sivangi romance with dulquer salmaan

துல்கர் சல்மானுடன் டூயட் பாடிய sivangi romance with dulquer salmaan

Spread the love
source:hotstar

விஜய் டிவி-யில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த குக் வித் கோமாளி எனலாம். கோமாளிகளின் இடையூறுகளிக்கிடையே குக்குகள் எப்படி டாஸ்க்கை செய்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மையக்கரு. ஏற்கனவே இரண்டு சீசன்களை கடந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது தற்போது வெற்றிநடை போட்டுவருகிறது.

இதில், அம்மு அபிராமி, அந்தோணி தாசன், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, ரோஷ்னி ஹரிபிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ராகுல் தாத்தா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். இதில் ராகுல் தாத்தா மற்றும் மனோபாலா ஆகியோர் வெளியேறிய நிலையில் மற்றவர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.

கோமாளிகளாக பரத், பாலா, குரேஷி, மணிமேகலை, மூக்குத்தி முருகன், சக்தி, ஷீத்தல், சிவாங்கி, சுனிதா, அதிர்ச்சி அருண், புகழ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் குக்குகள் மற்றும் கோமாளிகள் என அனைவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான ஒருவர் சிவாங்கி. பாடகியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டாலும், அவர் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.

இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், ஹே சினாமிகா ப்ரொமோஷனுக்காக, துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள். இதில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஓகே கண்மணி படத்தில் வரும் ஒரு காதல் காட்சியை சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் சிவாங்கி. இப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *