புகழ்பெற்ற இத்தாலிய ஆழ்கடல் நீச்சல் வீரர் என்சோ மாயோர்கா,(Enzo Maiorca) சைராகஸ் கடலின் (Syracuse sea) வெதுவெதுப்பான நீரில் நீந்திக் கொண்டே அருகில் படகில் இருந்த தனது மகள் ரோசனாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பிறகு, அவர் ஆழ்கடலுக்கு டைவ் அடிக்க தயாராகும் சமயத்தில் யாரோ அவரது முதுகில் லேசாக அடித்ததை போல இருந்தது. உடனே பின்னால் திரும்பி பார்த்த போது அங்கே ஒரு டால்பின்.. மனிதர்களிடம் சகஜமாக விளையாடி பழகும் அந்த மீன் அப்போது அவரை விளையாட அழைக்கவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்; ஆனால் அது வேறு எதையோ வெளிப்படுத்த விரும்புகிறது என்றும் புரிந்து கொண்டார்.
அந்த டால்பின் உடனே கடலுக்கடியில் சென்றது; நீச்சல் வீரர் என்சோ அதை பின்தொடர்ந்து சென்றார்.
சுமார் 12 மீட்டர் ஆழத்தில், மீனவர்களால் கைவிடப்பட்ட ஒரு மீன் வலையில் சிக்கிய நிலையில் மற்றொரு டால்பின் அங்கு இருந்தது. (கடலுக்கடியில் இதைப் போல இலட்சக்கணக்கான வலைகள் உள்ளன; இதுவும் ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு)
பிறகு, என்சோ மேலே வந்து தனது மகளிடம், டைவிங் செய்பவர்கள் உபயோகிக்கும் கத்திகளை கேட்டார்.
இருவரும் மீண்டும் கடலுக்கடியில் சென்று சில நிமிடங்களில் வலையில் சிக்கிய அந்த டால்பினை விடுவித்தனர், அது மகிழ்ச்சியின் எல்லையில், கிட்டத்தட்ட மனிதர்களின் சந்தோஷ அலறலை போல சப்தமிட்டு கொண்டு வலையை விட்டு வெளிவந்தது. உயிர் பிழைத்த மகிழ்ச்சி.
உண்மை என்ன என்றால் ஒரு டால்பின் 10 நிமிடங்கள் வரை மட்டுமே நீருக்கடியில் தாக்குப்பிடிக்க முடியும்; அதற்கு அதிகமாக மூழ்கி இருந்தால் இறந்து விடும்.
சரியான நேரத்தில் விடுவிக்கப்பட்ட டால்பின்னின் உணர்ச்சி பெருக்கை என்சோ, ரோசனா மற்றும் மற்ற டால்பின் ஆகிய யாவரும் சேர்ந்து கட்டுப்படுத்தினார்கள். பின்னர் அந்த ஆச்சரியமான விஷயம் நடந்தது: என்சோவை அழைத்து வந்த ஆண் டால்பின் அவரை சூழ்ந்து கொண்டு அவருடைய முகத்தைத் தொட்டு (அது ஒரு முத்தமிடுவது போல்), தனது நன்றியுணர்வை, மகிழ்வை வெளிப்படுத்தியது …
பிறகு, அவர்களை விட்டு விலகிச் சென்றது.
வீரர் என்சோ சொல்லும் கருத்து:
“மனிதன் விலங்குகள் உலகத்தை மதிக்கவும், அவற்றோடு உரையாடவும் கற்றுக்கொள்ள வேண்டும்; அதை செய்யாதவரை நமது இந்த பூமியில் தனது உண்மையான பங்களிப்பு என்ன என்பதை மனிதனால் ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது.
வாழ்க வளமுடன்