மஹாபாரதம் கூறும் 10 வாழ்க்கை பாடங்கள் TOP -10 LIFE LESSONS in mahabaratham in tamil

வணக்கம் குடிமக்களே ….!!!!

என்னடா இவன்…எடுத்ததும் ராமாயணம்,மஹாபாரதம்னு,அந்தகாலத்து கதைக்கு போறான்னேன்னு யோசிக்குரீங்களா…

அந்தகாலமோ, இந்தகாலமோ……எந்தகாலமா இருந்தாலும்,அது நமக்கு சொல்லி குடுக்குக்குறது என்னன்னா…

“எதுவுமே புரியாம தொடங்குற நம்ப life, எல்லாமே புரியவரப்போ ஒரேயடியா வயசாகி முடிஞ்சி போய்டுது”… நாம்ப… life ல எதாச்சி கத்துக்கலாம்ன்னு பார்த்தா, life fulla வே கத்துக்குறதுலயே போயிருது…இந்த நிலைமைய மாத்த முடியாதா…? இதுக்கெல்லாம் வேறவழியே இல்லயான்னு நமக்குள்ள ஆயிரம் குழப்பம்.அதுமட்டும் இல்லாம life இப்டியே போய்டுமோன்ற பயம் வேற ….!

இதெல்லாத்தையும் மாத்தி, “நம்ம

வாழ்க்கைக்கு நாம்ப தான்டா ராஜான்னு” கெத்தா சுத்தணும்ன்னா, அதுக்கெல்லாம் ஒரே வழிதான் இருக்கு.

ஐய்யோ என்னப்பா அந்தவழி, கொஞ்சம் சீக்கிரம் time waste பண்ணாம அதகொஞ்சம் சொல்லேன், அப்டின்னு நீங்க கேக்க வர்ரது எனக்கே நல்லா கேக்குது ……

okok நண்பா…அந்த வழிதான் என்னன்னா…..

“நாமலே, எல்லாத்தையும் வாழ்ந்து தெரிஞ்சிக்கிறத விட – ஏற்கனவே வாழ்ந்தவன பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டா” நம்ப வாழ்க்கைல ஒன்னுஒன்னையும் “பட்டு” தெரிஜிக்காம….

பட்டுபட்டுன்னு தெரிஜிக்கிட்டு பக்கவா life ah run பண்ணிட்டு போய்ட்டே இருக்கலாம் …..

அதுக்குத்தான் அந்தகாலத்து கதைங்க நமக்கு எப்போவுமே special ah useஆவுது.

அந்தவகைல…” மவனே நீ-மண்ணு மேல ஆசபட்டாலும் சரி, பொண்ணு -மேல ஆசபட்டாலும் சரி”

ஓவர் ஆஹ போனன்னு வையி சங்குதாண்டி மாப்ள…அப்டின்னு வாழ்க்கையோட எதார்த்தத்தை easy ah சொல்லுறதுக்கு, வாழ்ந்து கெட்ட மஹாபாரதத்தை விட்டா வேற என்னங்க இருக்கமுடியும் ….

தலைமுறையே கடந்தாலும், தல-தளபதியே புதுசு புதுசா பொறந்தாலும், உன்னக்கோ,எனக்கோ, எல்லாருக்கும்……

இதான்டா life, அத ஒழுங்கா தெரிஞ்சிக்கிட்டு உஷாரா பொழச்சுக்கோன்னு….

Examples ஆஹ அள்ளிஅடிக்குறதுல, இத விட best வேற என்னங்க முடியும் …..

ஓகே ok …

இவ்ளோ buildup பண்ணுற அளவுக்கு, அப்டி இதுல என்னதான்பா இருக்குன்னு பாக்கலாம்…

நம்ப lifekku மஹாபாரதம் சொல்லிகுடுக்குற, பச்சக்கு பச்சக்குன்னு set ஆவுற முக்கியமான பத்து-matter என்னன்னு….short and sweet ஆஹ இந்த video ல தெளிவா பாக்கலாம் வாங்க ….

Nothing will happen ; without any reasons…( காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது)….

