உலகின் top 10 விலையுயர்ந்த பழங்கள் top 10 expensive fruits tamil

Spread the love
expensive fruits
பழங்கள் நம் உடலுக்கு வலுசேர்க்கும் மற்றும் ஆரோக்கியமானது இத்தகைய பழங்களை நாம் சாதரணமாக வாங்குவது உண்டு .ஆனால் இந்த  பட்டியலில் குறிப்பிட்ட  பழங்கள் எல்லாம்  தனித்துவமானவை மற்றும் விலை உயர்ந்தவை(expensive fruits) . இந்த பழங்களை நாம்  வாழ்வில் ஒரு முறை  சாப்பிட்டாலே அதிர்ஷ்டம்தான் ஏனென்றால் அந்த அளவுக்கு மிக விலையுயர்ந்த பழங்களாக உள்ளன.

புத்தர் வடிவ பேரிக்காய்    

                                                    

expensive fruits

 நீங்கள்  பல பேரிக்காய்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் புத்தர் வடிவ பேரிக்காய்களை பார்த்திருக்கீர்களா .ஆம் புத்தர் வடிவ பேரிக்காய் இருப்பது உண்மை தான் . அதாவது இந்த பேரிக்காய்  புத்தரின் வடிவத்தை அப்படியே ஒத்திருக்கிறது.இந்த வடிவ பேரிக்காய் சீனாவில் வளர்கிறது. நாம் பல  வடிவம் நிறங்களில் பேரிக்காய்களை பார்த்திருப்போம். ஆனால் புத்தர் வடிவில் இருப்பது ஒரு ஆச்சர்யமான ஒன்றுதான். இதனுடைய ஒரு பேரிக்காயின் விலை மட்டும் 700 ரூபாய் ஆகும். இது இயற்கையாக புத்தர் வடிவில் வளர்கிறதா என்று கேட்டால் கிடையாது இந்த பேரிக்காய்களை புத்தர் வடிவில் இருக்கும் ஒரு அச்சில் பிஞ்சாக இருக்கும்பொழுதே அதனை வளர்க்கிறார்கள் இதன் காரணமாகதான் இது புத்தர் வடிவில் காணப்படுகிறது.

 செக்கா இச்சி ஆப்பிள்                                                              

 

 

செக்கா இச்சி ஆப்பிள் என்பது ஒரு சாதரண ஆப்பிள்  போலத்தானே இருக்கிறது . இதில் என்ன தனித்துவம் இருக்கிறது என்று கேட்டால்  இந்த ஆப்பிளின் தனித்துவம்  சுவையிலோ அல்லது நிறத்திலேயோ  இல்லை  அந்த ஆப்பிளின் வடிவத்திலேயே உள்ளது. அதாவது இந்த ஆப்பிள் சாதரண ஆப்பிளை விட மிகவும் பெரியது இந்த ஒரு  ஆப்பிள் 1 கிலோ எடை அளவிற்கு  இருக்கும். இது 46 செ.மீ அளவிற்கு வளரும். இதனுடைய ஒரு ஆப்பிளின் விலை 1500 ரூபாய் வரை வரைக்கும் இருக்கும்.
 

SEMBIYA QUEEN  STRAWBERRY 

இந்த வகை ஸ்ட்ராபெரி மிகவும் அழகானவை இதுமட்டுமின்றி இந்த ஸ்ட்ராபெரி  எல்லாம் ஒரே அளவுடையவை இவை ஜப்பானில்  விளையக்கூடியவை . இந்த ஸ்ட்ராபெரிகள் சுவைக்காக வாங்குவது மட்டுமின்றி இற்றின் அழகும் கவரும் தன்மையும் அனைவரையும் வாங்க வைக்கிறது. இதனுடைய ஒரு ஸ்ட்ராபெரியின் விலை 4500 ரூபாய் ஆகும்.
 

சதுர வடிவ தர்பூசணி

 
 

                  சதுர வடிவ தர்பூசணி என்றால்  சதுரமாக இருக்கும் என்று கேட்டால் ஆம் இந்த தர்பூசணிகள்  கட்டமாக அதாவது சதுரமாக இருக்கும் . இந்த வகை தர்பூசணிகள் ஜப்பானில் விளையும் .அதாவது தர்பூசணி என்றாலே வட்டமாக இருக்கும் ஆனால்  இவை ஏன் இப்படி விளைகின்றது என்று கேட்டால் இவை வளரும்  போது  சதுரமான ஒரு மரப்பெட்டியில் வைத்து வளர்ப்பதால் இவை சதுரமாக வளர்கிறது . இதனுடைய விலை 42000 ரூபாய் ஆகும்.                                               

 

RUBY ROMAN GRAPES 

 
 

ரூபி ரோமன் திராட்சை  மிகவும் அழகானது இந்த வகை திராட்சை ஜப்பானில் விளையும் . இந்த திராட்சையில் அதாவது  ஒரு கொத்தில் 26 திராட்சைகள் இருக்கும் இதனுடைய ஒரு கொத்தின் விலை 4 லட்சம் ஆகும்.                              

டென்சுகே தர்பூசணி                         

 

        இந்த வகை தர்பூசணி சாதரணமான தர்பூசணி போல் இல்லாமல் அதன் நிறத்தில் சற்று மாறுபட்டு கருப்பாக இருக்கும். இதன் சுவை சாதரணமான தர்பூசணியை விட அதிகமாக இருக்கும் . இது ஜப்பானில் விளையும் இது விளைவதற்கென்றே  ஒரு தீவு ஜப்பானில் உள்ளது . இது மிகவும் குறைவாக விளைவதால் இந்த தர்பூசணி மிகவும் விலை உயர்ந்தது . இது 11 கிலோ வரை வளரும். இதனுடைய விலை 35000 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *