கடுக்காய்க்கு அகநஞ்சு இஞ்சிக்குப் புறநஞ்சு என்பது வழக்கம்.
ஒரு சோதனை செய்து பாருங்கள்.
கொஞ்சம்..(100 கிராம் அளவு) இஞ்சி எடுத்து தோல் நீக்கி மிக்சியிலிட்டு அரைத்து ஒருடம்ளர் அளவு நீர் ஊற்றி ஒரு கிண்ணத்தில் வைத்து அதைத் தெளிய விடுங்கள்.
ஒருமணிநேரம் இரண்டுமணி நேரம் கழித்து எடுத்து அதை இறுத்து, வடித்துப் பாருங்கள்.
அடியில் ஒரு லேயர் (வெள்ளையாய் சுண்ணாம்பு போல் ) படிந்திருக்கும். இதை இஞ்சிச் சுண்ணம் என்பர்.
கையால் சுரண்டிப் பார்த்தால் ஏதோ அரிசி மாவு போல் இருக்கும்.
பிறகு வடித்த இஞ்சிச் சாற்றில்…..மேலும் சிறிது நீர் கலந்து வடிய விட்டு சிறிது நேரம் ..தெளிய…விட்டுப் பாருங்கள்…மேலும் சிறிது வெண்படலம் தங்கும்.
இந்தவெண்படலம் வயிற்றுக்குப் போகக் கூடாது.
அதுதான் நஞ்சு. Slow poison போல்….அது உடலில் கலந்தால் நாளா வட்டத்தில் வயிறு தொடர்பான பல உபாதைகளையும் அல்சரையும் ஏற்படுத்தும்.
இதனால் இஞ்சியை தோல் நீக்கிய பின் அதற்கு மேலும் அதன் மேல் பகுதியில் சிறிதளவு சீவிவிட்டுப் பயன்படுத்துவார்கள்.
தினமும் இஞ்சியைப் பயன்படுத்தப் போவதில்லை யாரும். எப்போதோ ஒரு சிறிதளவு பயன் படுத்து கிறோம் என்பதனால் இதைக் கவனிப்பதில்லை.
ஆனால் தினமும் இஞ்சி உணவில் சேர்ப்பது நல்லது. காலை இஞ்சி கடும் பகல் சுக்கு மாலை கடுக் காய் என்பது முன்னோர் மொழிந்தது.
எனவே, தினமும் இஞ்சி டீ குடிப்போர் தோல்நீக்கியே ஆகவேண்டும்.
(கடையில் ரெடிமேட் ஆக விற்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் … தோல் நீக்கி எல்லாம் செய்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியே அரைத்திருப்பர். அதிலும் வீணா —கிப்போனதெல்லாம் கூட கலந்திருப்பர். எனவே இந்தக் கலவையை வாங்காதிருப்பது நல்லது. )
சரியா? சந்தேகம் தீர்ந்ததா?
இஞ்சிக்கரைசலை என்ன செய்வது என்கிறீர்களா? சர்க்கரையைக் கரைத்து நீர்க்கப் பாகாக்கி ( கம்பிப் பதம் வருமுன் இறக்கி…. Syrup பதத்தில்) இஞ்சிக் கரைசலைக் கலந்து குளிர்ப் பொதினியில் (ஃப்ரிட்ஜில் ) வைத்துப் பாதுகாத்து வைத்தால்அது இஞ்சி சர்பத்.
பத்து பதினைந்து நாள் வரை வைத்தி ருந்து இஞ்சி சர்பத் ஆகப் பருகலாம். செரிமானக் கோளாறு வயிற்று உப்புசம் பசியின்மைக்கு நன்மருந்து.
பத்து..பதினைந்து நாளைக்கு மேல் நாளானால் புளிப்பேறிவிடும். சிறிதளவே தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கூடுதல் தகவல்:——
இஞ்சியின் மேல் தோலைச் சீவிவிட்டுப் பயன்படுத்த வேண்டும் எனில், இஞ்சியின் உலர் வடிவமான சுக்கை என்ன செய்வது? சுரண்டிப் பயன்படுத்த வேண் டுமா? அது போதாது.
சுக்கின் மேல் சாதாரண சுண்ணாம்பைக் கவசம் போல் கனமாகப் பூசிவிட்டு .(சுக்கு வெளியே தெரியாத படி பூசி) அதை அப்படியே நெருப்பிலிட்டுச் சுட வேண்டும் சுண்ணாம்பு கருகி சுக்கின் வாசம் இலேசாக்க் கிளம்பும்வரை சுடவேண்டும் . அதன் பின் சுக்கின் மேலுள்ள சுண்ணாம்புக் கருகலைக் கத்தி யால் கனமாகச் சுரண்டவேண்டும். முழுதும் சுரண்டிய பிறகும் . மீண்டும் ஒருமுறை இலேசாகச் சுரண்ட வேண்டும்.( எதற்கு சந்தேகம் என்றுதான்)
இதன் பிறகே, சுக்கு, நஞ்சு நீங்கியதாக ஆகும்.
அதன்பின்பே அதைப் பயன் படுத்த வேண்டும்.
RELATED : walnut benefits in tamil