First and Best ,important lesson ஆஹ மஹாபாரதம் நமக்கு என்ன சொல்லுதுன்னா…

இந்த world ல நடக்குற எந்த ஒரு காரியமும், ஒரு காரணம் இல்லாம நடக்குறது இல்ல.even ஒரு சின்ன விஷயம் நடக்கணும்ன்னா கூட அதுக்குன்னு particular reasons கண்டிப்பா இருக்கும். உன்னக்கு ஒன்னு வேணும்ன்னா நீதான் அதை try பண்ணனும்.உனக்காக,உன்ன தவிர வேற யாரும் லாஸ்ட் வரைக்கும் வரபோறது இல்ல.ஏத்துக்க முடிலனாலும் இத நிசம்.

இன்னொருத்தர் sudden ah நம்பகிட்ட வந்து ஏதோ try பண்ணுறாங்கன்னா,

உஷார் ஆய்க்கோங்க… நம்மளால அவங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்கவேண்டி இருக்குன்னு. இதுல இருந்து நாம்ம learn பண்ணிக்க வேண்டியது என்னன்னா…காரணத்தோடதான் எல்லாம் நடக்குது. but ஒரு reason காக இன்னொருத்தர் கிட் ட நாம பழகுற வேலைய மட்டும் வச்சிக்ககூடாது.அது நம்பள அப்புறம் cheap ஆஹ மத்தவங்க கிட்ட project பண்ணிடும்.

NO 2 : Half knowledge can be more dangerous then no knowledge… (அறிவு இல்லாததை விட அரை-குறை அறிவு மிகவும் ஆபத்தானது)….

சும்மாவா சொல்லி இருகாங்க பெரியவங்க..”சீறும் பாம்பை நம்பு ,சிரிக்கும் முட்டாளை நம்பாதேன்னு”.

இந்தமாறி கேஸ்க்கு,அவங்க life ல blood group மட்டும் தா positive ஆஹ இருக்கும்.ஆனா life fulla வெறும் negative ஆஹ மட்டும்தான் இருக்கும்.

உன் friends ah யாருன்னு சொல்லு..நீ யாருன்னு நான் சொல்லுறன்னு சொல்லுவாங்க .but half knowledge கொண்ட ஆள்கூட மட்டும் நீங்க சகவாசம் வச்சீங்கன்னா, ஆள் address கூட தெரியாத அளவுக்கு ஆளாய்டுவிங்க பார்த்துக்கோங்க …

NO 3 : Bad company can ruin your life ; beyond imagination …(கெட்டசகவாசம் உங்கள் வாழ்க்கையை கற்பனைக்கு அப்பாற்பட்டு அழித்துவிடும் )…

இதுக்குமுன்னாடிஅரை-குறை அறிவை பத்திபார்த்தோம் .ஆனா இப்போ ஆப்பு வைக்குற ஆளுங்கள பத்தி பாக்கபோறோம்.

என்னதான் நாம்ம உத்தமபுத்திரனா இருந்தாலும், பொய்யேபேசாத அரிச்சந்ததிரான இருந்தாலும், நம்மளோட சேர்க்கை இருக்கே, அதுதா நம்ம யார் ? அப்டின்றத define பண்ணுது.

நாம்ம சும்மா இருந்தாகூட”வாமச்சானே மச்சானே அப்டின்னு நமக்கு ஆப்பு வச்சானே வச்சானேன்னு”, சும்மா இருந்த நம்மளையும் உசுப்புஏத்தி உசுப்பு ஏத்தி, ஒடம்ப ரணகளம் பண்ணிட்டு போய்டுவாங்க இந்தமாறி ஆளுங்க.

முடிஞ்சவரைக்கும் எல்லார் கூடவும் பழகுங்க it’s ok . buttt “அளவுக்கு மீறினா பாயாசம்கூட poison தான்னு” மறந்துடகூடாது நண்பா ….

NO 4 : What has to happen ; will happen…(நடக்கவேண்டியது கண்டிப்பாக நடக்கும் )…

நாலாவதா, நல்லதா நாம்ம ஒன்னு பாக்கபோறது என்னன்னா, எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச “பகவத்கீதையோட” one of the most important line தான் இது.

