வணக்கம்! இன்றைய பதிவில் உலகின் விலையுயர்ந்த மற்றும் தலைசிறந்த பிராண்டான ரோல்ஸ் ராய்ஸ் ROLLS ROYCE பற்றிய நீங்கள் கேள்வியே படாத ஒரு சில சுவாரஸ்யமான விசயங்களை பற்றி காண்போம்.
ROLLS ROYCE-ன் விலை
ரோல்ஸ் ராய்ஸ் கார் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஆடம்பரம்தான். இப்படிபட்ட ஆடம்பரமான காரின் விலை எவ்வளவு தெரியுமா இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஆடம்பர விலையே 5 கோடி ஆகும். இந்த காரின் அதிகபட்ச விலை வாடிக்கையாளர்களை பொறுத்து மாறுபடும். ஏனென்றால் மற்ற கார் நிறுவனங்களை போல் ரோல்ஸ் ராய்ஸ் இல்லாமல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை உருவாக்கி தருவார்கள். எடுத்துகாட்டாக துபாய் இளவரசர் ரோல்ஸ் ராய்ஸ் காரை தங்கத்தில் உருவாக்கஇ வைத்துள்ளார்.
எதற்காக இவ்வளவு விலை
இந்த ரோல்ஸ் கார் நிறுவனம் உருவாகிய நாள் முதல் இன்றுவரை அதன் உதிரிபாகங்கள் முழுவதுமாக கையால் உருவாக்கப்படுகிறது. ஆம் இந்த நிறுவனம் பெரும்பாலும் இயந்திரங்களை பயன்படுத்தமால் மனிதர்களை வேலைக்கு உபயோகிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. இதனால்தான் இந்த கார் இவ்வளவு விலையுயர்ந்ததாக
ROLLS ROYCE PAINTING
இந்த காரை சுற்றி மெல்லிய கோடு போன்ற ஒரு பெயிண்டிங்கை காணலாம் இதை செய்வது இயந்திரம் அல்ல ஒரு மனிதர்தான். இதுவரை உருவாக்கபட்ட அனைத்து கார்களுக்கும் மார்க் என்ற ஒரு நபர்தான் இந்த கோடுகளை வரைகிறார். அதற்கு அவர் பயன்படுத்தும் பெயிண்ட் பிரஷ் ஆனது அணிலின் முடியில் இருந்து செய்யப்பட்டிருக்கும்.
ROLLS ROYCE CAR LOGO
ரோல்ஸ் ராய்ஸ் காரின் லோகோவானது 1906-ஆம் ஆண்டு சார்லஸ் ஸ்கையிஸ் என்பவரால் உருவாக்கபட்டது . இந்த காரின் சக்கரங்களில் இருக்கூடிய இந்த லோகோ கார் எவ்வளவு வேகமாக சென்றாலும் சுழலாமல் ஒரே திசையில்தான் இருக்கும் . நீங்கள் எங்கிருந்த பார்த்தாலும் சக்கரங்களில் இருக்கூடிய லோகோ ஒரே திசையை காட்டும்படி மிக கச்சிதமாக வடிவமைக்கபட்டுள்ளது.
SPIRIT OF ECSTACY
இந்த காருக்கு தனித்துவமே இந்த SPIRIT OF ECSTACY எனலாம் இதை நீங்கள் தொட நினைத்தால் தானாகவே உள்ளே சென்றுவிடும்.
ROLLS ROYCE-ம் கட்டுகதைகளும்
பெரும்பாலானோர் இந்த ரோல்ஸ் ராய்ஸு கார் வாங்க சமூகத்தில் பெரிய அந்தஸ்து மற்றும் பிரபலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் ஆனால் அதி உண்மையல்ல இந்த கார் வாங்க உங்களிடம் கோடிக்கணக்கில் காசு இருந்தால் மட்டும் போதுமானது.