அனைவரையும் கவர்வது எப்படி how to attract anyone in tamil

இன்னைக்கு நான் உங்களுக்கு, ஒருத்தரை எப்படி 90 secondsல Attract பண்றதுனும்,

அதே 90 secondsல உங்களை அவங்களுக்கு எப்படி பிடிக்க வைக்கனும்ன்றதையும் பத்திதான் சொல்ல போறேன்.

இங்க Author சொல்றது என்னவோ, வெறும் 90 secondsதான்.

ஏன்னா, பல ஆராய்ச்சிகளிலயும், ஏன் நமக்கேகூட இப்போலாம் நம்மளோட கவனம் ஒரு விஷயத்தின்மேல ரொம்ப கம்மியாகிருக்குனு சொல்லலாம்.

உதாரணமா,

Magazine விளம்பரங்கள் எல்லாமே, முதல் 2 secondல நம்மளோட கவனத்தை ஈர்க்குறதா அமைஞ்சுருக்கு,

அப்படி நீங்க அந்த 2 secondsல impress ஆகிட்டீங்கனாதான், அந்த adஐ முழுவதுமா பார்ப்பீங்க இல்லையா?

அப்படி நீங்க அந்த adக்கு impress ஆகதப்போ, சட்டுனு வேற பக்கம் மாத்திருவீங்க இல்லையா?

அதேபோலதான்,

மக்களும், தங்களோட கருத்தை ஒருத்தர்மேல easyஆ form பண்ணிருவாங்க,

குறிப்பா, அவங்ககூட நாம்ம Conversation வச்சுக்குற, கம்மியான நேரத்துலயே நம்மமேல அவங்க Opinionஐ வெளிப்படுத்திருவாங்க.

அதனாலதான் இங்க, ஒரு நல்ல impressionஐ ஏற்படுத்துறதுக்கு, ஆரம்பம்ன்றது முக்கியமானதா இருக்கு.

அப்படி ஆரம்பத்துலயே ஈர்த்துட்டா, நம்மளால அவங்களோட கவனத்தை சுலபமா பெற முடியும்.

இது, நம்மளோட Personal & Professional lifeக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருக்குது.

பல பேர் இதை புரிஞ்சுக்குறதுல தோல்வி அடஞ்சுர்ரனால, ஒருத்தரை முதல் தடவை சந்திக்குறப்போ என்ன பேசனும்ன்றது தெரியாம போகுது.

இதனாலயே அவங்க Nervousஆகுறாங்க, அதனால ரொம்ப Awkwardஆ நடந்துக்குறாங்க.

முடிவுல, அவங்களுக்கு நமக்கு எதிரா இருக்க opposite personகூட, relation, இல்ல Bondஐ ஏற்படுத்த முடியாம தோல்வி அடஞ்சுர்ராங்க.

குறிப்பா, பல நேரம் அவங்களுக்கு அவங்களையே பிடிக்காம போய்ருது,

அதனால, மறுபடியும் அவங்ககிட்ட போய் பேசகூட விரும்பமாட்றாங்க.

காரணம், First Bad impression.

So, உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு situation நடந்திட கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்கனா

இல்ல Peopleஓட Strong Connectionஐ ஏற்படுத்துறது எப்படினு நானும் கத்துக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கனா,

நீங்க உங்களோட பேசுறவங்கள Impress பண்ணனும்னு நினைக்கிறீங்கனா, இந்த வீடியோல இத பத்தி தான் நான் Share பண்ண போறேன்.

மத்தவங்க கிட்ட எப்படி பேசணும்?

நாம என்ன பேசணும் ?

அப்படியே இது போல பல விஷயங்களை நாம இந்த பதிவு மூலமாக Understand பண்ணிக்கலாம்.

இதெல்லாம் Understand பண்றதுக்கு, நமக்கு Emotional Level Connection அப்படின்றது இருக்கணும்

இந்த connection இருந்தா உங்களால ஒரு Professional Communicatorஆ மாற முடியும்.

சரி வாங்க நம்ம தொடங்கலாம்.

இந்த விஷயங்கள் எல்லாமே நமக்கு possible ஆகணும் அப்படின்னா நம்ம முதல்ல மூணு விஷயங்களை understand பண்ணிக்கணும்.

