குதிகால் வெடிப்பை சரி செய்ய சில எளிய வழிகள்!

பெரும்பாலான பெண்களுக்கு சமையலறையில் நின்று கொண்டே வேலை செய்வதால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகின்றன.

பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரி செய்ய பெண்கள் பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். ஆனால் அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்த பாடில்லை. தற்போது குதிகால் வெடிப்பை சரி செய்ய சில எளிய வழிகளை பார்க்கலாம்.

முதலில் இரண்டு ஸ்பூன் அளவு தயிர் எடுத்து அதனை வினிகருடன் சேர்த்து கலந்து குதிகாலை தடவி மசாஜ் செய்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

Feet with dry skin before and after treatment.

ஆலிவ் எண்ணெயை வினிகருடன் சேர்த்து கலந்து குதிகால்களில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் செய்து பெண் சில நிமிடங்கள் பீர்க்கங்காய் நாரினால் தேய்த்து கழுவி வர இறந்த செல்கள் அழிந்து பாதத்தின் வறட்சியை நீக்கி பாதம் மென்மையாக மாறும்.

கால்களின் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாதங்களை 20 முதல் 25 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சொரசொரப்பான கல்லை வைத்து பாதங்களை தேய்த்தால் வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாகும்.

இம்முறைகளை ஒரு முறை பின்பற்றி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.