ஏன் பூமி வட்டமாக உள்ளது?
source: pixabay |
என்னுடைய சிறுவயது பருவத்திலிருந்தே எனக்கு இந்த ஒரு கேள்வி எழுந்திருக்கிறது இது உங்களுக்கும் எழுந்திரிக்கலாம் அது என்னவென்றால் ஏன் பூமி உருண்டையாக உள்ளது என்பதுதான்.அதுமட்டுமல்லாமல் இந்த விண்வெளியில் உள்ள அனைத்துகோள்களும் ஏன் உருண்டையாக உள்ளது (why earth and planets are round) என்பதை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
நம் பூமி மட்டுமல்லாமல் அனைத்து கிரகங்களும் வட்டமாக உருண்டையாக இருக்க காரணம் ஈர்ப்பு விசை எனலாம். ஒவ்வொரு கோளுக்கும் ஈர்ப்பு விசை என்பது குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும் . அந்த ஈர்ப்பு விசை அனைத்து பக்ககளிலும் இருந்து சமமாக மையத்தை நோக்கி ஈர்த்து கொண்டே இருப்பதால் கோள்கள் உருண்டையாக(அ) கோளமாக உள்ளது எனலாம்.
நெபுலா ஹைபோதைசிஸ்
1750-களில் இமானுவேல் கான்ட் என்பவர்தான் இந்த நெபுலா ஹைப்போதைசிஸ் என்ற ஒரு கோட்பாட்டை வெளியிட்டார் . இவரின் கோட்பாடு என்ன கூறுகிறது என்றால் அண்டத்தில் இருக்கூடிய சிறிய பொருள் மற்றொரு பொருளுடன் மோதி ஒரு கிரகம் உருவாகதொடங்கும் சில காலங்களில் அது ஈர்ப்புவிசையை அடைய தொடங்கும் அந்த ஈர்ப்பு விசையே அவற்றை ஒன்றாக இனைத்து வைக்கிறது இதன் காரணமாக பூமி உருண்டையாக உள்ளது. ஆனால் விண்வெளியில் இருக்கும் மிகப்பெரிய பாறைகளில் இந்த ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினால்தான் இவை ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ளன.
பூமி உண்மையில் உருண்டையா
உண்மையில் நம் பூமி உருண்டையா என்று கேட்டால் கிடையாது நம் சூரிய குடும்பத்தில் இருக்கூடிய வியாழன் மற்றும் சனி கோள் மட்டும்தான் முழுமையான உருண்டை வடிவத்தை கொண்டுள்ளன எனலாம். மற்றப்படி அனைத்து கிரகங்களும் ஒரு ஒழுங்கற்ற கோள வடிவத்தை கொண்டுள்ளன நமது பூமியும் ஒரு ஒழுங்கற்ற கோள வடிவத்தில்தான் காணப்படுகிறது, நம் கண்களுக்கு உருண்டையாக தெரிய காரணம் பூமியில் இருக்கும் ஓசோன் படலம்தான் நம் பூமி உருண்டையாக காட்சியளிக்க காரணம்.
நன்றி!