10 Tips to overcome laziness

சோம்பலை போக்க 10 குறிப்புகள்

நீங்க தினம் செய்யும் செயல்களை, வாழ்வில் இதுவரை செய்த முக்கிய செயல்களை யோசித்துப் பாருங்க. அனைத்து செயல்களிலும் lazy ஆக இருக்கிறீர்களா என்ன? கண்டிப்பாக கிடையாது. சில விஷங்களை மிக சுறு சுறுப்பாக செய்திருப்பீங்க. மேலும் சில விஷங்களை மிக சுறு சுறுப்பாக செய்து கொண்டும் இருப்பீங்க. ஒரு விஷயத்தை நீங்க “போதுமான சுய உந்துதல் இல்லாமல் செய்ய” முற்படும் பொழுது, உங்களுக்கு சோம்பேறித்தனம் இருப்பது போல இருக்கலாம். எந்த விஷயத்தில் உங்களுக்கு சோம்பேறித்தனம் இல்லாம வேண்டுமோ அந்த விஷயத்திற்கு சுய உந்துதல் ( Self Motivation ) கண்டிப்பா தேவை. இந்த self motivation உடன் சுறு சுறுப்பாக விஷயத்தை அணுக, சொல்லப் போகும் 10 குறிப்புகளை குறிப்பெடுத்து, தின வாழ்வில், செயல் படுத்துங்க.

எண்ணத்தை மாற்றி அமைத்தல்!

மற்றவர்களை நம்பியே சோம்பெறிகள் வாழ்வார்கள் . இதை முதலில் விட்டுவிடுங்கள் . யாராவது தன்னை எழுப்பி விட வேண்டும் . யாராவது நம் வேலையை அவர்களே செய்துவிட்டால் எப்படி இருக்கு என்று நினைக்கும் எண்ணத்தை விடுங்கள்

நடப்பதே நல்லது!

கார், பேருந்து, பைக் என்று ஒரு இடத்திற்கு போவதற்கு பல வழிகள் இருந்தாலும் முடிந்தவரை நடக்க முயற்சியுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் அமையும், சோம்பேறித்தனம் குறையும்.

தன்ஆர்வத்தை மேற்கொள்ளுதல்!

யாராவது நிர்பந்தம் செய்தால் மட்டுமே எந்த வேலையாக இருந்தாலும் சோம்பேறிகள் செய்வார்கள் . தானாகவே செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் குறைவாக இருக்கும் எனவே நீங்களே முன்வந்து சுயமாக உங்கள் வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள் .

திட்டம் தீட்டி செயல்படுதல்

திட்டம் தீட்ட கற்றுக்கொள்ளுங்கள் . மனம் சொல்வதை மட்டும் கேட்காமல் திட்டமிட்டு காரியங்களை செய்ய முயற்சி செய்யுங்கள்.

நமது முயற்சியே நமது வெற்றி

உங்கள் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அதுபோல உங்கள் வெற்றிகளுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நம்புங்கள். இதனால் சோம்பேறித்தனம் குறைய வாய்ப்பு உள்ளத்து.

ஒரு நேரத்தில் ஒரு செயல் ( One Action At A Time )

அளவிற்கு அதிகமாக பல வேலைகளை ஒரே குறிப்பிட்ட நேரத்தில் செய்ய திட்டமிடும் பொழுது எதனை செய்ய என்ற பதட்டத்தில் எதையும் செய்ய முடியாமல் சோம்பேறித்தனம் ஏற்பட்டு விடும்.

பல செயல்களை நினைத்துக் கொண்டே இருந்தால் இறுதியாக எதையும் செய்து முடிக்க முடியாது.

‘ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயல்’ என்ற முழு தெளிவுடன் திட்டமிட்டு செயல்படுங்க. சோம்பேறித்தனம் நீங்கி செயல்படுவீங்க.

சுய உந்துதல் (self motivation)

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சோம்பேறிகள் என்பது சோம்பேறிகள் கிடையாது. அவர்கள் ஒரு நிர்பந்தத்தின் கீழே வேலை செய்ய விரும்புபவர்கள். இன்னொருவர் கண்காணித்தால்தான் வேலை செய்வார்கள். தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள தெரியாதவர்கள். எனவே உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள்.

நினைத்த வேலையை உறுதியாக செய்து முடித்து விடுவேன், நினைத்ததை செய்ய எனக்கு முழு ஆற்றல் உள்ளது, எதையும் உடனே செய்து முடித்து விடுவேன், செயலை செய்தால் மட்டும் தான் தேவையானதை பெற முடியும், செயலை செய்து முடிக்கும் பொழுது என்னுள் திறமை வளரும் போன்ற உறுதி மொழிகளை நீங்க பின்பற்றும் பொழுது உங்களின் உள் ஊக்கம் ஏற்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீங்க.

விளைவுகளை நினைத்துப் பார்த்தல் ( Think About The Effect )

நீங்க செயலை செய்யாமல் விடுவதால் ஏற்பட போகும் விளைவுகளை மனதில் ஆழ்ந்து நினைத்துப் பாருங்க. ஏற்பட போகும் பாதிப்புகள் செயலை சுறு சுறுப்புடன் அணுகும் திறனைக் கொடுக்கும்.

செய்யாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் இது நடந்து விடுமோ, அது நடந்துவிடுமோ என்ற முன் எச்சரிக்கை எண்ணமே செயலை செய்ய தூண்டும்.

தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகதீர்கள்..

எல்லா வேலைகளையும் எதாவது ஒரு தொழில்நுட்ப கருவியின் உதவியால் எளிதாக செய்து முடிக்க நினைப்பதை கைவிட வேண்டும் . இதனால் எளிதில் சோம்பேறித்தனம் உங்களுக்கு வந்துவிடும் . முடிந்தவரை தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகமல் இருக்க முயற்சியுங்கள்

இன்று மட்டுமே நிஜம்..

நாளை என்ற வார்தையை கெட்ட வார்தையாக நினைத்துகொள்ளுங்கள். முற்றிலுமாக இன்று மட்டுமே நிஜம் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள் .

செயலை தள்ளிப் போட்டு ( procrastinate ) செய்ய பழக்கப் பட்டு இருந்தீங்கனா, இந்த பழக்கமே உங்களுக்கு சோம்பேறித் தனத்தை ஏற்படுத்திவிடும். இந்த நேரத்தில் இந்த செயலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தவுடனே, அந்த கணம் வரும் பொழுது, அந்த செயலை உடனே செய்ய பழகுங்க. தள்ளிப் போடும் பழக்கத்தை விட முடியும். செயலை சுறுசுறுப்புடன் செய்ய மனம் பழக்கப் படும். தள்ளிப் போட வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் ஏற்படாது.

தின வாழ்வில் உங்களுடன் பழகுபவர்கள், உங்களை சுற்றி உள்ள சூழ்நிலை எப்படி உள்ளது? உங்க சூழல், பழகுபவர்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் இருப்பது போல ( stay positive with negative people ) பாத்துக்கோங்க. உங்களின் உள், தானாக, சுறு சுறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

சூழலை பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதன். நீங்க இருக்கும் சூழல் சுறுசுறுப்பு நிறைந்ததாக இருக்கும் பொழுது உங்களுக்குள் சுறுசுறுப்பு ஏற்படும்.

சோம்பேறித்தனம் ஒன்றும் ஒரு வியாதி அல்ல அது மனம் சம்பந்தபட்ட விஷயம் . ஆபத்தான சூழ்நிலையில் எந்த உயிரும் தன்னை காப்பற்றிக்கொள்ள முயற்சி செய்யும் அதுபோல உங்களை மாற்ற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்…!