hair fall explained in tamil

முடி ஏன் கொட்டுகிறது hair fall explained in tamil

hair fall explained

hair fall explained in tamil

முடி உதிர்வது என்பது எல்லார்க்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது இது ஆண் பெண் என எல்லார்க்கும் முடி உதிர்வு என்பது தற்போது அதிகமாகியுள்ளது. நீங்கள் இளமையாக உள்ளீர்கள் என்பதை தீர்மானிப்பது உங்கள் முடிதான். இந்த முடி கொட்ட காரணங்கள் நிறைய உள்ளது. தற்போது உள்ள மாசு, உணவுமுறை, மனஅழுத்தம், வேலை சுமை போன்றவை ஆகும். நம்மில் இருக்கும் பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் முடிகள் என்பது நம் உடலில் நிறைய இடங்களில் காணப்பட்டாலும் நம் தலையில் இருக்கும் முடிகள் மட்டும் கொட்டுவது ஏன் தாடி வளர்ந்தாலும் அந்த முடி மட்டும் ஏன் கொட்டவில்லை என்பதை தெளிவாக இந்த பதிவில் காண்போம்.

முடிகள்

முடிகள் ஏன் கொட்டுகிறது என்பதை நாம் அறிவதற்கு முன்னால் முடிகள் பற்றிய சில அடிப்படையான தகவலை நாம் அறிவது அவசியம். இந்த முடிகள் என்பது நம் உலில் உள்ள இறந்துபோன செல்கள் எனலாம் இதனைதான் நாம் கேரடின் என அழைக்கிறோம். நாம் பிறத்து முதல் இறக்கும் வரை முடி வளர முக்கிய காரணம் ஸ்டெம்செல் எனலாம் இந்த செல்கள்தான் முடிசெல்களாக மாறும் இதனால் முடி நமக்கு வளர்கிறது எனலாம். இப்படி ஒரு முடி முழுமையாக வளர மட்டும் கிட்டதட்ட 3-ஆண்டுகள் ஆகும்.

முடிகளின் நிலைகள்

நமது முடியானது மூன்று நிலைகளாக வளரும் தன்மைபெற்றது.

முதல்நிலை ஆனஜன்– இந்த நிலையில் தமது செல்களானது அதிகரிக்கும் இதன் காரணமாக முடியானது வேகமாக வளர ஆரம்பிக்கும். இப்போது கூட உங்கள் தலையில் முடியிருந்தால் அதிலிருக்கும் 85% முடிகள் வளர்ந்து கொண்டிருக்கும்.

இரண்டாம் நிலை கேடஜன் -இந்த நிலையானது முடியானது முழுமையாக வளர்ந்து காணப்படும்

மூன்றாம் நிலை டெலோஜன் – இந்த நிலையில்தான் நமது முடியானது கொட்டத்தொடங்கும் .

இப்படி இந்த நிலைகள் என்பது நமது உடல்பகுதியில் மீண்டும் மீண்டும் நடக்கதொடங்கும் இப்படிதான் நமது உடம்பில் முடியானது கொட்டி வளரும்.

முடிகள் கொட்ட காரணம்

baldness

இப்போது முடிகள் பற்றிய நிலைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இதில் இரண்டாம் நிலையில்தான் நமது முடியானது கொட்டதொடங்கும் அப்படி முடிகள் கொட்டிய பிறகு அந்த பகுதியைதான் hair follicle-என கூறுவார்கள் இந்த பகுதியானது முடிகள் கொட்டியபிறகு மூத்தொடங்கிவிடும் இதனால்தான் நமக்கு முடிகள் கொட்டிய பிறகு மீண்டும் முடிகள் வளர்வதில்லை.

தொடர்புடையவை:முகபருக்கள் ஏன் வருகிறது

ஆண்களுக்கு ஏன் வழுக்கை விழுகிறது

நமது தலையில் முக்கியமாக ஆண்களின் தலையில் வழுக்கை விழ முக்கியமாக கூறப்படுவது டைஹைட்ரொ டெஸ்டோஸ்டிரோன் எனலாம். இதுமட்டுமல்லாமல் இன்னொரு முக்கிய காரணம் நாம் பிறக்க முக்கிய காரணமான குரோமோசோம்கள் இவையும் நமக்கு முடிகொட்ட காரணமாக அமையலாம். அதாவது உங்களின் அம்மாவுடைய அப்பாவிற்கு வழுக்கை இருந்தால் உங்களுக்கும் வழுக்கை வர வாய்ப்புள்ளது. ஏனெனில் நாம் ஆணா பெண்ணா என தீர்மானிக்கும் 23 குரோமோசோம்களில் கடைசி குரோமோசோமில் X-குரோமோசோம் ஆதிக்கம் பெற்றிருக்கும் இது உங்களின் அம்மாவின் வழி வரக்கூடிய குரோமோசாம் இதுதான் நம் முடி வளர்வதையும் தீர்மானிக்கிறது இதன் காரணமாகதான் ஆண்களுக்கு முடி கொட்டுகிறது.

ஏன் பெண்களுக்கு முடிகொட்டுவதில்லை

hair

பெண்களுக்கு முடிவளர முக்கிய காரணம் அவர்கள் ஈஸ்டிரோஜன் ஹார்மோன்களால் ஆதிக்கம் பெற்றவர்கள் இதனால் அவர்களுக்கு முடிகொட்டினாலும் கூட மீண்டும் வளர்ந்துவிடும்.

எனவே இந்த பதிவு உங்களுக்கு உபயோகரமாக இருந்திருக்கம் என நம்புகிறேன் நன்றி!