உங்க எழுத்து s ல ஆரம்பிச்சா என்ன அற்தம் தெரியுமா

பெயரில் என்ன இருக்கிறது என்று அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு விதமான ஆற்றல், நேர்த்தி, அழகு ஆகியவை இருக்கின்றன. அதே போல ஒவ்வொரு பெயரின் முதல் எழுத்தும் பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு பெயரில் முதலெழுத்து ஒரு நபரின் ஆளுமைத்தன்மை, அவருடைய குணம், அவருக்கு பிடித்தது பிடிக்காதது, அவருக்கு எவையெல்லாம் பொருந்தும் என்று பல விஷயங்களை குறிக்கும். அந்த வகையில் உங்களுடைய பெயர் ‘S’ என்ற எழுத்தில் தொடங்கினால் உங்களுடைய ஆளுமை குணங்கள் மற்றும் உங்களுக்கு எந்த பொருத்தமாக இருக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குவார்கள் வெளிப்படையாக இருப்பார்கள், நட்போடு பழகுவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவர்களை சுற்றி நிறைய நபர் இருப்பதை விரும்புவார்கள். மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக நிதானமாக காது கொடுத்து கேட்பார்கள். அது மட்டும் இல்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களை சௌகரியமாகவும் வசதியாகவும் உணர வைப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.

காதல் மற்றும் உறவுகள் : 

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மிகவும் ரொமாண்டிக்கான நபர்கள். அதுமட்டுமில்லாமல் எல்லா உறவுகளையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவார்கள். தன்னுடைய உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்துவார்கள். வாழ்க்கை துணையின் மீது அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். மிகவும் விசுவாசமாக இருப்பார்கள், சொன்ன வாக்கை தவற மாட்டார்கள். உறவுகளைப் பொறுத்தவரை நேர்மையும் வெளிப்படையாக பேசுவதும் இவர்களுக்கு மிகவும் முக்கியம்.

வேலை, தொழில் மற்றும் வாழ்க்கை :

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் ஒரு குறிக்கோளை வைத்திருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே கடினமான உழைப்பாளிகள். கிரியேட்டிவான வேலைகள் மற்றும் கலை துறைகள் மீது அதிகமான ஆர்வமும் ஈர்ப்பும் இருக்கும். இவர்களுக்கு இயற்கையாகவே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால், கலைத்துறை மிகவும் சாதகமான துறையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பிராப்ளம் ஸால்விங்க் என்று கூறப்படும் எந்த பிரச்னையாக இருந்தாலும் இவர்கள் எளிதில் சரி செய்து விடுவார்கள். தன்னுடைய இலக்கை அடைவதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பார்கள்.

பொருத்தமான வேலைகள் / துறைகள் : 

UX டிசைனர், ஆர்ட் தெரபிஸ்ட், ஆடை வடிவமைப்பாளர், கிராஃபிக் நாவல் ஆசிரியர், அருங்காட்சியகம், கண்காட்சி வடிவமைப்பாளர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், கிரியேட்டிவ் எழுத்தாளர், கலை இயக்குநர், மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட், டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா அஸ்யூரன்ஸ் நிபுணர், தடயவியல் நிபுணர், சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர், சுற்றுச்சூழல் என்ஜினியர், காப்புரிமை வழக்கறிஞர், பயோமெடிக்கல் இன்ஜினியர் மற்றும் தொழில்நுட்ப எழுத்தாளர்.

பலவீனம் மற்றும் எதிர்மறை விஷயங்கள் : 

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு எதிர்மறையான ஒரு சில குணங்கள் இருக்கின்றன. இது இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்றும் கூறலாம். சில நேரங்களில் இவர்களால் மாற்றத்தை எளிதாக எதிர்கொள்ள முடியாது அல்லது மாற்றத்தை விரும்பவே மாட்டார்கள். இவர்களைப் போல பிடிவாத குணம் வேறு யாருக்குமே இருக்காது. சில நேரங்களில் விளைவுகளைப் பற்றி நினைத்து பார்க்காமல் அதிரடியாக முடிவுகளை எடுப்பார்கள்.