மீம்களின் வரலாறு-facts about memes
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நம்முடைய தினசரி வாழ்வில் நம்மை சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் மீம்களை பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான விடயங்களை பற்றி காண்போம்.
1.மீம் பெயர் காரணம்
2.மீம்ஸ் என்றால் என்ன?
3.முதல் மீம்
இந்த இண்டர்நெட்டில் பதிவிடபட்ட முதல் மீம் என்பது எமோஜி ஆகும். இண்டர்நெட்டின் ஆரம்பகாலத்தில் தகவல்கள் என்பது தற்போதுபோல் பரிமாற்றம் செய்யப்படவில்லை அன்றைய காலகட்டத்தில் வெறும் எழுத்துகளாகவே இருந்தது ,எழுதுபவர் எந்த மனநிலையில் அந்த தகவலை எழுதினார்கள் என்பது படிப்பவருக்கு தெரியாது, இதனை அறிந்த ஸ்காட் என்ற அமெரிக்க மென்பொறியாளர் தற்பொதைய எமொஜிக்கான அடித்தளத்தை 1982- ஆம் ஆண்டு எமோடிகான் என்ற பெயரில் தொடங்கினார். இதுதான் இண்டர்நெட்டின் முதல் மீம் என கூறப்படுகிறது.
4.யார் இந்த சேவியர் மீம்ஸ்
முன்பெல்லாம் மீம்களை உருவாக்குபவர்கள் ஒரே டெம்ப்லேட்டுகளையே உருவாக்கியிருந்தனர் பிறகு அவர்கள் போடும் மீம் போட்டோகளுக்கு நல்ல சிரிப்பான கம்மெண்டுகளையும் மீமாக உருவாக்கினர் அப்படி மீம்களில் புது கலாச்சாரத்தை கொண்டுவந்தது இந்த சேவியர் மீம்ஸ். இந்த போட்டோவில் இருப்பவர் பகலோ பப்பிட்டோ என்ற மீம் பக்கத்தை டிவிட்டரில் வைத்திருந்தார் ஒரு சில காரணங்களினால் டிவிட்டர் நிறுவனம் இவரின் கணக்கை முடக்கியது . இந்த பகலோ பப்பிடோ என்பவர் உண்மையில் யார் என்பது நமக்கு தெரியாது இந்த ஒரு புகைப்படம் மட்டும்தான் இண்டர்நெட்டை சுற்றி உலா வருகிறது. இவர் டிவிட்டரில் மற்ற மீம்களுக்கு வித்தியாசமான கோணத்தில் கமெணெட் செய்வார் இதனை கண்ட மீம் கிரியேட்டர்ஸ் இவர் கமெண்ட் செய்ததுபோல் அவர்களே மீமை உருவாக்கி அதற்கு இவரின் புகைப்படத்தை வைத்து சேவியர் என்ற பெயரையும் வைத்து பிரபலபடுத்தினர்.
5.டோஜ் காயின் நாய்குட்டி
பிரபல மீம்களில் நீங்கள் இந்த ஒரு நாய்குட்டியை பார்த்திருக்க வாய்ப்புள்ளது இந்த நாய்குட்டியின் பெயர் ஷீபா ஆகும்,இது ஜப்பான் நாட்டில் இருக்கூடிய ஒருவகையான நாய் இனம் ஆகும் . இந்த நாய்குட்டி மிக பிரபலமாக காரணம் டோஜ்காயின் எனலாம் இந்த டோஜ் காயின் என்பது பிட்காயின் போலவே ஒரு கண்ணுக்கு தெரியாத பணம் எனலாம், இந்த டோஜ்காயினை பற்றி பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டிவிட் செய்ய ஒரே இரவில் இந்த நாய்குட்டி உலகமெல்லாம் பிரபமடைந்தது. இதன் உண்மையான புகைப்படம் கீழே காண்பிக்கபட்டுள்ளது.
6.மீம்களால் அதிபரான டிரம்ப்
2016- அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் அதிபர் ஆனார் இதற்கு முக்கிய காரணம் இந்த மீம்கள் என கூறப்படுகிறது. தேர்தல் சமயத்தில் அனைத்து மீம்களும் டிரம்ப் பத்தியே இருந்ததால் இது அவர் தேர்தலில் வெற்றி பெற காரணமாக இருந்திருக்காலம் என கூறுகிறார்கள்.
7.அதிகம் பார்க்கபட்ட மீம்கள்
2006-ஆம் ஆண்டு ஒரு பூனை மேல் சுவற்றில் இருந்து தலை எட்டிபார்ப்பதுபோல் ஒரு புகைப்படம் வெளியானது அதை வைத்து உருவாக்கிய மீம்கள் அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் பார்க்கபட்ட மற்றும் பகிர்ந்த மீம்களாக உள்ளது.ஏன் தற்போதுகூட இந்த மீமானது பிரபலமாகதான் இண்டர்நெட்டை சுற்றி வலம் வருகிறது.
8. யார் இந்த நபர்
2019-ஆம் கிரிக்கெட் உலககோப்பையின் போது ஆஸ்திரேலியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடந்த போட்டியில் ஆசிஃப் என்ற வீரர் ஒரு கேட்சை தவறவிட்டார் அப்போது பார்வையாளாரக இருந்த ஒருவரின் முகப்பாவனை அனைவருக்கும் பிடிக்க இதை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்தது ,இதன் பிறகு இந்த ஒரு புகைப்படம் உலகளவில் மீம்கிரியேட்டர்களால் பிரபலமடைந்தது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யாரென்றால் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது சலீம் அப்கார் என்ற ஒருவர் இவர் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்த ஒரு புகைப்படத்தினாலேயே இவர் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். கிட்டதட்ட ஒரே இரவில் பல இலட்சம்பேர் இவரை பாலோவ் செய்துள்ளனர் அந்த அளவுக்கு மிக பிரபலானது இந்த மீம்.
9.நைஜிரியாவின் வடிவேலு
நம் தமிழ் மீம்களில் இவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது இவரின் பெயர் ஒசிடா ஹிமே இவர் நைஜிரியா நாட்டை சேர்ந்தவர். நீங்கள் இவரை சிறுவன் என நினைத்திருக்கலாம் உண்மையில் இவருக்கு 39 வயது ஆகிறது பார்ப்பதற்கு உயரம் குறைவாக காணப்படுவார். இவர் நைஜிரிய நாட்டில் பிரபலமா என்பது தெரியாது ஆனால் நம் தமிழ்நாட்டில் இவர் மிக பிரபலம். இதனால் இவரை மீம் கிரியேட்டர்கள் நைஜிரியாவின் வடிவேலு என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
10.உலகை மாற்றிய மீம்கள்
இந்த ஒரு மீம்கள் நம்மை சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைத்துள்ளன தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மக்களுக்கு ஒரே வரியில் புரியும் வண்ணம் எடுத்துரைக்கின்றன. நல்ல ஒரு சமூதாயத்தை உருவாக்கவும் தவறுகளை தட்டு கேக்கும் அளவிற்கு இந்த மீம்களுக்கு சக்தி உள்ளது முன்பெல்லாம் அடக்குமுறைகள் என்பது நிறைய காணப்பட்டன ஆனால் தற்போது இந்த மீம்கள் மூலமாக அனைவரும் அவர்களின் கருத்துகளையும் முடிவுகளையும் தெரிவிக்கின்றனர் . இதனால் கருத்து சுதந்திரம் மேம்பட்டுள்ளது எனலாம்.