முதல் விஷயம் meeting,

ரெண்டாவது விஷயம் Rapport,

மூணாவது விஷயம் Communication.

நீங்க ஒரு personஐ meet பண்ண போறீங்க, அவங்க கூட ஒரு Communication உருவாக்க போறீங்க அப்படின்னா, meeting and communication, அப்படினு இந்த ரெண்டு முக்கியமான stepsக்கும் இடைப்பட்டது தான் இந்த 90 seconds.

இந்த 90 secondல தான் நீங்க உங்களோட Rapportஐ Create பண்றது மூலமா, உங்களுக்கு எதிரா இருக்கு ஒரு personஐ Impress பண்ண முடியும்.

இப்படி Impress பண்றது மூலமா அவங்களோட, Emotional Level Connectionஐ Form பண்ண முடியும்.

சரி Rapport அப்படின்னா என்னன்னு நான் உங்களுக்கு அப்புறமா explain பண்றேன், கவலைப்படாதீங்க.

இந்த points எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியம்.

அதனால நான் எல்லா pointsஉம் உங்களுக்கு Detailஆ Expalin பண்றேன்.

வாங்க இப்ப Number 1 Start பண்ணலாம்.

#1. Meeting

ஒருத்தரை நீங்க முதல் தடவை சந்திக்கிறப்போ மூணு இல்ல நாலு secondக்குள்ள அவங்கள சரியா Impress பண்ணிட்டீங்க அப்படின்னா,

அவங்களுக்கு நீங்க நண்பக தன்மையாவும்,

உண்மையா உள்ள நபராவும்,

பாதுகாப்பு உள்ள நபராவும் அவங்களுக்கு நீங்க தெரிவீங்க.

இது Rapport Create பண்றதுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். நான் இப்ப ஒரு ஐந்து, சின்ன Steps சொல்ல போறேன்.

அது மூலமா உங்களால ஒரு Right Impressionஐ 3 இல்ல 4 நொடிக்குள்ள உருவாக்கிட முடியும்.

1.Be Open

நீங்க Open Body Languageஐ பத்தி கேள்விபட்டுருகீங்களா?

Open Body Language அப்படினா, என்ன அர்த்தம்னா,

உதாரணமா நீங்க யார்கிட்டயாவது பேசுறீங்க அப்படின்னா,

உங்க கையை இறுக்கமா மூடிகிட்டு,

இல்ல நீங்க உட்கார்ந்து இல்ல நின்னுட்டு இருக்கீங்கணா

ரொம்ப இறுக்கமா நிக்கிறீங்க இல்ல இருக்கமா உக்காந்து இருக்கீங்க அப்படின்னா,

இந்த எல்லா Body Languageஉம் Closed Body Language அப்படின்னு சொல்றாங்க.

இதேது நீங்க உங்க கைகளை விரிச்சு,

உங்க கால்களுக்கு சரியான இடைவெளியை கொடுத்து நிக்கிறீங்க இல்ல உட்கார்ந்திருக்கீங்க அப்படின்னா,

இது எல்லாமே Open Body Language.

அதனால எப்பயும் Open Body Languageஓட இருக்கணும்.

இப்படி நீங்க Open Body Languageஓட இருந்தா, உங்களால ஒரு இம்ப்ரெஸ்சிவ் ஆன நபரா இருக்க முடியும்.

அடுத்ததா பார்க்க போற நாலு Pointஉம் Open Body Languageஓட சம்பந்தபட்டதுனால,

நீங்க முதல்ல, Open Body Languageaஐ Followபண்ணணும்.

2. Eye Contact

Communication Related, அப்படினாலே இந்த Eye Contact ரொம்ப powerfulஆனது.

நீங்க ஒருத்தர் கிட்ட பேசுறப்போ,

நீங்க eye contactஓட பேசினா நீங்க ரொம்ப Confidentஆன personஆவும் ஒரு attractiveவான personஆவும் மத்தவங்க கண்ணுக்கு தெரிவீங்க.

