புயல் எப்படி உருவாகிறது how cyclones formed in tamil

Spread the love
how cyclones formed in tamil
source:pixabayhttps://pixabay.com/

வணக்கம் இன்றைய பதிவில் புயல் எப்படி உருவாகிறது மற்றும் புயல்(cyclone) பற்றிய சில சுவாரஸ்யமான விடயங்களை பற்றி காண்போம்.

பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும்போது புயல் உருவாகிறது இப்படி உருவாகும் புயல்ளில் சில மாபெரும் அழிவை ஏற்படுத்துகின்றன .

what is cyclone?

புயல் கடலில் உருவாகிறது என்பது நமக்குத் தெரியும் ஆனால் அது கடலில் எப்படி உருவாகிறது எனில் பூமியானது அதன் பூமத்திய ரேகை அச்சில் சுழலும் போது சூரிய ஒளியானது அதிக அளவில் கடல் மட்டத்தில் பிரதிபலிப்பதால் கடல் மட்டத்தின் மேல்பகுதி வெப்பமாகிறது .

இதன் காரணமாக அங்கு சுற்றியுள்ள காற்று சூடாகி மேலும்புகிறது இதுமட்டுமல்லாமல் கடல் மட்டத்தில் மேற்பரப்பில் சூரிய ஒளி படுவதால் கடல் நீர் நீராவியாகி சூடானகாற்றுடன் இணைந்து மேகங்களை உருவாக்கிறது. இப்படி சூடான காற்று மேலே சென்று குளிர்ந்து மேகமாகவோ மழையாகவோ மாறுகிறது.

இப்படி தொடர்ந்து கடல் மட்டத்தில் நிகழ்வதால் அங்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது இதனால் மேற்பரப்பிலிருந்து காற்று கடல் மட்டத்தில் முழுவதும் ஒரு பகுதியில் சுழல் போன்ற அமைப்பு உருவாகின்றது. இவ்வாறு ஏற்படும் நீர் சூழலானது ஒரே இடத்தில் நின்று விடாமல் காற்றின் அழுத்தத்தால் ஓரிடத்தில் இருந்து உருவாகி மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது,

கடலில் இருக்கும் வரை புயலுக்கு (cyclone) ஆற்றல் கிடைத்து கொண்டே இருக்கும் அந்த புயல் நிலத்தை அடையும் போது இதன் ஆற்றல் சிறிது சிறிதாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக ஆற்றல் இழந்து விடுகிறது கடலில் இருந்து கிடைக்கும் ஆற்றல் போல் நிலத்தில் ஆற்றல் கிடைக்காவிட்டாலும் மிகப்பெரிய சூறாவளி புயல்கள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 மைல் வேகத்தில் சுழலும் போது சாதாரண வெப்ப மண்டலம் புயலாக அவை அறிவிக்கபடுகிறது. நாம் நினைக்கும்படி ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புயல்கள் மட்டும் உருவாவதில்லை ஆண்டுக்கு சுமார் உலகமெங்கும் 60-க்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகின்றன அதில் 47 வகையான புயல்கள்(cyclone) சூறாவளியில்(tornado) வேறுபடுகின்றன.

அதில் 20 மட்டுமே மிகப்பெரிய நிலையை அடைகின்றன பெரும்பாலான புயல்கள் கடையிலேயே அதன் ஆற்றலை இழந்து விடுகின்றன அதிவேக காற்றின் வேகத்தை அடைகின்றன சூறாவளி உருவாகும் போது பலத்த காற்று மற்றும் கன மழையை தோற்றுவிக்கின்றன சூறாவளி உருவாகும் விதத்தை ஒரு செயல்முறை மூலம் விளக்க வேண்டுமென்றால் ஒரு வாளியில் உள்ள சூடான நீரில் ஒரு குச்சி போன்ற ஏதாவது ஒரு பொருளை விட்டு கலக்கும் போது வேகம் அதிகரிக்க அதிகரிக்க சூழல் ஒன்று உருவாகி அதன் மையத்தில் ஒரு சிறிய குழி போன்ற இடம் உருவாகும் இதன் மூலம் ஆவியாதல் அழுத்தம் ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படிதான் சூறாவளிகள் புயல்கள் உருவாகின்றன.

தொடர்புடையவை: வானம் ஏன் நீல நிறமாக உள்ளது

இந்த பயல்கள் உருவாவதை கண்காணிக்க ஜியோ ஸ்டேஷனரி செயற்கை கோள்கள் பூமியை சுற்றி சுமார் 22 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *