில் இருக்கும் பட்டன்களை தைக்கவோ மாற்றவோ முடியாத சிங்கிள் ஆண்களுக்கு இது விற்பனை செய்யப்பட்டது.
நரிகளின் குணம்

ஒரு பெண் நரி இறந்துவிட்டால், அந்த நரியின் துணை என்றென்றும் தனிமையில் இருக்கும், ஆனால் ஒரு ஆண் நரி இறந்துவிட்டால் பெண் நரி உடனடியாக ஒரு புதிய துணையைத் தேடிக்கொள்ளும்.
மகிழ்ச்சியா கவலையா

சிலர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போதே மிகிழ்ச்சியாக இருப்பதை நினைத்து பயப்படுவார்கள், ஏனென்றால் விரைவில் ஏதாவது சோகம் நடக்கப் போகிறது என்று நினைப்பார்களாம். இது Cherophobia என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் விஷமா

ஆப்பிள் விதைகளில் சயனைடு உள்ளது எனவே நீங்கள் 200 விதைகளை மென்று சாப்பிட்டால், ஒரு நிமிடத்தில் நீங்கள் இறந்துவிடுவதற்கான வாய்புகள் அதிகமாக உள்ளது எனவே ஆப்பிள் சாம்பிடும்போது விதையை நீக்கிவிட்டு சாப்பிடுங்கள் .
தாஜ்மஹாலின் வரலாறு

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய குண்டுவீச்சுகளில் இருந்து தப்பிபதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தாஜ்மஹாலின் குவிமாடம் மூங்கில் சாரக்கட்டுகளால் மூடப்பட்டிருந்தது என்பது நம்மை வியப்படைய செய்கிறது.