ஏரியா 51 மர்மங்கள் area 51 mystery in tamil

 area 51 mystery

area 51 mystery
இந்த உலகில் பல்வேறு மர்மமான இடங்கள் இருந்தாலும் இந்த AREA-51 என்பது உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் பெரிய அளவில் பேசப்பட்டது இதற்கு காரணம் ஏலியன்கள் என்று கூறலாம் இந்த   இடத்தில் ஏலியன்கள் இருப்பதாக பல்வேறு மக்களால் நம்பபடுகிறது உண்மையில் இங்கு ஏலியன்கள் உள்ளதா என்பதும் யாருக்கும் தெரியாது ஏனெனில் இந்த இடம்தான் உலகின் மிகவும் பாதுகாக்கபட்ட பகுதியாகவும் உள்ளது. இந்த AREA-51ல் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

AREA-51 பெயர்காரணம்

இந்த ஏரியா 51-ஆனது அமெரிக்காவில் நெவாடா என்னும் இடத்தில் ஒரு பாலைவன பகுதியில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு முதன் முதலில் GROOM LAKE BASE என்ற பெயரே இருந்தது ,இந்த ஏரியா 51  முதன்முதலில் எப்பொழுது துவங்கபட்டது என்றால் இரண்டாம் உலகப்போரில் தொடங்கபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது , இந்த இடம் உருவாக்கபட்டதற்கான காரணம் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவை உலவு பார்க்க அமெரிக்கா அதிநவீன விமானங்களை உருவாக்க   இந்த இடத்தை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது .

AREA-51ம் ஏலியனும்

aliens area 51

இந்த AREA-51-ஐ பற்றிய கருத்துகள் 1947-ஆம் ஆண்டு மக்களிடையே பேசப்படுகிறது இந்த ஏரியா-51 என்ற இடத்திலிருந்து கிட்டதட்ட 10 கிமீ தொலைவில்  ஒரு விவசாயி இன்றுவரை காணாத ஒரு விசித்திரமான பொருளை கண்டறிகிறார் அந்த பொருள் ஒரு பலூன் போன்ற வித்தியாசமான வடிவத்தில் இருந்ததால் இது நம் பூமியை சேர்ந்த பொருள் இல்லையென்று  அங்குள்ள மக்கள் நம்பினார்கள் பிறகு அந்த பொருளை அமெரிக்க அரசு பெற்று ஆய்வுகளை மேற்கொண்டது .

ஏலியனின் UFO

ufo alien
 1955-ஆம் ஆண்டு ஒருநாள் இரவன்று இதுவரை மக்கள் காணாத ஒரு வித்தியாசமான ஒரு பறக்கும் விண்கலத்தை பார்கின்றனர் இது மிகவும் வித்தியாசமானதாகவும் அதனை சுற்றி மிகசிறிய மின்விளக்குகள் எரிந்ததையும் மக்கள் காண்கிறார்கள் இதனை அனைவரும் ஏலியன்களின் விண்கலம் என்று நம்பினர் ஆனால் அது அமெரிக்காவின் உலவு பார்க்கும் விமானம் என்று அரசுக்கு மட்டுமே தெரியும். இதனை பற்றி அமெரிக்க அரசு இதனை வெளிப்படையாக ஒப்புகொள்ளவில்லை.