நம்மம life ல ” எது நடக்கணும்ன்னு இருக்குதோ….அது 100 percent sure ஆஹ் நடக்கும்”. but என்ன, அது இப்போவா, இல்ல எப்போவாஅப்டின்னுறதுதான் matter.

அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கவேண்டியது important.

“காத்திருக்கிறது கூட ஒரு சுகமான வலிதான்னு காதலன் சொல்லுவான்” ,காரணம் : கடைசில அது கைகூடும் அப்படின்ற ஒரு trust தான். நம்பகிட்ட கொஞ்சமா நம்பிக்கையும் அதுகூடவே நெறய hard workkum இருந்தா கண்டிப்பா நடக்க வேண்டியது நல்லாவே நடக்கும், இத மாத்தா யாராலயும் முடியாது sir.

NO 5 : The one who gamble ; lose all ….(சூதாடுபவர்கள் அனைத்தையும் இழக்கிறார்கள் )…

அட என்னப்பா,மஹாபாரதம் கத்துக்குடுக்குற lessons னு சொல்லிட்ட.அப்போ எல்லாரோட mind kum வர்ரது game தான. game ன்னா சும்மா விளையாடுற game லாம் இல்ல. சூதோடும்-மாதோடும் விளையாடும் ஒரு முடிவே இல்லாத gambling ஆச்சே.

இந்த incident நமக்கு சொல்ல வர்ரது என்னென்னா …?

ஆசையை மறந்தவன் யாரும் இல்ல , ஆசபடாதவன் மனுஷனேஇல்ல. ஒரு இடத்துல ஆசை எப்போ பேராசையா மாறுதோ அங்கதான் ..சூது -வாதுமாறி, மண்டசூடுஏறி,ego hurt ஆகி கண்மூடித்தனமா என்னென்னமோ செய்யறது.

குறுக்கு வழியில போயிட்டு வழுக்கிவிழுறதவிட ,நேர்வழில late ஆகவே போலாம் தப்பு இல்ல.

“கீழ விழுறதவிட,நிக்காம போயிட்டே இருகோம்மென்ற ஒரு கெத்து இருக்கும்”.

NO 6 : As you sow ; so shall you reap …(எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்விர்கள் )…

“நீ பற்ற வைத்த நெருப்பொன்று – உன்னை பற்றி எரிக்க காத்திருக்கும் “இது மெர்சல்பட தளபதியோட dialogue”. இதுக்கு meaning தெரியுமோ தெரியாதோ but நம்ம பசங்க இப்போல்லாம் hit hero சொல்லுறததான கேக்குறாங்க, historical heroes சொல்லுறத யார் கேக்குறா சொல்லுங்க பாக்கலாம்.

நாம்ம இப்போ என்ன செய்யுறோமோ அதுதா future ல நமக்கு வேற மாறி திருப்பி நடக்கும். “karma is a boomerang ” இந்த matter ah 2000 yearsகு முன்னாடியே நம்ம ஆளுங்க இதிகாசத்துல implement பண்ணிட்டு போட்டாங்கன்றதுதான் மறக்கவும் ,மறுக்கவும் முடியாத உண்மை .

NO 7 : Understand that ;Change is the law of nature …( மாற்றம் என்பது இயற்கையோட விதி,என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்)…

மாற்றம் என்பது எல்லாகாலத்திலும் நடந்து கொண்டேதான் இருக்கும் எதுவும் permanent அல்ல இதுவும் permanent இல்ல . எல்லாமே மாறக்கூடியது, அழியக்கூடியது, கடந்துபோகக்கூடியது, அதனால் ஆணவத்தில் ஆடாம, கஷ்டம் வரும் வேளையில் வாடாம இருக்கணும்ன்றதுதான் இதோட another meaning .

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது இது எல்லாருக்கும் தெரியும் .நேற்றைய தினம் மாறி இன்று இருப்பதில்லை. இன்னைக்கு மாறி நாளைக்கு இருக்குறது இல்ல .கடந்த seconds ஐ மீண்டும் வரவைக்க முடியாது. இது மனிதனோட மனத்திலும் உண்டு. சின்ன சின்ன காரணங்களுக்காக கோபப்பட்டு இருக்கலாம் but

“விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” இதை மனசுல வச்சிட்டு , கோபப்படும் முன் mind ஆஹ் மாற்றிக்கொள்வதில் தப்பில்லை நண்பா .

