பிளாஸ்டிக் தீமைகள்

பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது. வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.

      

பிளாஸ்டிக் மாசு

          தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும்  வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது.

தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் பெருகுவதைத் தடுக்கின்றன.

மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன. 

மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன.

இயற்கையை சீரழிக்கும் பிளாஸ்டிக்

நெகிழிக்குப்பைகள் பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு வந்து கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப்பைகளை உட்கொண்டு ஒரு ஆண்டுக்கு பல லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2.குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப்பையால் கடுமையாக மாசடைந்துள்ளதால் இந்நீரில் உள்ள நீர்வாழ் உயிரினங்களும், மனிதர்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

3.நெகிழிப்பை, சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஓடும்போது, அதன்மீது நடக்கும் போதும், அதிலிருந்து வரும் காற்றை சுவாசிக்கும் போதும் பல தோற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது.

4. சாலை ஓரங்களில் தேங்கிக்கிடக்கும் நெகிழிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. இதனால் மழைக்காலத்தில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு இந்த நெகிழிக்குப்பையே முதற்காரணம்.

pilaastik-stil-7.jpg5. இந்த நெகிழிக் குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது காலத்திற்கும் அழியாமல் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் வாயுவாகும்.

6.மனிதர்கள் உண்டபின் கீழே போகும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது.

7. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. மேலும் பயிர்வளர்ச்சியையும் பாதிக்கிறது.

8.நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறுசுழற்சி செய்யும் போதும், உருகும் போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல்நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வரக் காரணமாகிறது.

சிலருக்குத் தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது. மேலும் மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

நெகிழியை கட்டுப்படுத்தும் வழிகள்

உணவு பொருட்களை உண்ண மூங்கில், கரும்பு தாழ்களால் ஆன தட்டுக்கள், வாழை இலை போன்றன ஆரோக்கியமானவையாகும்.

மற்றும் நெகிழி பொருட்களில் இலகுவில் உக்கல் அடையக் கூடிய நெகிழியை உருவாக்கலாம். இல்லாதுவிடின் நெகிழியை மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியும்.

பாவிக்கின்ற நெகிழியை சரியான முறையில் கழிவகற்றல், மீள்சுழற்சி செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதும் நெகிழி தொடர்பான பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் முறைகளாகும்.

பிளாஸ்டிக் ஒழிப்போம்

           நெகிழி போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இயற்கை தாவரங்களுக்கும் மண்டலத்திற்கும் கேடாகும் தவறாக பயன்படுத்தப்படும்.

 பிளாஸ்டிக் மறுசுழற்சி முறைகளில் கூட மனிதனுக்கு தேவையில்லாத தொந்தரவுகளை அதிகம் அடர்த்தி குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் எப்போதும் மறுசுழற்சிக்கு உதவுவது இல்லை இதன் காரணமாக அவற்றை கழிவுகளில் கொட்டுகின்றனர்.

 இதனால் நாம் உயிர் வாழ ஏதுவான சுற்றுப்புறச் சூழலை கொடுத்துள்ள பூமிக்கு நாம் தண்டனையை கொடுக்கின்றோம் எனவே பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது இன்றைய அறிவியல் காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *