கடந்த சில நாட்களாகவே நிறைய செய்திகளில் இந்த தகலை நீங்கள் கேட்டிருக்கலாம் அதாவது ஒருவர் தன்னுடைய JPEG படத்தை பல கோடிகளுக்கு விற்றார் என்று அது எப்படி சாத்தியம் அதனை ஏன் NFT என்று கூறுகிறார்கள் அதனைபற்றிதான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.
what is nft?
இந்த என் NFT என்பது NON FUNGIBLE TOKEN என அழைக்கப்படுகிறது இதனை பற்றி பார்ப்பதற்கு முன்னால் FUNGIBLE TOKEN-களை பற்றி தெரிந்துகொண்டால் இதனை புரிந்துகொள்வது இன்னும் எளிமையாகும்.
Fungible token
இந்த fungible token-களை எளிமையாக கூறவேண்டும் என்றால் தற்போது உங்களிடம் 100 ரூபாய் உள்ளது இதனை உங்களுடைய நண்பருக்கு கடனாக தருகிறீர்கள் மறுநாள் நீங்கள் கடனாக கொடுத்த 100 ரூபாயை அவர் இரண்டு -50ரூபாய் நோட்டுகளாக தருகிறார் . இப்போது நீங்கள் கொடுத்த 100 ரூபாய்க்கு இந்த இரண்டு 50 ரூபாய்கள் என்பது சம மதிப்பை பெறும் இதன் மூலம் ஒருவருக்கொருவர் தங்களிடம் இருக்கும் பொருளின் மதிப்பை மாற்றிகொள்ளலாம் இதனைதான் FUNGIBLE TOKENஎன குறிப்பிடுகிறார்கள்.
Non fungible token
funginle token-கள் என்பது அனைவரிடமும் மாற்றிகொள்ளலாம் அதனின் மதிப்பு என்பது சமமாக இருக்கும் அதனை யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதுவே இந்த NON FUNGIBLE TOKEN-என்பது உங்களிடம் ஒரு அறியவகை பழங்கால படம் உள்ளது இதனை நீங்கள் படமெடுத்தாலும் சரி அச்சிட்டாலும் சரி அதனுடைய உண்மையான படம்தான் விலைமதிப்புள்ளதாக கருதப்படும் எடுத்துகாட்டாக மோனலிசா புகைப்படம் என்பது விலைமதிப்புள்ளதாக கருதப்படுகிறது அதைபோன்ற வரைபடத்தை நீங்கள் கூட கூகிளில் பதிவிறக்கம் செய்து உங்கள் வீட்டில் மாட்டி வைக்கலாம் ஆனால் அது உண்மையல்ல என்பது உங்களுக்கு தெரியும் அதன் உண்மையான பம் என்பது அருங்காட்சியத்தில்தான் உள்ளது அதன் மதிப்பு என்றும் குறையாது. அதுபோலதான் இந்த NFT என்பது செயல்படுகிறது.
தற்போது அனைவரும் தங்களின் புகைப்படங்களை டிஜிட்டலாக மாற்றுகிறார்கள் அப்படி மாற்றும்பொழுது அந்த ஒரு DIGITAL ART-ன் உரிமையாளர் என்பதை கண்டறிவது என்பது சற்று கடினமாகவே இருந்தது அதனை நீக்கும் வழியில் உருவானதுதான் இந்த ஒரு NFT இப்போது உங்களின் படத்தையோ அல்லது நீங்கள் பாடிய பாட்டையோ NFT-ஆக மாற்றிவிட்டால் அதனுடைய உரிமையாளர்கள் நீங்களாக இருப்பீர்கள் இதன் மூலம் ஒரு NFT-ன் உருமையாளர் யார் என்பதை நம்மால் எளிதாக கண்டறிய முடியும்.
NFT எப்படி செயல்படுகிறது
இந்த ஒரு NFT-ஆனது BLOCKCHAIN TECHNOLOGY மூலம் செயல்படுகிறது இதன்காரணமாக உங்களின் தரவானது ஒரு பிளாக்குகளாக மாற்றப்படும் இப்படி மாற்றப்படுவதால் அதற்கென்று தனியாக ஒரு ENCRYPTED ID NO உருவாக்கப்படும் இதன்காரணமாக உங்களின் தரவானது மிக பாதுகாப்பாகவும் அதன் உருமையாளர் யார் என்பதையும் நம்மால் உறுதி செய்துகொள்ள முடியும். இந்த ஒரு NFT – கள் ETHEREUM BLOCKCHAIN-ல்தான் செயல்படுகின்றன இதானல்தான் இந்த NFT-கள் மிக பிரபலமாக இருக்கிறது.
தொடர்புடையவை:BLOCK CHAIN என்றால் என்ன?
ஏன் இவ்வளவு விலை
இந்த ஒரு NFT-கள் என்பது கோடிக்கணக்கில் விலைபோகிறது எனலாம் சமீபத்தில் கூட நம் தமிகழகத்தை சேர்ந்த ஒருவர் 500 கோடி கொடுத்து ஒரு NFT-ஐ வாங்கியுள்ளார். இந்த ஒரு NFT-களை தற்போது அனைவரும் ஒரு அந்தஸ்தாக கருதுகின்றனர் எனலாம் ஏனெனில் அவை தனிதுவமானது, அதாவது ROLLS ROYCE-கார் என்பது எப்படி நாம் அனைவரும் ஒரு அந்தஸ்தாக கருதுகிறோமோ எப்படி அது விலை அதிகமோ அதுபோல்தான் இந்த NFT-களையும் அனைவரும் ஒரு அந்தஸ்தாக கருதுகிறார்கள் இதனால் இவை பலகோடிகளில் விலைபோகிறது. இதில் முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் இந்த ஒருNFT-ஐ நீங்கள் கூட உருவாக்கி விற்காலம்.
எதற்கு பயன்படுத்தலாம்
இந்த ஒரு NFT-கள் என்பது தற்போது புகைப்படங்கள் மற்றும் பாடல்களாக இருந்தாலும் இதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் உங்களிடம் இருக்கும் தனித்துவமாக இருக்கும் அனைத்து பொருளையும் உங்களால் NFT-களாக மாற்ற முடியும் இதனால் உரிமையாளர் யார் என்பதை எளிதில் கண்டறிய முடியும்
கண்டிப்பாக இந்த ஒரு பதிவில் NFT-கள் என்ன என்பதை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் நன்றி!
watch on youtube
RELATED:METAVERSEஎன்றால் என்ன?