வணக்கம்! இந்த பதிவில் இஸ்ரேல் பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான(facts about israel) உண்மைகளைதான் பார்க்க கோகிறோம்.
அதிக மரங்களை கொண்ட நாடு
இந்த உலகில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அதிக மரங்களைக் கொண்ட ஒரே நாடு இஸ்ரேல் மட்டும்தான்.
மிகச்சிறிய பாலைவனம்
இந்த உலகின் மிகச்சிறிய பாலைவனமான ஜூடியன் பாலைவனம் இஸ்ரேல் நாட்டில்தான் இருக்கிறது.
பழமையான மரம்
இஸ்ரேலில் உள்ள பழமையான மரம் ஐன் ஹட்சேவாவில் உள்ள சீமைக்கருவேல மரமாகும், இது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
கழிவு நீர் மறுசுழற்சி
இஸ்ரேல் தான் கழிவுநீரில் 90% மறுசுழற்சி செய்கிறது, இது தண்ணீர் மறுசுழற்சியில் உலகின் முன்னணி நாடாக உள்ளது. அமெரிக்காவில், 1% கழிவு நீர் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
தொழில்நுட்ப முன்னேற்றம்
3,000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுடன், இஸ்ரேல் உலகிலேயே அதிக ஹைடெக் நிறுவனங்களைக் கொண்ட நாடாக உள்ளது.
ஐன்ஸ்டீன்
1952 ஆம் ஆண்டில், உலகின் பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. ஆனால் அந்த பதவியை அவர் பணிவுடன் நிராகரித்தார்.
நிலப்பகுதி
இஸ்ரேல் நிலபரப்பில் மிகவும் சிறியது, நீங்கள் இஸ்ரேலில் இருந்தால் உங்களால் கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு இரண்டு மணி நேரத்தில் நடந்து செல்ல முடியும், மேலும் ஒன்பது நாட்களில் வடக்கிலிருந்து தெற்கே செல்லலாம், இருப்பினும் பஸ்ஸில் செல்ல பரிந்துரைக்கிறோம்.
சாக்கடல்
நீங்கள் இஸ்ரேலுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த இடத்தை பார்க்க வேண்டும் அதுதான் சாக்கடல் மற்ற கடல்கள்போல் இல்லாமல் இந்த கடலில் உங்களால் மிதக்க முடியும் அதுபோல் இந்த கடல் பகுதி ஆழம் மிக குறைவு கடல் முழுவதும் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். இந்த கடலில் நீங்கள் கல்லை தூக்கி போட்டால் அது மிதக்கும் இப்படி மிதப்பதற்கான காரணம் அங்கு உப்புதன்மை அதிகம்.
இஸ்ரேல் விவசாயம்
செர்ரி தக்காளி மற்றும் முள்ளில்லாத பேரிக்காய் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இஸ்ரேலிய பசுக்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதிக பால் உற்பத்தி செய்கின்றன. ஆயினும்கூட, இஸ்ரேலின் மிகப்பெரிய பெருமை சொட்டு நீர் பாசனத்தின் கண்டுபிடிப்பு எனலாம் , இது பல பயிர்களை வளர்ப்பதற்குத் தேவையான 70%-80% தண்ணீரை சேமிக்கிறது. விவசாயத்திற்கான நீரும் மறுசுழற்சி செய்யப்படுகிறது, ஏனெனில் நாம் ஏற்கனஙே கூறியதுபோல் இஸ்ரேல் தனது கழிவுநீரில் 90% மறுசுழற்சி செய்கிறது, இது உலகின் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.