அப்படி இல்லாம நீங்க சரியா Eye contact பண்ணலனா, நீங்க Nervousஆ இருக்கீங்க அப்படின்றது தெரிஞ்சுரும்.

நீங்க Nervousஆ இருந்தா, நீங்க பேசுறது பொய்னு கூட நினைச்சுருவாங்க.

இல்லனா நீங்க விருப்பம் இல்லாம

Uninterestedஆ இருக்கீங்கன்னு கூட நினைக்க வாய்ப்பு இருக்கு.

அதுக்காக Eye contact make, பண்ணனும்ன்றதுக்காக,

நீங்க எங்கையுமே பார்க்க கூடாது அப்படின்னு அர்த்தமில்ல.

நீங்க eye contact Maintain பண்ணனுமே தவிர,

எப்பயுமே அதை Maintain பண்ணனும்னு அவசியம் இல்ல.

உங்களோட Situationக்கு ஏத்த மாறி, Eye contact Maintain பண்ணனும்னா பண்ணலாம்,

இல்ல பண்ணலனாலும் பண்ணாம இருக்கலாம்.

தேவைப்படாத நேரங்களில eye contact பண்ணனும் அப்படின்னு அவசியம் இல்ல.

தேவை இல்லாத நேரங்களில நீங்க Eye contact பண்றப்போ, நீங்க வித்தியாசமா உணர்றதை பார்க்கலாம்.

3. Beam

நீங்க eye contact பண்ணதுக்கு அப்புறம் நீங்க கண்டிப்பா பண்ண வேண்டிய விஷயம் உங்களுக்கு எதிரா இருக்க ஒரு personகிட்ட சிரிச்சுக்கிட்டே Smileஓட பேசணும்.

இப்படி பேசுறது உங்களோட Positive Attitudeஐ reflect பண்ணுது.

and இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோங்க,

நீங்க Genuineஆ, Frienldlyஆ சிரிக்கணுமே தவிர, அவங்களுக்கு கோவம் வர மாதிரி இல்ல, வித்தியாசமா சிரிக்க கூடாது.

4. Greeting

அதாவது நீங்க Conversation பண்ண ஆரம்பிக்குறப்போ,

ஒரு Greetingஓடயு,, good toneஓடையும்,

Full of energyஓடையும் start பண்ணனும்.

Hi, hello ,namaskar அப்படின்னு உங்களுக்கு தோணுறது போல start பண்ணலாம்.

இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோங்க!!

நீங்க எவ்வளோ நல்லா ஒருத்தர் கிட்ட உங்களை நீங்க introduce பண்றீங்களோ, அது போலவே மத்தவங்களும் உங்ககிட்ட அவங்களை introduce பண்ணுவாங்க.

and இதுல இருக்க இன்னொரு விஷயம் என்னன்னா ஒருத்தங்கள பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கான ஒரு சரியான வாய்ப்பும், நீங்க Greetingஓட பேசுறப்போ ஏற்படுது.

உதாரணமா நீங்க ஒருத்தரை பார்த்துட்டு ஹலோ மட்டும் சொன்னீங்கன்னா, எதிர்ல இருக்க நபரும் ஹாய் இல்ல ஹலோ சொல்லிட்டு அந்த conversation முடிச்சுக்குவாங்க.

அப்போ அந்த conversationனை வித்தியாசமாவும் ஆக்வேர்ட் ஆவும் ஆகிடும்.

ஆனா நீங்க ஹாய் சொன்னதுக்கு அப்புறம்

என் பேரு சுராஜ், நான் youtubeரா இருக்கேன்னு நீங்க சொன்னீங்கனா,

உங்களுக்கும் ஒரு Big reply அவங்ககிட்ட இருந்து வரும்.

அவங்களும் அவங்களோட பேரு ரவி, நான் ஒரு ஆர்கிடெக் அப்படினு இன்னும் அதிகமான தகவலை சொல்லுவாங்க.

இது ஒரு பெரிய எக்ஸாம்பிளா இல்லன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும், இத நீங்க புரிஞ்சிருப்பீங்க.

நீங்க எவ்வளவு நல்லா ஒருத்தர் கிட்ட Introduce உங்களை பண்றீங்களோ அந்த அளவு ஒரு பெரிய replyய நீங்களும் எதிர்பார்க்கலாம்.

