வணக்கம்! இந்த பதிவில் மனித வரலாற்றில் விண்வெளி பற்றிய ஆராய்ச்சியில் அடுத்த அத்தியாயத்திற்கு எடுத்துசெல்லும் வகையில் நாசாவானது சூரியனை ஆராயும் வகையில் ஒரு விண்கலத்தை அனுப்பி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் எப்படி அந்த விண்கலம் சூரியனின் வெப்பநிலையை தாங்கியது என்பது பற்றி இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
பார்கர் விண்கலம் parker solar probe
நமது பூமியில் இருந்து கிட்டதட்ட 15 கோடி கி.மீ தொலைவில இருக்கும் நமது நட்சத்திரமான சூரியன் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு விண்கலத்தை நாசா விஞ்ஞானிகளால் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து ஏவபட்டது, இதுதான் சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் அதாவது ஒரு கோடி கி.மீ தொலைவில் இந்த விண்கலம் சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது அதாவது புதன் கிரகத்தை விட 10 மடங்கு சூரியனுக்கு மிக அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டிசம்பர் மாதம் மாதம் 2018-ஆம் ஆண்டு ஏவபட்ட நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (parker solar probe) கடந்த ஏப்ரலில் சூரியனின்வளிமண்டலத்தை அடைந்த முதல் விண்கலம் என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
நமது சூரிய மண்டலத்தை பற்றிய அடிப்படை கேள்விகளுக்கான பதிலை கண்டறிய 60 ஆண்டுகளுக்கு முன்பு நாசாவானது சூரியனை ஆய்வு செய்ய ஒரு திட்டத்தை தீட்டியதுத, அந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கபட்டதுதான் இந்த parker solar probe இது சூரியன் பற்றிய முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் நாசாஅறிவித்தது.
பார்க்கர் சோலார் ப்ரோப் ‘சூரியனுக்கு அருகில் செல்வது’ என்பது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் ஜுர்புச்சென் ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். “இந்த மைல்கல் நமது சூரியனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்ய மற்றும் நமது சொந்த நட்சத்திரத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் உள்ள நட்சத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் இது பயன்படும்.
பார்க்கர் சோலார் ப்ரோப் 2018 இல் ஏவப்பட்டதிலிருந்து, அது சூரியனை வெள்ளி கிரகத்துடன் சேரந்து சுற்றி வருகிறது மற்றும் ஒவ்வொரு சுழற்சியின்போதும் வெள்ளி கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையால் வேகமாக சூரியனுக்கு அருகில் செல்லும். ஏப்ரல் 28 அன்று, இந்த விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று சூரியனின் கரோனா எனப்படும் வளிமண்டலத்தை அடைந்தது. இந்த சூரியனின் வளிமண்டலம் எனலாம் இந்த பகுதி சூரியனின் உட்பகுதியை விட அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும் என்பது குறிப்படதக்கது.
Harvard-Smithsonian Centre for Astrophysics (CfA) இன் ஆராய்ச்சியாளர்கள், சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து துகள்களை சேகரிக்கும் கருவியை உருவாக்கி அதனை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த விண்கலம் ஐந்து மணி நேரம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்ததுள்ளது இருப்பினும் இந்த விண்கலத்திற்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த விண்கலத்தில் சூரியனின் தீவிர வெப்பநிலையை எதிர்க்க, டங்ஸ்டன், நியோபியம், மாலிப்டினம் மற்றும் சபையர் போன்ற வெப்பத்தைத் தாங்கும் இரசாயனங்களால் ஆன உபகரணங்கள் பயன்படுத்தபட்டுள்ளன .
நோக்கம்
இந்த முழு பணியின் குறிக்கோள் சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் அறிந்துகொள்வது என்பதாகும் அதைச் செய்வதற்கான ஒரே வழி, விண்கலம் சூரியனின் வெளிப்புற எல்லையைக் கடப்பதுதான், இதை விஞ்ஞானிகள் ஆல்ஃப்வென் புள்ளி என்று அழைக்கிறார்கள். எனவே, இந்த முக்கியமான கட்டத்தை நாம் கடந்துவிட்டோமா இல்லையா என்பதை அளவிடுவதே இந்த பணியின் அடிப்படை பகுதியாகும். இது மட்டுமல்லாமல் சூரியனில் இருந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் சூரிய புயல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது என்பதை பற்றியும் நம்மால் ஆய்வு செய்யமுடியும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
Related: சூரிய புயல் பூமியை அழிக்குமா???
எப்படி வெப்பத்தை தாங்கியது
சூரியனின் உட்பகுதி கிட்டதட்ட 6000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டுள்ளது ஆனால் சூரியனின் வெளிப்பகுதியான கொரோனா பல இலட்சம் டிகிரி செல்சியஸ் இருக்கும். இது எந்த அளவுக்கு அதிகமென்றால் நமது பூமியில் பதிவு செய்யபட்ட உட்சபட்ச வெப்பநிலையே 60 டிகிரி செல்சியஸ்தான் அப்போது பெரும்பாலான வீடுகள் கார்கள் தீப்பிடிக்க ஆரம்பித்து விட்டன.
இதை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாக சூரியனில் வெப்பம் வீசும் இதை இந்த விண்கலம் தாங்குவதற்க்காக பல்வேறுகட்ட சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டன, இறுதியாக சூரியனின் வெப்பத்தை தாங்கும் கவையில் 14-செ.மீ அகலம் கொண்ட கார்பன் காம்போசிட்டால் இதன் வெளிப்பகுதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என்னதான் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் செயற்கைகோளின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியற்கு மேல் செல்லாத வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த ஒரு விண்கலமானது மணிக்கு 5 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து சூரியனை 6-வருடங்கள் 24 முறை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் இன்னும் வரக்கூடிய நாட்களில் இந்த பார்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
இந்த விண்கலம் ஏப்ரல் மாதமே சூரியனுக்கு அருகில் சென்றாலும் இப்போதுதான் நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
source:NASA