யார் இந்த பாப்மார்லி unknown facts about bobmarley

                unknown facts about bobmarley

bob marley history

வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் இளையஞர்களின் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர் கருப்பின ஒடுக்கமுறையை தன் பாடல் மூலம் மக்களுக்கு பரப்பியவர் அவர்தான் BOB MARLEY  இவரை பற்றிய சில பொய்யான கருத்துகளும் இங்கு உலாவருகின்றன அதைபற்றியும் இவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் முழுமையாக காண்போம்.

BOB MARLEY பிறப்பு

இந்த பாப் மார்லி நோர்வல் சிங்ளர் மால்காம் என்ற வெள்ளையின மக்களுக்கும் சென்டெல்லா மால்காம் என்ற கருப்பின தாய்க்கும் மகனாக 1945 ஆம் ஆண்டு ஜமைக்காவில் பிறந்தார் பாப்மார்லியின் தந்தை அவருக்கு 10 வயது இருக்கும்பொழுதே இறந்துவிடுகிறார்.தனது குடும்பம் மிகவும் கடினமான சூழலை இருப்பதை பாப்மார்லி தன்னுடைய 14 வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வெல்டிங்(WELDING) வேலைக்கு செல்கிறார். சிறுவயதிலிருந்தே இசை மீது அன்பு கொண்ட பாப்மார்லி தனது ஓய்வு நேரங்களில் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் .

பாப்மார்லியின் இளம்வயது

bob marley

தனது தந்தை இறந்த பிறகு பாப்மார்லி அவரது தாயாருடன் டிரென்தவுன் என்ற இடத்திற்கு மாறுகிறார் அங்குதான்  அவர் கருப்பின மக்களுக்கு இழைக்ககூடிய அநீதிகளையும் மற்றும் ஒடுக்குமுறைகளையிம் காண்கிறார் இதை எப்படியாவது  உலகிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்த பாப்மார்லி ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்தார் அதுதான் இசை.

பாப்மார்லி இசைப்பயணம்

இசையில் பேரன்பு கொண்ட பாப்மார்லி 1962 ஆம் ஆண்டு வெய்லர்ஸ் என்ற இசை குழுவில் சேர்ந்து பாடுகிறார் இவருடைய முதல் பாடல் இவர் நினைத்தபடி சரியாக அமையவில்லை என்றே கூறலாம் இருப்பினும் மனம் தளராத பாப்மார்லி 1964 ஆம் ஆண்டு மார்லி ரெகொ என்ற புதிய வகை இசையை புகுத்தி ஒரு பாடலை உருவாக்குகிறார் இந்த பாடல் பெரும் வெற்றி கண்டது இதன் பிறகு பாப் மார்லி வெளியிட்ட அனைத்து பாடல்களும் வெற்று பாடலாகவே அமைந்தன அதுவும் இவரின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அநீதிகளை பிரதிபலிக்கும் பாடலாகவே இருந்தன.

பாப்மார்லியும் கஞ்சாவும்

bob marley smoking

இந்த பாப்மார்லி 1966-ஆம் ஆண்டு ரீடா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் இந்த ரீடா என்கிற ரஸ்தபாரி என்று அழைக்கபடும் ஒரு மதத்தை சேர்ந்தவர் இந்த ரஸ்தபாரி மதமானது கிறிஸ்துவர்களை எதிர்க்கும் வகையில் ஆப்பிரிக்க பழங்குடியின மக்களால் தங்களுடைய கலாச்சாரங்களுக்கு என்று தனியாக  உருவாக்கபட்ட கிறிஸ்துவ மதம் ஆகும், இவர்கள் எத்தியோபியாவை சேர்ந்த மன்னனை கடவுளாக வணங்குவார்கள்

அதுமட்டுமின்றி இந்த மதத்தில் கஞ்சா என்பது மிகவும் புனிதமாக கருதபடுவதால்  அந்த மதத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவர்கள் கஞ்சா புகைப்பவரகளாக உள்ளனர் அதுமட்டுமின்றி அந்த மதத்தில் அனைத்து மக்களுமே வைத்திருப்பார்கள் .  பாப்மார்லி இந்த மததிற்கு மாறுகிறார் அதானல் இவர் இந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

BOB MARLEY-ன் இறப்பு

bob marley
இந்த பாப்மார்லி 1977-ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடும்பொழுது கால்களில் அடிபடுகிறது மருத்துவமனைக்கு செல்லும் பொழுது மருத்துவர்கள் பாப்மார்லிக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருக்கிறது என்று கூறுகின்றனர் அதன்பிறகு ஐரோப்பாவில் ஒரு மிகப்பெரிய இசைநிகழ்ச்சியில் பங்கெடுக்க செல்கிறார் அவர் அந்த இசை நிகழ்ச்சி தொடங்குதற்கு முன்பாக மயக்கமடைந்து கீழே விழுகிறார் அப்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது 1981 ஆம் ஆண்டு மே 11 தேதி அமெரிக்காவில் வெறும் 36 வயதே ஆன பாப்மார்லி மரணமடைகிறார்  அவரின் உடல் அவர் பிறந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.