இதன் மூலமா உங்களோட conversation இன்னும் நல்லா போகும்.

5. Lean

நீங்க ஒருத்தர்ட்ட பேசுறீங்க அப்படின்னா லைட்டா குனிஞ்சு பேசலாம். அதுக்காக ரொம்ப குனியக் கூடாது.

இப்படி நீங்க லைட்டா குனஞ்சி பேசறது மூலமா,

நீங்க அவங்களுக்கு இன்ட்ரஸ்டா இருக்கீங்க,

அவங்களோட பேச்சைக் கேட்க ஆர்வமா இருக்கீங்க அப்படின்றது அவங்களுக்கு புரிய வரும்.

இது அவங்கள ரொம்ப கம்பர்டபிளா ஆக்கும்.

உங்ககிட்ட எல்லா விஷயமும் ஷேர் பண்ணுவாங்க.

நீங்க ஆப்போசிட் செக்ஸ்ல இருக்க ஒருத்தர meet பண்றப்ப இதை பண்ண கூடாது

அப்படி பண்றப்போ அது Awkwardஆன Situationsஐ உருவாக்கலாம்.

அடுத்ததா நம்ம பாக்க போறது

#2 Establishing A Rapport.

இது எல்லாப் பகுதியை விடவும் ரொம்ப முக்கியமான பகுதி.

ஏன்னா இங்க தான் நீங்க இன்னொருத்தங்களோட ஒரு மெண்டல் கனெக்ஷனையும், எமோஷனல் லெவல் கனெக்ஷனையும் ஏற்படுத்த வேண்டியதா இருக்கும்.

இது மூலமா தான் உங்கள மத்தவங்க விரும்ப தொடங்குவாங்க.

அதனால இந்தப் பகுதியை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமானது.

எல்லாருக்குமே தெரியும் மனிதர்கள் எல்லாரும் ஒரு எமோஷனல் கிரியேச்சர்ஸ் அப்படினு.

ஏன்னா நாம யாரும் முடிவுகளை நம்ம மூளையிலிருந்து எடுக்கறது இல்ல, நம்ம ஹார்ட்ல இருந்து தான் எடுக்குறோம்.

அப்படி ஒருத்தவங்களோட emotional connectionஐ ஏற்படுத்திக்க இந்த Rapport form பண்றது நமக்கு ரொம்ப Helpfulஆ இருக்கும்.

அதை எப்படி ஃபார்ம் பண்றதுன்னு பார்க்கலாம் வாங்க.

1.Attitude

சில நேரம் உங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இல்ல ஃபேமிலி பிரண்ட் சோகமாவோ இல்ல கோவமாவும் இருக்கிறப்போ அவங்க கிட்ட போயி என்னாச்சு எல்லாமே ஓகேவான்னு கேக்குறீங்க.

அந்த நேரத்துல அவங்க ஒன்னுமில்ல, எல்லாமே ஓகே, நான் நல்லா இருக்கேன் அப்படின்னு சொல்லுவாங்க.

அதுக்கு அப்புறமா உங்களுக்கு அவங்க பொய் சொல்றாங்க அப்படின்னு உங்க மனசுல தோணும்.

ஏன் இப்படிலாம் நடக்குது?

இதற்கான காரணம் என்ன அப்படின்றது தெரியுமா ?

அவங்க பொய் சொல்லி இருக்காங்கன்றது உங்களுக்கு எப்படி தெரிய

வருது?

முக்கியமா ஏதோ ஒன்னு தப்பா இருக்கு அப்படின்றது உங்களுக்கு எப்படி தெரிய வருது.

இதுக்கெல்லாம் காரணம், அவங்களோட ஆட்டிட்யூட்.

அவங்களோட ஆட்டிட்யூட் நம்மளோட மைண்ட்ல நம்ம ஒரு தாக்கத்தை ஏற்படுத்துது

இந்த Attitude ஃபுல்லாவே நம்மளோட உடம்போட கனெக்ட் பண்ணப்பட்டதா இருக்கு.

