20-வருடமாக 75,000 கோடி மதிப்பில் நாசாவால் உருவாக்கபட்ட ஜேம்ஸ் வெப் james webb telescope என்ற தொலைநோக்கியின் சிறப்புகள் என்னென்ன மனித வராலற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தபோகும் இந்த அதி நவீன தொலைநோக்கி பற்றிய தகவலை இந்த பதாவில் பார்ப்போம்.
தொலைநோக்கி என்றால் என்ன?
இந்த தொலைநோக்கிகள் என்பது பெயருக்கு ஏற்றவாறு தொலைவில் பொருட்களை காண்பிக்கும் தன்மை பெற்றது இந்த தொலைநோக்கியானது எப்படி செயலாற்றும் என்றால் ஒரு பொருளின் மீது ஒளி படும்போது அந்த பொருளின் பிரதிபலிப்பை படமாக மாற்றும் . இந்த தொலைநோக்கியின் மூலம் நம் கண்களுக்கு தெரியாத பொருட்களையும் கிரகங்களையும் காண முடியும். இதற்காகதான் இந்த தொலைநோக்கிகள் உருவாக்கபட்டன.
ஹப்பிள் தொலைநோக்கி-hubble telescope
1990-ஆம் நாசாவால் உருவாக்கபட்ட ஒரு அதிநவீன தொலைநோக்கிதான் இந்த ஹப்பிள் தொலைநோக்கி அதுவரை நாம் கிரகங்களை பூமியில் இருந்து மட்டுமே ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருந்தோம் இந்த ஹப்பிள் பூமியை விட்டு வெளியே சென்று பூமியில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் இருந்து விண்வெளி மற்றும் கிரகங்களை ஆய்வு செய்யும் . இதானல் 1340 ஒளி ஆண்டுகள் இருக்கூடிய கிரகங்களை மட்டுமே விண்வெளியில் கண்டறிய முடியும். ஆனால் இந்த வெப் தொலைநோக்கி அதையும் தான்டி நம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை பற்றிய கேள்விகளுக்கு விடையை காண முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
related:பெருவெடிப்பு என்றால் என்ன?
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி-james webb telescope
இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது கடந்த வாரம் தென் அமெரிக்காவில் அரினா 5 இரக்கெட்டின் உதவியுடன் வின்னில் செலுத்தபட்டது . இந்த தொலைநோக்கியை உருவாக்க மட்டும் நாசா விஞ்ஞானிகளுக்கு கிட்டதட்ட 20-ஆண்டுகள் பிடித்துள்ளது அதுமட்டுமல்லாமல் இதை உருவாக்கமட்டும் 75-ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. இந்த தொலைநோக்கியானது பூமியிலிருந்து 1000 கி.மீ தொலைவிற்கு சென்றவுடன் இராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து 15-இலட்சம் கி.மீ தொலைவிற்கு சென்று நிலைநிறுத்தப்படும்.
தொலைநோக்கியின் அமைப்பு செயல்படும் விதம்
இந்த தொலைநோக்கியானது 66-அடி நீளமும் 46-அடி அகலமும் இருக்கலாம் என கூறப்படுகிறது இந்த தொலைநோக்கியின் உருவமைப்பானது ஒரு தேன் கூடுபோல தோற்றமளிக்கும் இந்த தேன்கூடு போல இருப்பதுதான் தங்கமூலம் பூசப்பட்ட கண்ணாடிகள் இது தொலைநோக்கியை சூரியனின் கடுமையான வெப்பத்தை தாங்க உதவும். அதுமட்டுமல்லாமல் இந்த கண்ணாடிகள் மீது பட்டு பிரதிபலிக்கூடிய ஒளியை படம்பிடிக்க உதவும். இதன் மூலமாக 13.6 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கிரகங்களை கூட நம்மால் படம்பிடிக்க முடியும்.
காலப்பயணம்
இந்த தொலைநோக்கி காலபயணம் செய்யும் என கூறுகிறார்களே அது என்னவென்று பார்ப்போம் . இந்த காலப்பயணம் என்பது ஒளி பயணக்கூடிய வேகத்தை குறிப்பிடுகிறது எனலாம். ஒளியானது ஒரு வினாடிக்கு 3-இலட்சம் கி.மீ தூரம் பயணிக்கும் இப்படி ஒளி ஆனது ஒரு வருடஙத்தி பயணிக்கூடிய தூரத்தைதான் ஒரு ஒளி ஆண்டு என குறிப்பிடுகிறார்கள்.
இரவில் நீங்கள் ஒரு நட்சத்திரத்தை பார்க்கிறீர்கள் அப்பொழுது அந்த சமயத்தில் அந்த நட்சத்திரம் மிளிரும் ஆனால் உண்மையில் அந்த நட்சத்திரம் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிர்ந்திருக்கும் அப்படி ஒளிரும்பொழுது அதன் ஒளி பல ஆண்டுகள் கடந்து வருவதால் நம் கண்களுக்கு தற்போது ஒளிர்வதுபோல் தோன்றும்.
இதற்கு மற்றொரு எடுத்துகாட்டு சூரிய ஒளி பூமியை அடைய 8-நிமிடங்கள் எடுத்துகொள்ளும் நாம் தற்போது பார்க்கும் சூரியனின் நிலை 8-நிமிடங்களுக்கு முன்பான நிலை ஆகும் ஏனெனில் ஒளி கடந்து வர 8 நிமிடங்கள் எடுத்துகொள்கிறது.தற்போது சூரியன் வெடித்து சிதறினால் கூட அதனை நம் கண்களால் பார்க்க 8 நிமிடங்கள் ஆகும் . நாம் விண்வெளியில் பார்க்கும் அனைத்தும்.இதை அடிப்படையாக கொண்டதுதான். இப்படி பல கோடி கி.மீ தொலைவில் ஒளி பயணிக்க பல காலம் ஆவதால் நம்மால் கோள்களை துள்ளியமாக ஆராய்வதில் சிக்கல் ஏற்பட்டுவது இதனை சரிசெய்ய உருவாக்கபட்டதுதான் இந்த வெப் டெலஸ்கோப். இதனால் நம்மால் பல கிரகங்களை குறைவான காலத்தில் படம்பிடிக்க முடியும். இது மட்டுமல்லாமல் வேற்றுகிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா ஏலியன் இருக்கா இல்லைய என்பதையும் கண்டறிய முடியும். இந்த தொலைநோக்கியின் முதல் படம் 6- மாதங்களுக்கு பிறகு வெளியிடம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
Related: Timetravel சாத்தியமா