ஏரியா 51 ஏலியன் ஆராய்ச்சி

area 51 alien
இதுவரை உண்மையில் மக்களுக்கு ஏரியா 51- என்ற இடம் இருக்கிறது என்பது மக்களுக்கே தெரியாது 1989- ஆம் ஆண்டு பாப்லாசர் என்பவர் நான் அந்த ஏரியா-51ல் இருந்ததாகவும் அங்கு நாங்கள் ஏலியன்களையும் ஏலியன் பயன்படுத்திய விமானங்களையும்  வைத்து ஆராய்ச்சி செய்தோம் என்று  கூறினார் ஆனால் அவர் கூறிய விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் இருந்தது அவர் பொய்யுரைக்கிறார் என்றும் கண்டறிந்தனர்.
alien
1996-ஆம் ஆண்டு நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலாமான ஒரு திரைப்படம் INDEPENCE DAY இந்த படத்தின் கதை ஏலியன்களிடம் இருந்து உலகத்தை அமெரிக்க இராணுவ வீரர்கள் எப்படி காக்கிறார்கள் என்பதுபோல் இருக்கும். இந்த படத்தை எடுப்பதற்காக இதன் இயக்கினர் AREA-51 ல் படப்பிடிப்பை நடத்த அனுமதி கேட்டார் ஆனால் அதற்கு அமெரிக்க இராணுவம் ஒப்புகொள்ளவில்லை, உண்மையில் இங்கு ஏலியன்கள் இல்லை ஏனெறால் ஏன் அமெரிக்க இராணுவம் படக்குழுவை அனுமதிக்கவில்லை என்பது மக்களிடையே பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
1977-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல ரேடியோ  சேனலுக்கு ஒரு அழைப்பு வருகிறது அந்த அழைப்பில் ஒரு மனிதர் தான் ஏரியா 51-ல் வேலை செய்ததாகவும் உடல்நிலை சரியால்லாத்தால் நான் அங்கிருந்து வந்துவிட்டதகாவும் கூறுகிறார் பிறகு என் உயிரை காப்பாற்றுங்கள் என்று சொல்லி அந்த அழைப்பு துண்டிக்கபடுகிறது. இந்த நிகழ்வையும் இது ஒரு பொய்யான அழைப்பு என்று கூறி அமெரிக்க அரசு நிராகரித்தது.
ufo
2007-ஆம் ஆண்டு ஏரியா 51-ன் முதல் வான்வெளி புகைப்படம் வெளிவந்தது இது 1979-களில் ஒரு செயற்கை கோளால் எடுக்கபட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்விற்கு பிறகு இந்த இடத்தை இனி எவரும் வான்வெளி புகைபடம்  எடுக்ககூடாது என்று கடுமையான சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டுவருகிறது.
இந்த ஏரியா 51-ற்கு வெளியுலகில் இருந்து செல்லும் விமானங்கள் வெறும் 20 விமானங்கள் இவை அனைத்தும் ஒரே நிறுவனத்தை சார்ந்தவை ,இந்த விமானங்களை தவிர வேறு எந்தவொரு விமானமும் இங்கு தரையிரங்க அனுமதியில்லை . இந்த விமானங்களில் 1000 மேற்பட்ட வேலையாட்கள் ஏரியா 51 கு செல்கின்றனர் ஆனால் இன்றுவரை இந்த நபர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது.
area 51
இந்த AREA-51 பகுதி பார்பதற்கு மிகசியதாக இருக்கம் என்றும் இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் பூமிக்கு அடிப்பகுதியில் சுரங்கங்களை அமைத்து அதில் கட்டிடங்களை அமைத்து ஆய்வுகளை செய்கின்றனர் என கூறப்படுகிறது.
இந்த AREA-51ற்கு இதுவரை எவரும் சென்றதில்லை அங்கு என்ன இருக்கிறது என்பதை காண பல்வேறு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றும் அவர்கள் அனைவரும் ஏரியா 51 வாசலிலேயே துறத்திஅடிக்கபட்டனர் . அதை தாண்டியும் இங்கு செல்ல முடியாது ஏனெனில் இங்கு அனைத்து இடங்களிலும் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் எப்போதும் ஒரு ரோந்து விமானம் சக்திவாய்ந்த காவல்படைகள் இதனை பாதுகாக்கின்றனர் .
alien
உண்மையில் ஏரியா-51 இருக்கிறது என்பதையே  அமெரிக்க அரசு 2013 ஆம் ஆண்டுதான் ஒப்புகொண்டது அங்கு ஒரு சில ஆய்வுகள் நடக்கிறது என்பதையும் கூறியது ஆனால் என்ன ஆய்வுகள் என்பதை குறிப்பிடவில்லை.
இவ்வாறு பல காரணங்கள் அந்த AREA-51 ஐ சுற்றி கூறப்படுகிறது உண்மை என்னவென்று  எவருக்கும் தெரியாது இதை பற்றிய உங்களுடைய கருத்துகள பதிவிடுங்கள்.
                                                               நன்றி!