கடலை பற்றிய உண்மைகள் FACTS ABOUT SEA

                        facts about sea

      நம்  பூமியில் கடல்கள் 70 % மேலாக இடத்தை பிடித்துள்ளது . அதாவது நமது பூமியில் நிலத்தை விட கடல்கள் அதிக இடத்தை பிடித்துள்ளன.எவ்வாறு இவ்வளவு நீர் பூமியில் வந்திருக்கும்  என்பது நாம் அனைவருக்கும்  ஒரு ஆச்சர்யமே . நம் பூமி  மீது ஒரு மிகப்பெரிய கல் மோதி ஒரு நெருப்பு பந்தாக பூமி இருந்தது அதன் பிறகு மழை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள்  பெய்ததால் பூமி முழுவதும் கடல்நீர்  பரவி இருந்தது.  இந்த நீரில் 97.2 % நீர் கடல்நீராக உள்ளது 2.15% நீர் பனிகட்டியாக உள்ளது நன்னீர் வெறும் 0.65%  மட்டுமே உள்ளது.இந்த நன்னீர் ஆறுகள், நிலத்தடி நீர், ஏரிகள் ஆகியவையாக உள்ளன. கடல்கள் நம் பூமியில் இருப்பதாலே நம் பூமியை நீலநிற கோள் என்று அழைக்கிறோம்.            

 

கடலின் தன்மை     

கடல் எப்போதும்  உவர்ப்புதன்மை கொண்டது. அதாவது கடல் நீரில் அதிக அளவு சோடியம் குளோரைடு கொண்டுள்ளதால் இது அதிக அளவு உப்புத்தன்மை கொண்டது .கடலில் சோடியம் குளோரைடை (சாதரண உப்பு)  தவிர மெக்னீசியம்,கால்சியம், பொட்டாசியம், போன்ற உப்புகளும் பல தனிமங்களும் உள்ளன.கடல் என்பதற்கு பொருள் அதிக அளவில் நீராலும்  குறைந்த அளவு நிலப்பரப்பாலும் சூழப்பட்டுள்ள பகுதியினை கடல் என்று அழைப்பர். அது மட்டுமில்லாமல் உப்பு கொண்ட நீர்நிலைகளை கடல் என்றே அழைப்பர் கடல்களுக்கு நிறைய பெயர்கள் உள்ளன. அதாவது ஆழி,பெருங்கடல்,பேராழி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.  இந்த கடல்கள் பூமியின் பருவநிலையை  நிர்ணயிப்பதில் பெறும் பங்காற்றுகிறது.பூமியின் பல காலநிலையை நிர்ணயிப்பது கடலே ஆகும்.கடலில் உப்புத்தன்மை கரை ஒரங்களிலிலும் ,ஆழத்திலும் அதிகமாக இருக்கும்.கடலின் மீது காற்று  வீசுவதால்  அலைகள் தோன்றுகிறது.கடலில் என்னற்ற உயிரினங்கள் வாழ்கின்றன அவை பூஞ்சைகள்,நீர்வாழ் தாவரங்கள்,பாசிகள்,ப்ரோடிஸ்டிகள்  ஆளிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன.இதோடு மட்டுமில்லாமல் மீன்கள், திமிங்கலங்கள் , கடல் பாசிகள் போன்ற மீன் வகைகளும் உள்ளன.இந்த வகையான தாவரங்களும் மீன்களும் சுரிய ஒளி படும் இடங்களில் அதிக அளவு காணப்படுகிறது.

 

கடலின் நன்மைகள் 

கடல்கள் நமக்கு  பல வகைகளில் பல நன்மைகளை தருகின்றன. அதாவது இவைகள் நமக்கு காலநிலை மற்றும் பருவநிலை ஆகியவற்றில்  அதிக அளவு பங்காற்றுகிறது .கடலிலுருந்து நமக்கு தேவையான உப்புகளை எடுத்துக்கொள்கிறோம் . இதுமட்டுமின்றி பல வகையான கடல் உணவுகளான மீன்,நண்டு போன்ற உணவுகளை தருகிறது.இதுமட்டுமின்றி பல வகையான மருத்துவ மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.இதோடு மட்டுமில்லாமல் தங்கம்  நிலத்தில் இருப்பதை விட கடலில் அதிக அளவு தங்கம் காணப்படுகிறது. ஆனால் இதனை எடுப்பது என்பது சாத்தியமில்லை ஏனெனில் தங்கம் கடலில் சித்தறி காணப்படுகிறது. அதனால் இதனை கடலிலிரந்து எடுப்பது என்பது முடியாத ஒன்றாகும்.  அதிக அளவு பவளப்பாறைகள் கடலில் இருப்பதால் நமக்கு பல நன்மைகளை தருகிறது. 
.கடலில் உள்ள முத்துகள் ,பவளப்பாறைகள் போன்றவை ஆபரணம்  தயாரிக்க பயன்படுகிறது.கடலின் முக்கிய நன்மையான  கடல்வழி போக்குவரத்திற்கு பயன்படுகிறது.முக்கிய வாணிகம் கடல் பயணங்களுக்கு உதவுகிறது
 

