கொடூரமான முலைவரி சட்டம் breast tax in tamil

வணக்கம் நண்பர்களே! இன்றய பதிவில் இது வரை இந்த உலகில் நிறைய வரி விதிப்பு சட்டங்களை பற்றி கேள்வி பட்டிருப்போம் ஆச்சரியப்பட்டிருப்போம் . ஆனால் நீங்கள் இதுவரை கேட்டிராத மிகவும் கொடூரமான வரிதான் இந்த முலைவரி இதன் வரலாறு என்ன இது எப்படி பின்பற்றபட்டது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

முலைவரி வரலாறு

இந்து சாதிய கட்டமைப்பில் பல கொடுமைகள் நடந்தது நமக்கு தெரியும். அதில் நம்மை தூக்கிவாரிப் போட வைக்கும் ஒரு கொடுமை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது .அது என்னவென்றால் ,அந்த சமஸ்தானத்தில் தாழ்ந்த சாதி பெண் மக்கள் தங்கள் மார்பை மறைக்க உரிமையில்லை .மார்பை காட்டிக் கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும் என்று ஒரு சட்டத்தை வைத்திருந்தார்கள் இந்த முலைவரி என்பது கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் புழக்கத்தில் இருந்துள்ளது .திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வசித்து வந்த பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கும் இந்து தலித் இன பெண்களுக்கும் விதிக்க பட்ட வரிதான் இந்த முலைவரி.

இன்றய பதிவில் இது வரை இந்த உலகில் நிறைய வரி விதிப்பு சட்டங்களை பற்றி கேள்வி பட்டிருப்போம் ஆச்சரியப்பட்டிருப்போம் . ஆனால் நீங்கள் இதுவரை கேட்டிராத மிகவும் கொடூரமான வரிதான் இந்த முலைவரி இதன் வரலாறு என்ன இது எப்படி பின்பற்றபட்டது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

தனது மார்பகங்களை உடைகள் கொண்டு மறைக்கும் பெண்களுக்கு இந்த வரி விதிக்கபட்டுள்ளது. மார்பு சீலை போடவேண்டுமென்றால் அதற்கு ‘முல கரம் ‘ முலை வரி ,மார்பின் அளவுக்கேற்ப கட்டவேண்டும் !. அதாவது பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் அதிக வரியை செலுத்தி ஆகவேண்டும். இந்த வரியை வசூலிக்க அரசு ஊழியர் ஒருவர் வீடு வீடாக சென்று அங்கு உள்ள பெண்களின் மார்பை பிடித்து ,மார்பை அளவு எடுத்து, அதை நிறுத்து பார்த்து, அதற்குத் தகுந்தாற்போல் வரி போடும் கொடுமை நடந்தது

இந்த வரிக்கான முக்கிய காரணம் தாழ்ந்த சாதியினர் உயர் சாதியினருக்கு வழங்கும் மரியாதையாக இது கருதபட்டது. உயர் சாதியினருக்கு வழங்கும் மரியாதை காரணமாக அங்குள்ள பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் உடைகள் அணிவதில்லை. ஆற்றிங்கள் ராணி ஒருமுறை கீழ்சாதி பெண் ஒருவர் தனது மார்பை மறைக்க உடை அணிந்ததால் அவரின் மார்பகம் வெட்டபது என்றும் தகவல்கள் உள்ளன.

மார்பகத்தை அறுத்து வரி செலுத்திய நாங்கிலி

இந்த முலைவரிக்கு எதிராக குறள் கொடுத்தவர்களில் முக்கியமானவர் என்று அன்றய காலகட்டதில் வாழ்ந்த நாங்கிலி என்ற பெண் ஆவார்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

ஒருமுறை வரிக்கேட்டு வந்த அரசு ஊழியருக்கு தனது மார்பகத்தை அறுத்து வரியாக செலுத்தி தனது உயிரை விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் முலைவரி சட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்ப்கப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த