கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் அறிகுறிகளை வைத்து வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்லி விடுவார்கள் அந்த கால பெரியவர்கள்.
கருத்தரித்த உடனேயே வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருத்தரித்த பெண்ணுக்கும் அவர் குடும்பத்தினருக் கும் உண்டு. ஆணாக இருந்தாலோ/ பெண்ணாக இருந்தாலோ குழந்தைக்கு பெயர் வைப்பதில் தொடங்கி அவர்கள் வளரும் போது செய்ய வேண்டியதை திட்டமிடுவார்கள். கருத்தரித்த 16 வது வாரத்தில் குழந்தையின் நலனை பரிசோதிக்க செய்யும் ஸ்கேன் முறையில் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவித்தார்கள். ஆனால் பெண் குழந் தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வது அதிகரித்த போது அரசாங்கம் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து தடை விதித்தது.
மேலை நாடுகளில் இந்த பிரச்சனை இல்லை யென்றாலும் இப்போதும் கர்ப்பிணிகளுக்கு இந்த எதிர்பார்ப்பு உண்டு. வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று காலங்காலமாக சொல்லி விவாதித்து வருகிறார்கள்.
முகத்தில் பருக்கள் வருவது என்பது எப்போதும் உண்டு. ஆனால் கருத்தரித்த பிறகு முகப் பருக்கள் வந்தால் அது பெண் குழந்தையை உறுதி செய்வதாகவும், பருக்கள் இல்லாமல் பளிச் முகமாக இருந்தால் அது ஆண் குழந்தைக்கான அறிகுறி என்றும் நம்பபடுகிறது.
கூந்தலிலும் கூட சில அறிகுறிகளை சொல்கிறார்கள். வயிற்றில் பெண் குழந்தையாக இருந்தால் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும் முடி உதிர்வு அதிகரிக்கும். ஆனால் ஆண் குழந்தையாக இருந்தால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஆய்வு படிபெண்களின்ஹார்மோன் மாற்றத்தை பொறுத்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனை இது. உரிய பராமரிப்பின் மூலம் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம் என்பதுதான்.
கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு பிடித்த உணவுகளை கொண்டு கூட ஆண் குழந்தை, பெண்குழந்தை என்று சொல்வதுண்டு. அதிக இனிப்பு பொருள்கள், சாக்லெட்கள் என் றால் அது பெண் குழந்தையாக இருக்கும். சற்று காரமும், புளிப்பும் மசாலாக்களும் விரும்பினால் வயிற்றில் ஆண் குழந்தை என்றும் சொல்வதுண்டு. ஆனால் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
கர்ப்பிணிகளின் மனநிலை, ருசியின் விருப்பம் பொறுத்து தான் வர்கள் உணவும் விருப்பமும் தீர்மானிக்கப்படுகிறது.
கர்ப்பிணி வயிறும் மார்பகமும்
கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணாக இருந்தால் அவர்கள் வயிறு காண் பிக்கும் நிலையை கொண்டே சொல்லலாம் என்பார்கள் பெரியவர்கள். அதிலும் பெண் ணை நிமிர்ந்து நேராக நிற்க சொல்லி அவர்கள் தொப்புள் பகுதி பெரியதாக உடலின் மேல்புறமாக இருப்பது போல் இருந்தால் அது பெண் குழந்தை. தொப்புள் கீழ் பகுதி சிறியதாக இருந்து அடிபகுதி நோக்கியது போல் இருந்தால் அது ஆண் குழந்தை.இது குறித்து ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
கர்ப்பிணிகளின் மார்பகங்கள் அளவும் கூட இதில் கணக்கில் கொள்ளப்படும். வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால் வயிற்றில் இருப்பது ஆண்குழந்தை என்றூம் சொல்வார்கள்.
கருத்தரித்த உடன் இந்த அறிகுறியை வைத்து கருவில் ஆணா, பெண்ணா என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்வீட்டு பெரியவர்கள். கருவில் பெண் குழந்தை இருந்தால் அதிகாலை சோர்வு அதிகமாக இருக்கும். ஏனெனில் ஹார்மோனில் அதிகப்படியான மாற்றங்கள் நிகழும் என்கிறார்கள். அதுவே ஆண் குழந்தையாக இருந்தால் மார்னிங் சிக் இருக்காது. சற்று சோர்வு இருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் ஒவ்வொரு பெண்ணின் உடல் வலுவை பொறுத்து தான் இந்த சோர்வு அதிகமோ குறைவோ இருக்கும். இது குறித்து தி லான்செட் என்னும் ஆய்வு கர்ப்பக்காலத்தில் பெண்கள் காலை நேரத்தில் அதிக சோர்வுக்கு உள்ளானவர்களை தொடர்ந்து ஆய்வு செய்தபோது அவர்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது எனினும் இதை வைத்து கருவில் இருப்பது ஆண், பெண் என்பதை உறுதி செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்ப்பக்காலத்தில் பரிசோதனையின் போது வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு எண்ணிக்கையும் கணக்கிடப்படும். அப்படி செய்யும் போது நிமிடத்துக்கு 140 அளவுக்கு கீழ் இருந்தால் குழந்தை ஆண் குழந்தை என்றும், அதற்கு மேலாக செல்லும் பொது பெண் குழந்தை என்றும் நம்பப்படுகிறது.
அறிவியல் ரீதியாக சொல்வதால் இது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும் இவை ஆராய்ச்சி செய்து நிரூபிக்கபடவில்லை என்பதோடு ஆண், பெண் குழந்தையின் இதய ஆரோக்கியத்தை பொறுத்து இந்த துடிப்பு அளவில் வேறுபடலாம் என்கிறார்கள்.
சரியாக நீங்கள் தெரிந்து கொள்ள மரபணு பரிசோதனையின் போது அல்லது 20 வாரங்க ளுக்கு பிறகு ஸ்கேன் செய்யும் போது குழந்தையின் பிறப்புறுப்பை பார்த்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். (தற்போது இதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது).
ஆக ஆண்குழந்தையா, பெண் குழந்தையா என்னும் விவாதத்தில் ஆண்குழந்தைக்காக வைக்கப்படும் இந்த அறிகுறிகள் எல்லாமே ஆய்வின் படி நிரூபணமாகவில்லை. இந்த அறிகுறிகளின் படி உங்கள் எண்ணங்கள் சாத்தியமாக 50 % அளவே வாய்ப்புள்ளது என்று சொல்லும் மருத்துவர்கள் எந்த குழந்தையாக இருந்தாலும் ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருங்கள் என்று சொல்வதையும் தவறவில்லை.