அப்ப என்ன நடக்குதுனா நீங்க இப்ப கோவமா இருக்கீங்க அப்படின்னா நீங்க நல்லா பேசினாலுமே உங்களை சுத்தி இருக்குறவங்க,

நீங்க கோவமா இருக்கீங்கன்றத உங்களோட முகபாவனைகள்,

வாய்ஸ் டோன் இல்ல உங்களோட பாடி லாங்குவேஜ் வச்சு புரிஞ்சிப்பாங்க.

உங்களால Rapportஐ கிரியேட் பண்ண முடியாது.

நீங்க நெகட்டிவ் ஆப்டிடியூடு ஓட ஒரு person கிட்ட பேசாம இருக்கனும்னா,

அதாவது கோவமாவோ, போராவோ இல்ல இம்பேஷன்ட்டாவும் இல்லாம, நீங்க பேசணும்னா பாசிட்டிவ் ஆட்டிட்டோட நீங்க இருக்கணும்னா நீங்க ரொம்ப Calmஆவும், ரிலாக்ஸ் ஆவும், Patientஆவும் பேசணும்.

இதன் மூலமா ஒரு ராப்போட்ட ஈஸியா ஃபார்ம் பண்ண முடியும்.

2. Art Of Syncronisation

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குது அப்படின்னா,

நீங்க கிரிக்கெட் பிடிக்கிற ஒரு நபரோட சீக்கிரம் Joint ஆயிடுவீங்க.

இப்படி நீங்க ஒரு சீரிஸ் பாக்குறீங்க, அப்போ அதே சீரிஸ் பாக்குற ஒரு நபரோட நீங்க நேரத்தை செலவிட ரொம்ப விரும்புவீங்க.

நீங்க இதை நோட்டீஸ் பண்ணி இருக்கீங்களா ?

காமன் இன்ட்ரஸ்ட் இருக்க people ஒவ்வொருத்தரும் ஈஸியா attach ஆயிடுவாங்க.

அவங்களால சீக்கிரமா கம்போர்ட் ஆகி ஈஸியாவும் ஒரு கனெக்ஷனையும் ஃபார்ம் பண்ண முடியுது.

சரி இது ஏன் நடக்குது?

நம்மள மாதிரியே இன்டரஸ்ட் இருக்க ஒரு நபரோடயோ, இல்ல நம்மளோட திங்கிங் மாதிரியே திங்க்(Think) பண்ற ஒரு நபரோட நம்மளால சீக்கிரம் Attach ஆக முடியும்.

இது எல்லா நேரமும் நடக்குமா அப்படின்னு கேட்டா கண்டிப்பா இல்ல.

ஆனா முக்காவாசியான நேரம் இது நடக்குது.

நம்மள போலவே இன்ட்ரஸ்ட் இல்லாத பீப்பிளோட நம்ம Point ஆப்போசிட்டா இருக்குது.

அதனால நாம நம்மளை போலவே இன்ட்ரஸ்ட் இருக்க,

இல்ல நம்மளை போலவே Thinking இருக்க ஒரு நபரோட சீக்கிரம் இணக்கம் ஆகிறோம்.

இதுதான் ஒருத்தரோட Rapport கிரியேட் பண்றதுக்கு ரொம்ப Helpfulஆ இருக்குது.

நான் இப்போ சொன்னது, உங்களோட எண்ணங்கள் பத்தியோ இல்ல ஐடியாஸ் பற்றியோ இல்ல.

அது ஒவ்வொருத்தருக்கு ஒருத்தர் வேறுபட்டதாக இருக்கும்.

நான் இங்க பிராக்டிகல் திங்க்ஸ் பத்தி மட்டும் தான் பேசுறேன்.

இது எல்லாருக்கும், ஒத்து வர ஒரு விஷயமா இருக்குது.

இப்படி பிராக்டிகல் திங்ஸ் பார்க்கிறப்போ நம்மளால ஒருத்தரோட ஈஸியா Sync ஆக முடியும்.

அவங்களோட கனெக்சன் ஐயும் சீக்கிரம் பார்ம் பண்ண முடியுது.

இப்படி ஒருத்தவங்களோட நீங்க கனெக்ஷன் ஆகணும் இல்ல Sync ஆகணும்னு விரும்புகிறீர்களா?