கடல் ஒரு வாழ்வாதாரம்

                       கடல்  மனிதர்கள், நீர்வாழ் உயிரினங்கள்  மற்ற சில உயிரினங்கள் வாழ்வதற்கு ஒரு ஆதாரமாக உள்ளது.நம் பூமியில் முதன் முதலில் உயிரினங்கள் கடலிலே தோன்றின. இந்த உலகில் முதல் உயிரினம்  தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததே இந்த கடல்கள் தான். இந்த கடல்கள் நமக்கு பல நன்மைகளை செய்துருக்கின்றன.இந்த கடல் தனக்குள் கோடிகணக்கான உயிரினங்களை தனக்குள் கொண்டுள்ளது.அதாவது சிறிய பூச்சி முதல் தாவரங்கள், பாசிகள், பவளப்பாறைகள், முத்துக்கள் கடல்பாசிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், மீன்கள்,சுறாக்கள் இதுபோல்  சொல்லமுடியாத பல உயிரினங்கள் கடலில் வாழ்கிறது.மனிதர்களுக்கு உணவு அழிப்பதோடு பல நன்மை தருகிறது. இவைகள் அனைத்தும் பெருங்கடலில் தான் உள்ளது.அதாவது பெருங்கடல் என்பது அதிக அளவு நீர்பரப்பை கொண்டுள்ளதால் இதனை பெருங்கடல் என்று அழைக்கிறோம். கடலை விட பெரியதை பெருங்கடல் என்று அழைக்கிறோம். இந்த கடல் நீர்கள் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றுகிறது.இந்த நீர் முதன் முதலில் பூமிக்கு எவ்வாறு வந்திருக்கும் என்றால் விண்வெளி கற்கலிலிருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.கடலில் உள்ள தாவரங்கள் 90% அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
 
கடல் நீர் ஆரம்பகட்ட காலத்திலிருந்து உப்பாகவே உள்ளது .ஏன் இந்த கடல்நீர்கள்  உப்பாக உள்ளது என்றால் ஆறுகளிலிருந்து நீர் கடலில் கலக்கிம்போது  அந்த நீர்கள் பாறைகளில் உள்ள  உப்பு கனிமங்களின் மீது கடந்து செல்வதால் அந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக உப்பு சேர்ந்து கடைசியில் கடலில் கலப்பதால் அது உப்பு நீராக  உள்ளது.மழை நீர் ஆறாக மாறி செல்லும்போது மணலில் உள்ள கனிமங்கள், மலைகளில் உள்ள பாறைகள் இதுபோல் பல  உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலை கலப்பதால் கடல்நீர் உப்பாக உள்ளது .ஆறுகளின் நீீீீீீீறும் உப்பாக இருக்கும் ஆனால் அவை தெரிவதில்லை இவை மொத்தமாக கடலில் சேறும் போது  மிக அதிகமாக உப்பு இருப்பது தெரிகிறது .ஒரு  லிட்டர் கடல்  நீரில் 35% உவர்ப்புதன்மை கொண்டது. இந்த கடல்நீரில் அதிக அளவு சோடியம் குளோரைடு,உள்ளது  இதுமட்டுமில்லாமல் சோடியம், பொட்டாசியம், கால்சியம் ,போன்றவைகளும் உள்ளன.ஒவ்வொரு கடல்களும் ஒவ்வொரு விதமான உப்பு தன்மையை கொண்டிருக்கும். இந்த உப்புதன்மை ஒவ்வொரு கடலுக்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இவற்றின் உப்புகளின் ஆவியாதல் தன்மை வெவ்வேறுவிதமாக இருக்கும்.
கடலின் வகைகள் 

                                                ஒவ்வொரு கடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பெருங்கடல் 5 வகைப்படும். அவை பசிபிக் பெருங்கடல்,இந்திய பெருங்கடல் , ஆர்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் , தென்முனை பெருங்கடல் ஆகியவை ஆகும். இதில் பசிபிக் பெருங்கடல் உலகிலேயே மிகப்பெரிய கடலாகும்.இந்த கடலில் மரியானா அகழி என்ற அகழி  மிகவும் ஆபத்தான அகழி  ஆகும் அதாவது இதனுடைய ஆழம்  10911 கி.மீ ஆகும். இதுதான் உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும்.இந்த பசிபிக் 2 கோடி கனசதுர கி.மீ அளவு கொண்டது.உலகில் இரண்டாவது பெருங்கடல் அட்லாண்டிக் ஆகும்.இதன் மொத்த பரப்பு 106.4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். மூன்றாவது பெரிய கடல் இந்திய பெருங்கடல் ஆகும்  இந்த கடலில் பெட்ரோலிய பொருட்களும் ,இயற்கை எரி பொருட்களும் உள்ளன. தென்முனை  பெருங்கடல் 10 டிகிரி முதல் -2 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கும் . ஆர்டிக் பெருங்கடல் உலகில் சிறிய பெருங்கடல்  இது அதிக அளவு பனியால் உள்ளது.
                        

                        சாக்கடல் மிகவும் வித்தியாசமான கடல் ஆகும் .இந்த கடலில் எது போட்டாலும் மூழ்காமல் மிதக்கும் இது ஏன் இவ்வாறு நடக்கிறது என்றால் இந்த கடலில் உப்பின் அடத்தி அதிகமாக இருப்பால் மூழ்காமல் மிதக்கிறது.கடல் இல்லாமல் இருந்ததால் இந்த உலகமே தோன்றிருக்காது.எனவே இந்த உலகில் கடல்கள் முக்கிய பங்காற்றுகிறது