இந்த உலகில் பல்வேறு வகையான வைரஸ்களை பற்றி கேள்விபட்டிருந்தாலும் இந்த ஜாம்பி வைரஸ் என்பது ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்த ஜாம்பிகள் என்பதனை நீங்கள் அதிகம் ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். இந்த ஜாம்பிகள் என்பது உண்மையா இவை இருக்கிறதா என்பதனை பலருக்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.இந்த ஜாம்பிகள் பற்றிதான் இன்றையபதிவில் காணலாம்.
ஜாம்பி என்றால் என்ன(what is zombies)
ஜாம்பி என்பது இறந்த ஒரு உடலின்(பிணம்) மீது ஒரு வைரஸோ அல்லது ஒரு பூஞ்சையோ நமது உடலையோ அல்லமு மூளையையோ கட்டுபடுத்தி உடலை மீண்டும் நடமாடச் செய்யும் இவ்வாறு செய்வதால் அதன் மேல் இருக்கும் வைரஸ் மற்ற உயிரினங்களிலும் பரவி அதனையும் ஜாம்பியாக மாற்றும். இதனயே நாம் ஜாம்பபி என்கிறோம். இந்த ஜாம்பிகள் படங்களில் காட்டுவதுபோல் மிகவும் கொடூரமானதா உண்மையில் இவை இருக்கிறதா இவற்றால் நமக்கு ஆபத்து வருமா என்பதனையும் விரிவாக காண்போம்.
ஜாம்பி செயல்கள்
ஜாம்பி வைரஸ் இருப்பது என்பது உண்மையே. ஆம் இந்த ஜாம்பிகள் உலகில் இருக்கின்றன இந்த ஜாம்பிகள் மனிதர்களுக்கு வருவது போல் படங்களில் காட்டப்படுகிறது ஆனால் உண்மையில் இந்த ஜாம்பி வைரஸ் என்பது இதுவரை பறவை பூச்சி விலங்குகள் என பல உயிரினங்களுக்கும் வந்துள்ளது. இந்த வைரஸ் வந்தால் மூளையின் நரம்பு துண்டிக்கபட்டு நமது உணர்ச்சிகளை செயலிழக்கச் செய்து நம் முழு உடலையும் அந்த வைரஸ் கட்டுபடுத்தி செயல்படுத்தும். இந்த ஜாம்பி வைரஸால் மாற்றப்பட்டவர் அவருக்கு பசி இல்லையானாலும் மூளையின் கட்டுபாட்டால் அதிக பசி காரணமாக அடுத்தவரை கடித்து தன் பசியை போக்கிகொள்ளும் என படங்களில் அதுபோல் பார்த்திருப்போம் அதுபோலதான் இந்த வைரஸானது விலங்குகளிடம் வேலைசெய்கிறது.
எறும்புகளில் ஜாம்பி
இந்த ஜாம்பி அறிவியல் படி உண்மையானாலும் இதுவரை மனிதருக்கு வரவில்லை அதற்கு பதிலாக ஒரு எறும்பிற்கு வந்துள்ளது. இது ஏன் எறும்புகளுக்கு வருகிறது என்றால் ஓபியோகாட்டிசஸ் என்ற பூஞ்சையால் பாதிக்கப்பட்டு ஜாம்பியாக மாறுகிறது . இந்த பூஞ்சை எறும்பின் உடலில் ஒரு முட்டையாக உள்ளே செல்லும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த எறும்பின் உடலின் பாகங்களை சாப்பிடும் அந்த எறும்புக்கே தெரியாமல் ஒரு லார்வாவாக அதன் உடலில் வளரும் இதனால் அந்த எறும்பு தனது செயல்களிலிருந்தும் நடவடிக்கையிலிருந்தும் மாறுபடும். இதனால் எறும்பு தன்னயே மறந்து லார்வாவின் கட்டுபாட்டிற்கு செல்லும். எறும்புகளுக்கு உயரம் என்பது பிடிக்காது ஆனால் இந்த பூஞ்சையின் கட்டுபாட்டால் எறும்பானது உயரமான இடத்திற்கு செல்லும் பிறகு அந்த பூஞ்சையால் எறும்பின் மூளை அரிக்கபட்டு உயரமான இடத்தில் இருக்கும் எறும்பானது தன் தலையை தானே முட்டிக்கொள்ளும் இவ்வாறு பூஞ்சை கட்டுபாட்டில் இருக்கும் எறும்பு இறந்து லார்வாக இருக்கும் பூஞ்சை ஈ யாக மாறி எறும்பின் தலையிலிருந்து வெடித்து வரும். இப்படி இந்த பூஞ்சை எறும்பை கட்டுபடுத்தி முழுமையாகஅழிக்கும்.
