புதிர்கள் நிறைந்த இப்பூமியில் அவ்வப்பொழுது நம் கண்களுக்குத் தென்படும் பல இயற்கை நிகழ்வுகள் கவனத்தை ஈர்க்கும்படி இருந்தாலும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட(dangerous natural phenomenon) தனித்துவமாக நிகழக்கூடிய சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றனர் அப்படிப்பட்ட அசாதாரணமான இயற்கை மனிதர்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
6-மாதங்கள் இடி மின்னல்
மழை வருவதற்கான அறிகுறியாக வானில் மேகக் கூட்டங்களில் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல்களை நம் அன்றாட வாழ்வில் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் எப்போதாவது மட்டுமே தோன்றிய மறையும் இந்த இயற்கை நிகழ்வு வருடத்தில் 160 நாட்கள் வரையிலும் தினமும் 10 மணி நேரம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆம் இந்த ஒரு விசித்திரமான நிகழ்வு வெனிசுலா நாட்டில் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.
ஐஸ் சுனாமி
கடலுக்கடியில் முன்பாக மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கடற்கரையோர மக்களை காவு வாங்கி மிகப்பெரிய இயற்கை பேரழிவு உண்டாக்குவதில் சுனாமிக்கு நிகர் சுனாமி மட்டும்தான்.
இதன் தாக்கமானது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நிஜ வாழ்விலும் பிரமாண்டமான சினிமாக்களிலும் நாம் கண்டிப்பாக பார்த்திருப்போம் ஆனால் கடலானது நீருக்கு பதிலாக டன் கணக்கிலான பனிக்கட்டிகளை சுனாமிகளாக விட்டுச் செல்லும் நிகழ்வுகள் கூட சில பகுதிகளில் நடந்திருக்கின்றன.
அப்படிப்பட்ட வினோதமான மர்ம நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே ஏற்படும். இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகம் பனி பிரதேசங்களில் மட்டுமே நிகழ்கின்றன சுமார் 30 அடி உயரம் வரையிலும் பனிக்கட்டிகள் இருப்பது போன்ற தோற்றத்தை கரையோரங்களில் காணப்படுகிறது.
இந்த ஐஸ் சுனாமிகள் பெரும்பாலும் கனடா நாட்டின் பெரும்பகுதி கடற்கரை ஓரங்களில் ஏற்படுகிறது.இவை வித்தியாசமான நிகழ்வுகளில் தனித்துவமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
மின்னும் கடல்
மாலத்தீவு கடற்கரைகளுக்குச் சென்றால் நம்மால் இரவு நேரத்தில் இவ்வகையான வினோதமான அனுபவத்தை பெறமுடியும் கடல் நீரில் கால்களை வைத்ததும் ஒளிர்வதை போன்ற தோற்றத்தைத் தரும் அந்த நிகழ்வு பயோ லூமின்ஸ்டன் பிளாண்டன் என்ற ஒரு வகை கடல்வாழ் நுண்ணுயிரிகளின் மூலம் ஏற்படுகிறது.
கடலில் வாழும் மீன் போன்ற உயிரினங்களுக்கு ஒரு முக்கிய உணவாக ஆதாரத்தை வழங்கும் இந்த பயோ லூமின்ஸ்டன் பிளாண்டன் நுண்ணுயிர்கள் பௌர்ணமி நாட்களில் கடலின் மேற்பரப்பிற்கு வருவதுடன் உடலில் உள்ள லூசிபெரஸ் என்ற வேதிப்பொருளைக் கொண்டு ஆக்சிஜனேற்றம் மேற்கொள்கின்றன இதன் விளைவாகவே அந்த கடல் ஒளிரும் தன்மையைப் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நுரைப்புயல்
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு மிகப்பெரிய புயல் வித்தியாசமாக வீசியது இந்த புயல் மழை காற்று மட்டுமின்றி நுரையையும் சேர்த்து கரைக்கு கொண்டுவந்தது இதற்கு காரணம் கடலில் இருந்த இரண்டு கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலுள்ள எண்ணெய் கசிந்து அதனை இந்த புயல் கரைக்கு எடுத்துவந்து நுரைமழையாகபெய்துள்ளது.
source:wikipedia