பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலை வறண்டு இருப்பது.அப்படி இல்லை என்றால் தலையில் பூஞ்சை தொற்று இருக்கும்.இதைப் போக்குவதற்கு ஆண்டி டேன்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்தலாம்.ஆனால் அதை பயன்படுத்தும் போது அதில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயன பொருட்களால் தலையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். பொடுகை ஈஸியான முறையில் சரி செய்வதற்கு ஒரு சில வழிகள் இருக்கிறது அதை பார்க்கலாம்.
முதல் வழி

முதலில் ஆப்பிள் சீடர் வினிகர் இது இரண்டு வகையில் தலையை பராமரிப்பதற்கு ரொம்ப யூஸ்ஃபுல்லாக உள்ளது.ஒன்று பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சை தொற்றுகளை அழிப்பதற்கும்.இன்னொன்று தலையில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதற்கும்.தலைமுடி உங்களுக்கு பளபளப்பாக மாறுவதற்கு இந்த ஆப்பிள் சீடர் வினிகருடன் சம அளவு வெண்ணீரை சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஷாம்பு போட்டு தலையை அலசினதுக்கு அப்புறம் இந்த கலவையை வைத்து தலையை மசாஜ் செய்து ஐந்து நிமிடம் கழித்து நல்ல வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுனீங்கன்னா உங்க தலையில பொடுகு தொல்லையே இருக்காது.
இரண்டாம் முறை

அடுத்ததாக எலுமிச்சை சாறு. எலுமிச்சை சாறு தண்ணீர் சேர்க்காமல் தலையில் தடவி இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும் அதற்கு அப்புறம் கொஞ்சம் எலுமிச்சை பழத்தை சேர்த்து தண்ணீரை சேர்த்து அந்த நீரால் தலையை அலச வேண்டும்.இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு ரொம்ப யூஸ்ஃபுல்லாக இருக்கும்.அடுத்ததாக பேக்கிங் சோடா. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீரை சேர்த்து தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் பண்ண வேண்டும்.அதற்கு பின் தலையை வாஷ் பண்ண வேண்டும்.இதை தினமும் செய்ய பொடுகு பிரச்சனையை சரி செய்யலாம்.
மூன்றாவது முறை

அடுத்ததாக வேப்பிலை பயன்படுத்தி பொடுகு தொல்லையை நீர்க்கலாம்.ரெண்டு கை நிறைய வேப்பிலை எடுத்து நாலு கப் நிறைய தண்ணீரை எடுத்து இரவு முழுவதும் ஊற விட்டு காலையில் வடிகட்டி அந்த நீரை மட்டும் எடுத்து தலையில் அலச வேண்டும்.ரெகுலராக செய்து வந்தால் தலையில் பொடுகு தொல்லை இருக்காது.
நான்காவது முறை

அடுத்ததாக டீ ட்ரீ ஆயில்.இந்த டீ ட்ரீயை கொஞ்சம் வெண்ணீரோட கலந்து ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு பின் ஸ்ப்ரே பாட்டில் வழியாக தலையில் தெளித்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் முடியை நன்றாக காய வைக்க வேண்டஇந்தஇந்த, டிப்ஸ பாலோ பண்றதால பொடுகு ஏற்படுவது தடுக்கலாம். உப்பு கொஞ்சம் தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்இது இறந்த செல்களை நீக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொடுகை போக்க முதலில் யூஸ் பண்ண வேண்டும் என்றால் அது உப்பு தான். சீக்கிரமாக நல்ல பலன் கிடைக்கும். அடுத்ததாக பூண்டு. பூண்டுடைய வாசனை பல பேருக்கு பிடிக்காது.இதை பயன்படுத்துவதால் சீக்கிரமாக பொடுகு நீங்கிவிடும்.மூன்று பற்கள் பூண்டு எடுத்து மசித்து கொள்ள வேண்டும்.பின் தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.அதற்குப் பிறகு சாதாரண ஷாம்பு யூஸ் பண்ணி தலைய அலச வேண்டும்.
5-வது முறை

கற்றாழை ஜெல் குளிர்ச்சியை தரக்கூடியது. இதன் மூலமாக தலையில் உள்ள அரிப்பை நீக்கலாம்.கற்றாழை ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அப்புறமாக பதினைந்து நிமிடம் கழித்து நல்ல ஷாம்பு யூஸ் பண்ணி தலையை அலச வேண்டும். அடுத்ததாக ரெண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 ஸ்பூன் தேனை கலந்து நல்ல மிக்ஸ் செய்ய வேண்டும். அதை தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதுக்கப்புறம்அரை மணி நேரம் ஊற விட்டு நல்ல மென்மையான ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். தேங்காயுடன் தேனை கலந்து மாஸ்க் போடுவதால் பொடுகை சீக்கிரமாக விரட்டலாம்.
RELATED: உங்களுக்கு முடி கொட்டுதா இத பண்ணுங்க