ஜாம்பியாக மாறும் கரப்பான்பூச்சி
நாம் வீட்டில் சாதரணமாக கரப்பானபூச்சி பார்த்திருக்கலாம் இந்த கரப்பான்பூச்சியும் ஜாம்பியாக மாறுமாம். வீட்டில் காணப்படும் இந்த சிறு குழவியானது கரப்பான் பூச்சியை தாக்கி அதன் உடலுக்குள் சென்றுவிடும் இதனால் கரப்பான்பூச்சி ஜாம்பியாக மாறிவிடும் . இந்த கரப்பான்பூச்சி உயிருடன் இருந்தாலும் தனக்கான உணவினை எடுத்துக்கொள்ளாது. ஆனால் இந்த கரப்பான் பூச்சியின் வயிற்றில் குழவியின் குஞ்சிகள் வளர ஆரம்பித்துவிடும். இவ்வாறு குழவி குஞ்சிகள் கரப்பான்பூச்சியின் வயிற்றில் நன்றாக வளர்ந்துகரப்பான்பூச்சி சாகும் தருவாயில் குழவி குஞ்சிகள் தானக வெளி வரும். இவ்வாறுகரப்பான்பூச்சி உயிருடன் இருந்தாலும் அது குழவி கட்டுபாட்டில் அதன் குஞ்சிகளை வளர்த்து இறந்துவிடும் இவ்வாறு நடைபெறும் செயல்தான் ஜாம்பி என குறிப்பிடலாம்.
எலிகளில் ஜாம்பி
டோகோ பிளாஸ்மா எனப்படும் ஒருவகை ஒட்டுண்ணி எலியை தாக்கினால் எலியின் மூளையில் உள்ள சில நரம்புகளை துண்டித்து அதனை எலிகளின் பொதுவான பண்பிலிருந்து மாற்றுமாம். அதாவது எலியின் பொதுவான பண்பு பூனை பார்த்து பயப்படுவதுதான் ஆனால் இந்த ஒட்டுண்ணியால் பாதிக்கபால் பூனையை பார்த்து எலி பயப்பிடாமல் எதிர்த்து நிற்குமாம். அதுபோல் அங்கும் இங்கும் என அலைந்து திரிந்து தனக்கு தேவையானதை சாப்பிடாமல் ஜாம்பாயாக மாறி ஒட்டுண்ணி கட்டுபாட்டால் கடைசியில் இறந்துவிடும்.
ஜாம்பி வர வாய்ப்புகள்
இதேபோல் நிஜ வாழ்வில் ஜாம்பி சிலந்தி , நண்டு , ஈ என பல உள்ளன ஆனால் நாம் இதுவரை மனிதனில் உண்டு என எந்த அறிவியல் அறிஞரும் கூறவில்லை. இப்படி மனிதனை ஜாம்பியாக மாற்றும் வைரஸ் பனிஉறைந்து இருக்கும் இடத்தில் பனிபாறைகளின் அடியில் இருப்பதாக அறிவியலாளர் கூறுகிறார்கள்.