அதுக்கு நீங்க இந்த மூணு “V”ல Strongஆ இருக்கனும்.

முதல் V, Visual.

இரண்டாவது V, Vocal

மூணாவது V, Verbal.

ஒரு கம்யூனிகேஷன் ல 55% விஷுவல் திங்க்ஸ் பேஸ் பண்ணி இருக்குது.

அதாவது முக்கியமா சொல்லப்போனா நம்ம பாடி லாங்குவேஜ் பத்தி தான் இருக்குது.

அடுத்ததா 38 சதவிகிதம் நம்மளுடைய கம்யூனிகேஷன் நம்மளுடைய குரலை பொறுத்து அமையுது.

and வெறும் ஏழு பர்சண்டேஜ் மட்டும் தான் நம்மளோட Verbalஐ பொறுத்து கம்யூனிகேஷன் இருக்கு.

So, நமக்கு இந்த மூணு “V”யும் ஒரு கம்யூனிகேஷனை ஏற்படுத்திக்க ரொம்ப முக்கியமானது.

நம்ம பாக்க போற விஷுவல் திங்க்ஸ் அதாவது நம்மளோட பாடி லாங்குவேஜ் இது ரொம்ப ரொம்ப ஒருத்தரோட sync ஆகுறதுக்கு, ரொம்ப முக்கியமானது.

அப்படி நீங்க விசுவலா ஒருத்தரோட லிங்க் ஆகணும் அப்படின்னா அதுக்கு ஒரு சிம்பிளான டெக்னிக் இருக்கு.

அதுதான் மிரரிங்(Mirroring)

இந்த Mirroringல நீங்க உங்களுக்கு எதிரா பேசுற ஒருத்தரோட பாடி லாங்குவேஜை நீங்க அப்படியே காப்பி பண்ணி பேசணும்.

உதாரணமா ஒருத்தர் உங்கட்ட பேசுறப்போ, ஒரு கை மேல இன்னொரு கை வச்சு பேசுறாரு அப்படின்னா,

நீங்களும் அவரைப் போலவே அமைதியா ஒரு கை மேல ஒரு கை வச்சு பேசணும்.

அதேபோல ஒருத்தர உங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல கொஞ்சம் முன்வந்து குனிஞ்சு பேசுறாங்க அப்படின்னா,

நீங்களும் அவங்கள போலவே அந்த விஷயத்தை பேசுறதுக்கு குனிஞ்சு பேசணும்.

இதுபோல உங்களால எப்படி ஒருத்தரோட பாடி லாங்குவேஜ் உங்களால காப்பி பண்ண முடியுதோ அப்படி காப்பி பண்ணி பேசுங்க.

இதுல முக்கியமான விஷயமா நீங்க என்ன ஞாபகம் வச்சுக்கணும் அப்படினா,

நீங்க அவங்கள போலவே பண்றீங்க அப்படின்றது அவங்களுக்கு தெரிய கூடாது.

நீங்க போர்பஸா இந்த விஷயம் எல்லாமே பண்றீங்கன்றதும் தெரிய கூடாது.

அதாவது அவங்க அவங்களோட சோல்டர தொட்றாங்க அப்படின்னா நீங்களும் அதே போல பண்ணீங்க அப்படின்னா நீங்க பண்றது சரி இல்லைன்னு, உங்களுக்கு எதிரா இருக்க நபர் உங்களை தப்பா, புரிந்து கொள்றதுக்கு வாய்ப்பு இருக்கு.

அப்போ உங்களுக்குள்ள இந்த Rapport அப்படின்றது உருவாகாது.

அடுத்ததா,

உங்களோட 38% கம்யூனிகேஷன் நீங்க எப்படி பேசுறீங்கன்றதை சார்ந்து தான் இருக்கு.

அதனால நீங்க பேசுறப்போ உங்களுக்கு எதிரா இருக்க பர்சனோட ஜிங்க் ஆகிறது ரொம்ப முக்கியம்.

முதல் விஷயமா இதுல நீங்க சிங்க் ஆகுறது,

உங்களோட டோன் ஆஃப் வாய்ஸ்ல தான்.