NO 8 : Learning throughout life is the best gift ; you can give your self …( வாழ்க்கைமுழுவதும்கற்றுக்கொள்வது ,உங்களுக்கு நீங்களே கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு )…

நாம் பார்க்குற ஒவ்வொரு விஷயத்திலும் கற்றுக்க 1000 things கண்டிப்பாக இருக்கும். வெளியில் எந்த இடத்திற்கு போனாலும் correct time கு செல்லுங்கள். உங்களை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி அமைதியாக இருங்கள். எப்போவும் செய்யும் வேலைகளில் Hard Work செய்வதை தவிர்த்து, smart work செய்வதை follow பண்ணுங்க. உங்களைபிடிக்காத, உங்களை கவிழ்க்கும் வேலைகளை செய்யும்நபர்களை சமாளிக்கும் தந்திரங்களை கற்றுக்கொண்டு அத செயல்படுத்துங்கள்.

lifeல கத்துக்கிட்டது கடுகு அளவுதான்,இன்னும் உலகஅளவு free ஆஹ் இருக்கு நாம கத்துக்குறதுக்கு .so always யதாட்சி ஒன்னு கத்துக்க ready ஆஹ் இருங்க .self help is the best help மாறி self development தான் நம்ப வாழ்க்கையோட பெரிய gift அத நாம மறந்துற கூடாது .

NO 9 : No man can full fill everything a women wants or need …(ஒரு பெண் விரும்பும் அல்லது தேவையான அனைத்தையும் ,எந்த ஒரு ஆணாளும் நிறைவேற்ற முடியாது )…

மண்ணாசையை விட பெண்ணாசை ரொம்ப கஷ்டம் பாஸ் ..அதுவும் மனித மனம் ஒரு குரங்குன்னு சொல்லுறத விட ….

ஒரு மங்கையின் மனம் மிக பெரிய குரங்குன்றதுதா truth… reason ஒரு பெண்ணுக்கு தேவை என்பது

ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் இருக்கும். அதை ஒரு ஆண் இல்ல நூறு ஆண் வந்தாலும் fulfill பண்ண வாய்ப்பே இல்லை.

மொத்தத்துல ஒரு பெண்ணால “ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பதுதா மிகப்பெரிய உண்ம இதுல ஏமாளியோ கோமாளியோ அது ஒரு ஆண் அப்படின்ற எண்ணத்தை மட்டும் மாத்த ட்ரை பண்ணுங்க பா.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பா correct தா but ஒவ்வொரு பெண்ணாலே கூட வெற்றியே இல்லாத ஆணும் இருக்குறான்ல்ல….யோசிச்சி எது ஒன்னும் செய்ங்க BOOS …..

NO 10: Do good , earn good, life will be more good…( நல்லதைசெய் ,நல்லதை சம்பாதித்து வாழ்க்கையை நன்றாக இருப்பாய்)…

பக்கம் பக்கமா பாடம் சொல்லும் பழைய கதைகள் பக்கத்தில் இருந்தாலும் கூட …

பத்து points ல பக்குவமாக,பட்டுன்னு பதியவைக்கும் இந்த பதிவில் பத்தாவது pointபளிச்சுன்னு சொல்ல வருவது என்னென்னா…

இதிகாசகதைகள் human life கு எப்போவும் inspiring தான்.

“last BUT not least போல ,நல்லதை செய்து , நல்ல name ஐ வாங்கிவிட்டால், நம்ம life nonstop ஆக நல்லாத்தான் இருக்கும் என்பது confirm.

Anyway….life ல நம்ப வாழ்ந்துதான் கத்துக்குறத விட…..இந்த மாறி simple ஆஹா கத்துக்கிட்டு வாழுற ஒவ்வொரு நிமிஷமும் satisfied ஆஹ் வாழ வாழ்த்துக்கள் ……

*************************************************************************************
*************************************************************************************