சைபீரியாவில் 100 அடி ஆழத்தில் துளையிட்டு ஒரு வைரஸை கண்டறிகின்றனர். இந்த வைரஸ் பெயர் பிதோவைரஸ் செபேரிக்கம் ஆகும். இது இந்த கால கட்டத்தை சேர்ந்தவை அல்ல 30000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும் இது மிகவும் ஆபத்தை தரக்கூடிய வைரஸ் ஆகும் ஏனெனில் இது ஒரு செல் உயிரியான அமீபாவால் தாக்கப்பட்டு ஜாம்பியாக மாறி இறந்துவிடுமாம் தற்போது இது அதிக அளவில் கண்டறியப்பட்டால் மனிதரும் ஜாம்பியாக மாறலாம் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
கனடா,ரஷ்யா போன்ற நாடுகளில்பனிபாறைகள் உறைந்து இருக்கும் இவை, தற்போது மீத்தேன் வாயு வருவதால் அதிக வெப்பநிலையால் பனி அதிகஅளவுஉருகும் இவ்வாறு உருகுவதால் பனியின் அடியில் இருக்கும் பல ஆபத்தான நுண்ணுயிரி வைரஸ் மீண்டும் நம் உலகிற்கு உயிருடன் வரலாம் அந்த வைரஸ்கள் வந்தால் மனிதனுக்கும் ஜாம்பி பரவலாம். இவ்வாறு வரலாம் என்று கூறப்படும் வைரஸ் தான் பிதோ வைரஸ் சிபேரிகன் ஆகும்.
விண்வெளியிலிருந்து வரும் ஜாம்பி வைரஸ்
நம் பூமியை விடுத்து விண்வெளியில் பல வைரஸ்கள் உள்ளன. நிலவை தொட்ட நீல்ஆம்ஸ்ட்ராங் அவர் நிலவில் கால் வைத்த பிறகு அவரை பூமிக்கு அப்படியே அழைத்து வரவில்லை அவரை தனிமைபடுத்தி நெடுநாள் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தனிமையில் வைக்கப்படுகிறார் . ஏன் இவ்வாறு இவரை தனிமைப்படுத்த காரணம் நிலவில் சில வைரஸ்கள் இருக்க வாய்ப்பு உள்ளது அந்த வைரஸ்கள் நீல்ஆம்ஸ்ட்ராங் உடம்பில் வந்திருக்கலாம் அவை பூமிக்கு வந்தால் உயிர்பெறலாம் என நினைத்து அவரை தனிமைப்படுத்தினர். இவ்வாறு விண்வெளியில் இருக்கும் வைரஸ்கள் ஜாம்பி போன்ற நோயை உண்டாக்கும் அளவிற்கு ஆபத்தானது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலன்களில் கூட திரும்ப பூமிக்கு வரும்போது அதில் எதும் வைரஸ்கள் இருக்ககூடும் என அதனை மிகவும் சிறந்த உயிரியல் ஆராய்ச்சி கூடத்தில் வைத்து அதனை சோதனை செய்வார்கள். இவ்வகையான ஆராய்ச்சி கூடங்கள் மிகக் கொடுரமான நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்வதற்காக (BSL4 lab) உயிரியல் ஆராய்ச்சி வைத்துள்ளனர். இதனால் தான் NASA விண்வெளி விண்கலனை ஆராய்ச்சி செய்ய கடும் பாதுகாப்பு வைத்துள்ளது.
எனவே ஜாம்பி வைரஸ் நம் பூமியிலிருந்து மட்டும் வரும் என்று அவசியம் அல்ல விண்வெளியிலிருந்தும் வரும் இனி வரவிருக்கும் காலங்களில் கொரொனா போல் ஜாம்பியும் வர வாய்ப்புள்ளது என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதில் குறிப்பிடதகுந்த விசயம் என்னவென்றால் இப்படி எதிர்காலத்தில் ஜோம்பிகள் வந்தால் அதனை எதிர்த்து போரிடும் வகையில் அமெரிக்க இராணுவம் ஒரு குழுவை அமைத்துள்ளது. எனவே இந்த உலகம் எப்படி மாறும் என்பது எவருக்கும் தெரியாது.
தொடர்புடையவை: இலுமினாட்டிகள் இருப்பது உண்மையா