உதாரணமா,

உங்களுக்கு எதிரா பேசுற ஒரு நபர் விஷயத்த கேக்குறப்போ ரொம்ப எக்சைட் ஆகி கேட்குறாருனா,

நீங்களும் அவங்களுக்கு அந்த எக்சைட்டிங் டோனிலேயே reply பண்ணனும்.

உதாரணமா உங்க பிரண்டு உங்ககிட்ட வந்து ஏய் எப்படி இருக்க அப்படின்னு ரொம்ப சந்தோஷமா கேட்குறாருனா, நீங்களும் அவருக்கு எல்லாமே நல்லா போகுதுன்னு சந்தோஷமா பதில் அளிக்கணும்.

and ஒருத்தர் உங்க கிட்ட வந்து ரொம்ப எமோஷனல் டோன்ல பேசுறாரு அப்படின்னா நீங்களும் அவருக்கு அதே எமோஷனல் டோன்ல தான் பதில் அளிக்கனும்.

இப்படி உங்களுக்கு எதிர்ல இருக்க நபர், எந்த வாய்ஸ் டோன்ல பேசுறாரோ அதேபோலவே நீங்களும் பதிலளிக்க கத்துக்குறது மூலமா உங்களால ஈஸியா உங்களுக்கு எதிரா இருக்க நபர் ஓட சிங்க் ஆக முடியும்.

இதுல இன்னொரு விஷயம் என்னன்னா நாம பேசுற வால்யூமும் ஸ்பீடும் எதிர்ல இருக்க நபரை போலவே ஒத்துப் போகணும்.

உதாரணமா ஒருத்தர் உங்ககிட்ட ரொம்ப சத்தமா பேசுறாருனா,

நீங்களும் கொஞ்சம் சத்தமா பேசணும்.

இல்ல ஒருத்தர் உங்ககிட்ட மெதுவா பேசுறாருனா, நீங்களும் அவர்கிட்ட மெதுவா பேசணும்.

இதே வழில தான் நீங்க ஒருத்தரோட ரிதம் and Pitchஐயும் sync பண்ணனும். லாஸ்ட்டா பாrக்க போற “V” Verbal.

உங்களுக்கு எதிரா இருக்க நபர் எந்த வார்த்தைகளை எல்லாம் யூஸ் பண்றாரு அப்படின்றத பாக்கணும்.

இந்த ஒரு டாபிக் ரொம்ப இம்பார்டன்ட் இல்ல சோ நாம இத பத்தி அப்புறமா பேசலாம்.

3. congruity

எந்த ஒரு படம் பார்த்தாலும் நாம அதுக்குள்ள ஆழமா போறப்போ நம்மளோட ஹார்ட்டும் போலியா அதுக்குள்ள இறங்குது.

உதாரணமா நமக்கு பிடித்த ஒரு கேரக்டர் (Character) படத்துல, செத்துப் போயிட்டாருனா, இல்ல அவருக்கு எதுவும் கெடுதல் நடந்துருச்சுன்னா நாமளும் கோபமாகவும், சோகமாகவும் இன்னும் சில பேரு அதுக்காக அழுகை கூட செய்வோம்,

இது உண்மை இல்ல பொய் அப்படினு தெரிஞ்சாலுமே,

நாம படத்துல பாக்குற பல விஷயங்கள நம்ம உணர்வுகளோட கனெக்ட் பண்ணிக்கிறோம் இல்லையா?

இது ஏன் நடக்குது? அப்படினு இதுவரை நீங்க யோசிச்சு பார்த்து இருக்கீங்களா?

இதுக்கு காரணம் congruity.

சில நடிகர்களும், நடிகைகளும் அவங்க Perform பண்றதுக்கு இந்த மூணு “V”ல முக்கியமா போக்கஸ் பண்ணுவாங்க.

அதாவது அவங்களோட பாடி லாங்குவேஜ் அதாவது, Visual.

அவங்களுடைய Vocal,

அடுத்து அவங்களுடைய Verbal.

இது மூணுலயும் அவங்க நல்லா கவனம் செலுத்துவாங்க.

