zombie virus in Siberian permafrost in tamil

மனிதனை ஜோம்பியாக மாற்றும் போதைப்பொருள் zombie drugs in tamil

அமெரிக்காவில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜாம்பி

zombie virus in Siberian permafrost in tamil

தி வால்கிங் டெட், ஜாம்பி லேண்ட் என பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் மிருதன் படத்திலும் ஜாம்பியை நாம் பார்த்தது உண்டு. வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் முற்றிலும் தன்னிலை மறந்து, மிருகமாக மாறி சக மனிதனை கடித்து குதறும் மோசமான விளைவுகளை ஜாம்பி வைரஸ் ஏற்படுத்தும். திரைப்படங்களில் காண்பது கற்பனைக்கதையாகவே இருந்தாலும், நிஜ வாழ்விலும் ஜாம்பி வைரசை ஒத்த விளைவுகள் இப்புவியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக போதைப்பொருள் உட்பதால் ஜாம்பியாக மாறுவதாக வெளியான தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. இவ்வளவு நாள் அது வைரஸ் என்றே நினைத்து கொண்டிருந்த நிலையில், போதைப்பொருள் மூலம் ஜாம்பியாக மாறுவது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள்

‘டிராங்க் ட்ராங்க டோப்’ ஜாம்பி மருந்து என்றும் அழைக்கப்படும். இந்த போதை மருந்தின் பெயர் சைலாசின் (xylazine). இந்த போதை மருந்தை எடுத்துக் கொண்டால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, மயக்க மருந்து உட்கொண்டதுபோல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பயங்கர தூக்கம், மன அழுத்தம், மூச்சி விடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சைலாசின் என்ற போதை மருந்தை உட்கொள்ளும் நபர்களுக்கு நிற்கவே முடியாமல் தள்ளாடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி, ஜாம்பி போன்ற அறிகுறிகளையும் வருவதாக கூறப்படுகிறது. இந்த ஜாம்பியானது தோல்களில் துளைகள் ஏற்படுவதோடு, கால் மூட்டுகள் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மருந்தானது நாம் சாப்பிடும் உணவுகளில் கலந்தால் அதிகப்படியான ஆபத்துக்களை ஏற்படுத்தும். மேலும், நியூயார்க் போஸ்ட்டில் உள்ள ஒரு அறிக்கையின்படி, ”அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், சைலாசின் மருந்தை கால்நடைகளில் பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதனை மனிதர்கள் உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது. சைலாசின் போதை மருந்தை சிறிய அளவில் எடுத்துக் கொண்டால் கூட ஆபத்தானது தான். இந்த போதை மருந்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால் ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உயிரைக் காப்பாற்றவது கடினம் என்று கூறப்படுகிறது.

வீதிகளில் சுற்றித்திரியும் ஜோம்பிபோல..

Zombie drugs in Tamil

மனிதர்கள் ஆபத்து விளைவிக்கும் இந்த சைலாசின் என்ற போதை மருந்தை அமெரிக்காவில் இளைஞர்கள் உட்பட பலரும் உட்கொண்டதால் ஜாம்பி போன்று மாறி வீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், வீதிகளில் ஜோம்பி போன்று நடந்து செல்லும் காட்சிகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, சைலாசின் என்ற மருந்து முதன்முதலில் 2006ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகர சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு இந்த சைலாசின் என்ற மருந்தை உட்கொண்டதால் 2,668 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைலாசின் மருந்து குறித்து 10 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 2015ல் 1 சதவீத இறப்புகளும், 2021ல் 6.7 சதவீத இறப்புகளும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் இந்த ஜாம்பி மருந்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடையவை: ஜோம்பி வைரஸ் இருப்பது உண்மையா