சித்த மருத்துவத்தில் தேன் ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது எந்த ஒரு நோய்க்கும் இதை துணை மருத்துவப் பொருளாக கலந்து கொடுப்பார்கள் காரணம் இது வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று தன்மைகளை தனது நிலையில் வைக்கும் ஒரு அருட்பெரும் மருந்து.
ஆரோக்கியமான இதயத்திற்கு பெரிதும் உதவுகின்றது எப்படி என்றால் தேன் இயற்கையாகவே வெப்பம் நிறைந்தது அதனால் தான் காய்ச்சல் போன்ற கப நோய்களுக்கு மருந்து கொடுக்கும் பொழுது அவற்றை தேனுடன் கலந்து கொடுக்கின்றனர் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இயற்கையாகவே மாரடைப்பு பக்கவாதம் மற்றும் சில வகை புற்று நோய்களுக்கு சிறந்த தற்காப்பு மருந்தாக பயன்படுகிறது .
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கின்றது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவி செய்கிறது மேலும் இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவை சீர்படுத்தி சரியான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
தேனை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் வராது இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிடுவதால் அதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடென்ட் உட்பொருட்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது எனவே ஒருவருக்கு இரத்த அடைப்பு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் அடுத்ததாக ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு உதவி புரிகின்றது உறங்கும் முன்பு ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டால் போதும் இது இன்சுலின் அளவை அதிகரிக்கும் உடலை ரிலாக்ஸ் ஆக உணர செய்யும் அப்போது நல்ல மன நிலையைத் தரும் ஹார்மோனாக மாற்றப்படும் தேனை தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
உடல் எடை குறைக்க உதவுகின்றது
அடுத்து உடல் எடை குறைக்க உதவுகின்றது தேன் உடலில் உள்ள கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்திக்கு மிகவும் உதவி செய்கின்றது எனவே ஒருவர் இரவில் தூங்கும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டால் உடலில் கொழுப்புகளை இரவு நேரங்களில் சற்று அதிகமாக எரிக்க ஆரம்பிக்கும் தூங்கும் போது தேவையற்ற உடல் கொழுப்புகளை நீக்கி இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை கொடுக்கும் இரவு நேரத்தில் பசி எடுக்காமலும் இருக்கும்.
தீக்காயங்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது
அடுத்ததாக தீக்காயங்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது தீக் காயங்கள் மீது தேனை தடவி வருவது விரைவில் புண்களை ஆற்ற உதவும் இது அவற்றுக்கான இறந்த தேவையற்ற செல்களை நீக்கி விரைவில் தீ புண்கள் குணமாவதற்கு உதவுகின்றது மேலும் தழும்புகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது .
லேசான தீக்காயங்களுக்கு முதலில் தண்ணீரால் கழுவிய பிறகு அதன் மீது நீங்கள் தேனை தடவலாம் எலும்புகளை பலப்படுத்துகின்றது தேன் எலும்புகளை பலப்படுத்தும் அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. தேனில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.
தேனே தேவையான அளவு எடுத்துக் கொண்டால் உண்ணும் உணவில் உள்ள கல்ஷேக உறிஞ்சும் திறன் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் வைட்டமின் டி சத்துக்களை அதிகம் உறிஞ்சும் திறன் இதற்கு உண்டு அடுத்ததாக மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு உதவுகின்றது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு தேன் பெரிதும் உதவுகின்றன. சுத்தமான தேனை பயன்படுத்தும் போது அதனுடைய முழு நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.
RELATED: Aloe Vera benefits