
நம் உடலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சத்துக்களில் ஒன்று இரும்புசத்து புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் முக்கியமாக இரும்பு சத்து பயன்படுகிறது. இரும்புசத்து உடலில் குறைவாக இருக்கும் போது தான் ரத்தசோகை எனப்படும் அனீமியா ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க உணவில் அதிகம் இரும்புசத்துள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியம். இரும்பு சத்து அதிகம் உள்ள 10 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம்…
ஈரல்:

அசைவ உணவு வகைகளில் ஈரலில் அதிகமாக இரும்பு சத்து உள்ளது.ஆடு கோழி , பீப் போன்ற அனைத்து வகையான அசைவ உணவுகளில் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது. 100 கிராம் ஈரலில் ஒன்பது மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஈரலில் வைட்டமின் பி12, விட்டமின் ஏ, என நிறைய சத்துக்கள் இருக்கிறது. இவை இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்வதுடன் அனீமியாவையும் சரி செய்கிறது.
பீன்ஸ் வகைகள்:

சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை ஆகியவை சாப்பிட்டு வர இரும்புசத்து குறைபாடு சரியாகும். 100 கிராம் சோயா பீன்ஸில் 15.7 மில்லி கிராம் இரும்புச்சத்து காணப்படுகிறது.
கீரைகள்:

கீரை வகைகளில் அதிகப்படியாக இரும்பு சத்து உள்ளது முருங்கைக்கீரை. 100 கிராம் முருங்கை கீரையில் நான்கு மில்லி கிராம் இரும்புச்சத்து காணப்படுகிறது. 4 .பீட்ரூட்:
100 கிராம் பீட்ரூட்டில் 0.8மில்லி கிராம் இரும்புச்சத்து காணப்படுகிறது. காய்கறி வகைகளில் மிகவும் சிறந்த இரும்புசத்து மிகுந்த காய்கறியாக பீட்ரூட் இருக்கிறது.மேலும் பீட்ரூட்டில் விட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது.
மீன்:

மத்தி மீனில் அதிகப்படியான இரும்பு சத்து இருக்கிறது. 100 கிராம் மத்தி மீனில் 2.9 மில்லி கிராம்இரும்பு சத்து காணப்படுகிறது. ஓமைகா 3, இரும்பு சத்து காணப்படுகிறது. கால்சியம், மெக்னீசியம் என பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
மாதுளை மற்றும் ஆப்பிள்:

100 கிராம் ஆப்பிள் மற்றும் மாதுளையில் 0.3மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் மாதுளை மற்றும் ஆப்பிள் பழங்களை காலையில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
பூசணி விதைகள்:

100 கிராம் பூசணியில் 9 மில்லி கிராம் இரும்பு சத்து காணப்படுகிறது.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பூசணி விதை பொடிகளை சேர்த்து சாப்பிட்டு வர இரும்பு சத்து குறைபாடு குணமாகும். 8 .நட்ஸ் வகைகள்: குறிப்பாக பாதாம் மற்றும் வேர்க்கடலையில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கிறது. 100 கிராம் பாதாமில் நான்கு புள்ளி எட்டு மில்லி கிராம் வேர்க்கடலையில் மூன்று புள்ளி ஒன்பது மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது ஒரு கையளவு பாதாம் மற்றும் வேர்க்கடலை தினசரி சாப்பிட்டு வர விரைவில் இரும்பு சத்து குறைபாடு குணமாகும்
உலர் திராட்சை மற்றும் பேரிச்சை:

இரண்டு உலர் பழங்களும் மிகவும் நல்லது. இரண்டு உலர் திராட்சை பழங்களிலுமே இரும்புசத்து அதிகமாக காணப்படுகிறது100 g பேரிட்சையில் 1.2 மில்லி கிராம் மற்றும் உலர் திராட்சையில் 1.8 மில்லி கிராமம் இரும்பு சத்து இருக்கிறது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அதிகப்படியான சத்துக்கள் உள்ளது.
10 .சிகப்பு அரிசி:

இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் ரெட் ரைஸ் என்று சொல்லக்கூடிய சிகப்பு அரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது. 100 கிராம் அரிசியில் 5.5 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. இது உட்கொள்வதால் அனீமியா எனப்படும் ரத்தசோகை நோய் தடுக்கப்படும் என ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
தினசரி உணவில் இரும்புசத்து உணவுகளுடன் சிட்ரஸ் பழங்களையும் சாப்பிட்டு வர உடலுக்கு மிகவும் நல்லது. டீ, காப்பியை தவிர்ப்பது மிகவும் நல்லது.
தொடர்புடயவை: தொப்பை குறைய இத பண்ணுங்க