இது மூலமா அது நமக்கு congruityஆ தோன்றுறனால, அவங்களுடைய performance நமக்கு உண்மையாகவும் நம்பகத்தன்மையாகவும் இருக்கு.

இது போலவே நீங்க ஒருத்தர நம்ப வைக்கணும் இல்ல ஒருத்தரோட emotional connection ஆகணும் அப்படின்னா,

நீங்க இந்த congruityஐ கண்டிப்பா முயற்சி பண்ணனும்.

நீங்க Nervousஆ இருந்து உங்களோட வாய்ஸ் மட்டும் Confidentஆ இருக்குது அப்படின்னா நீங்க உண்மையாவே Confidentஆன, ஆள் இல்லைன்னு தானே சொல்லணும்.

பதிலா நீங்க இந்த கான்ஃபிடன்ட்ட உங்களோட பாடி லாங்குவேஜ், குரல் உங்களுடைய வார்த்தைகளிலும் வெளிப்படுத்தணும்.

இதுவரை நாம ரெண்டு முக்கிய பகுதியான மீட்டிங் and Rapportஐ பத்தி பாத்தோம்.

மூனாவதா, நம்ம பாக்க போறது

#3 கம்யூனிகேஷன்.

இந்த கம்யூனிகேஷன் பகுதியில நான் உங்களுக்கு எப்படி மத்தவங்களோட கம்யூனிகேட் பண்ணனும்?

அப்படி பண்றப்போ என்ன பேசணும்?

குறிப்பா முதல் தடவையா ஒரு நபரை பாக்குறப்போ நாம என்ன பேசணும்? இதை பத்தி பாக்க போறோம்.

எந்த வகையில உங்களுடைய முதல் conversationனை எப்படி இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போறதுன்றத பத்தியும் பார்க்கலாம்.

இது மூலமா தான் உங்கள ஒருத்தருக்கு ரொம்ப பிடிச்சு போகும்.

இது ரொம்ப முக்கியமான பெரிய பகுதி.

இத நான் அடுத்த வீடியோல உங்களுக்கு சொல்றேன்.

இதுவரை நான் சொன்ன எல்லா விஷயங்களையும் நீங்க நடைமுறைப்படுத்தி பாருங்க.

வெறும் வீட்ல உக்காந்து இந்த வீடியோவை பாக்குறதனால எதுவும் ஆகிறது.

இப்ப எல்லாம் நம்ம நிறைய போன் பார்த்து நம்முடன் நேரத்தை செலவழிக்கிறோம்,

அதனால ஒருத்தரோட Face to Face conversationனை ஏற்படுத்துகிறது,

எவ்வளவு முக்கியமானது அப்படின்றதையும் மறந்துறோம்.

அதனால நாம போன் கம்மியா யூஸ் பண்ணி மத்தவங்களோட உண்மையா நாம இணக்கமாகணும்.

நாம இந்த பதிவுல ஓட இறுதி கட்டத்துக்கு வந்தாச்சு.

நாம பார்த்த எல்லா விஷயங்களுமே “ஹவ் டு மேக் பீப்பிள் லைக் யூ இன் 90 செகண்ட்” புத்தகத்துல இருந்துதான் பார்த்திருக்கோம்.

கம்யூனிகேஷன் ஸ்கில் நீங்க இம்ப்ரூவ் பண்ணனும் நினைக்கிறீங்கன்னா, இல்ல நீங்க ஒரு இம்ப்ரஸிவ் Personஆ ஆகணும்னு நினைக்கிறீங்கன்னா, இந்த புக்கை வாங்குங்க ரொம்ப உதவியா இருக்கும்.

உங்களுக்கு புக்கோடா லிங்க நான் கமெண்ட்லயும் டிஸ்கிரிப்ஷன்லயும், கொடுக்கிறேன்.

நீங்க நம்ம சேனல் ஓட எல்லா வீடியோஸ் மிஸ் பண்ணாம பாக்கணும்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பெல் ஐகானை கிளிக் பண்ணிக்கோங்க.

அப்பதான் நீங்க நோட்டிபிகேஷன் ரிசீவ் பண்ண முடியும்.

இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க, Thanks For Watching.