
வணக்கம்! நீங்கள் விமானத்தில் பயணித்திருந்தால் அல்லது பயணிக்காவிட்டாலும் இதுவரை நீங்கள் கேட்டிராத விமானம் பற்றிய சில சுவாரஸ்யமான facts about flights தகவலைதான் இந்த பதிவில் காணபோகிறோம்.
சுவையின்மை
நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது நீங்கள் சாப்பிடும் உணவுகளின் சுவை குறைந்து காணப்படும். இதற்கு காரணம் நமது நாக்கில் உள்ள சுவைமுட்டுகள் உயரத்தில் இருக்கும் மரத்து போய்விடுகின்றன.
கழிவறை கதவுகள்
விமானத்தின் கழிவறை கதவுகள் முழுவதுமாக பூட்டபட்டிருக்காது நீங்கள் கழிவறையில் புகைபிடித்தாலோ அல்லது மற்ற சந்தேகமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் பணிபெண்கள் கழிவறையின் கதவை திறந்து உள்ளே வர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உடலில் ஏற்படும் மாறுபாடுகள்
நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் உடல் உலரந்து போவதை பார்த்திருக்கலாம் உங்களின் தொண்டையும் வறண்டுவிடும், இதற்கு காரணம் விமானத்தில் உள்ளே இருக்கும் காற்றானது சஹாரா பாலைவனத்தில் வீசும் காற்றுக்கு சமம். இதனால் நீங்கள் விமானத்தில் 10 மணி நேரம் பயணித்தால் உங்களின் உடலில் 2 லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதையும் மறாவாதீர்கள்.
விமானத்தின் கழிவுகள்

நீங்கள் இதை யோசித்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது அது என்னவென்றால் நமது வீட்டின் கழிப்பறையின் கழிவுகள் சாக்கடையில் சேர்கிறது ஆனால் விமானத்தில் என்ன நடக்கிறது என்பதுதான். தற்போதைய நவீன விமானங்கள் விமானத்திற்குள்ளேயே நவீன கழிப்பறை தொட்டிகளை பயன்படுத்துகின்றன ஆனால் விமானங்கள் அறிமுகபடுத்திய காலகட்டத்தில் அப்படியே கழிவுகள் விமானத்தில் இருந்து கீழே விழுமாம். அப்படி கழிவுகள் கீழே விழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது எத்தனை விமானங்கள் பறக்கிறது.
தற்போது இந்த பதிவை நீங்கள் படிக்கும் இதே நேரத்தில் 8000 முதல் 20,000 விமானங்கள் வானில் பறந்து கொண்டிருக்கின்றன.
Airport இல்லாத நாடு
இந்த உலகில் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் உள்ளன ஆனால் இன்னும் ஒரு சில நாடுகளில் விமான நிலையங்கள் இன்றுவரை தொடங்கபடவில்லை எனலாம். உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் , மோனாக்கோ,லீச்டென்ஸ்டீன்,சான்மரினோ போன்ற நாடுகள் இதுவரை விமான போக்குவரத்தை பயன்படுத்தமால் உள்ளனர்.
விமானத்தின் பாதுகாப்பான பகுதி
பெரும்பாலும் விமான விபத்துகள் ஏற்படாது, இதுவரை நடந்த விமான விபத்துகளை வைத்து பார்க்கும்பொழுது விமானத்தின் வால் பகுதியானது மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது எனவே வால் பகுதியில் சீட்டுகளை புக் செய்வது நன்மை பயக்கும்.
பைலட்டுகள் தூங்குவார்களா
பிரிட்டிஷ் ஏர்லைன் விமானிகள் சங்கத்தின் (BALPA) 2017 அறிக்கையின்படி, 500 விமானிகள் கேட்கபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர் அவர்கள் கூறிய தகவலை பார்கும்போதி , 43 சதவீதம் பேர் விமானத்தை இயக்கும் போது தற்செயலாக தூங்கிவிட்டதாக ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் 31 சதவீதம் பேர் தூக்கத்திலிருந்து எழுந்ததை ஒப்புக்கொண்டனர். எனவே விமானிகளும் தூங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருப்பு பெட்டி உண்மையில் கருப்பா
ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் என்றும் அழைக்கப்படும் கருப்புப் பெட்டி உண்மையில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த பெட்டிகளின் வெளிப்புற வண்ணப்பூச்சு ஹைலைட்டர்-ஆரஞ்சு நிறத்தில் வருகிறது, இது விபத்து ஏற்பட்டால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.
பீருக்காக ஹைஜேக் செய்யபட்ட விமானம்
1985 ஆம் ஆண்டில், ஒரு நார்வேயின் போயிங் 737 ரக விமானத்தில் துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு முன்னாள் விமானி நுழைந்தார் , அவர் அந்த விமானத்தை முற்றுகையிட்டு பணம் கேட்பார் என்று பார்த்தால் குடிக்க பீர் வேண்டும் என்று கூறியிருக்கிறார் .இறுதியில், விமானம் ஒஸ்லோவில் உள்ள Fornebu விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதில் இருந்த 115 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் கடத்தல்காரன் கைது செய்யப்பட்டார்.
மின்னலை தூண்டும் விமானம்
ஒரு விமானம் மேகங்கள் வழியாகச் செல்லும்போது, உண்மையில் மின்னோட்டம் உருவாக்கபட்டு மின்னலை தூண்டும். அதிர்ஷ்டவசமாக, உங்கள் விமானம் மின்னலால் தாக்கப்பட்டாலும், நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். 1967 ஆம் ஆண்டு முதல் உலிக்ல மின்னல் தொடர்பான விமான விபத்து எதுவும் ஏற்படவில்லை, மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் மின்னல் தாக்குதல்கள் பயணிகளுக்கு முன்பை விட குறைவான ஆபத்தானவை. மின்னல் ஒரு விமானத்தைத் தாக்கும் போது, விமானத்தின் மின் கடத்தும் அலுமினிய இருப்பதால் , உட்புறம் முழுவதும் மின்சாரம் சமமாக விநியோகிக்கப்படுகிறது, அதே நேரத்தில் விமானத்தின் உட்புற மின் அமைப்புகளை தரையிறக்குவது அதன் செயல்பாட்டில் குறுக்கிடக்கூடியஅலைகளைத் தடுக்கிறது.